பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)
உணர்வால் வழிபடுகிறேன்
அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த ஒரு 'தனி மனிதா' மட்டும் அல்ல. உங்களுக்குள் வாழ்கின்ற ஒரு 'தனி மனித நிலை'யுங்கூட ! தனி மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனர்களே!
கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், இராஜ யோகம் என எந்தப் பாதையில் நீங்கள் சென்றாலும், அர்ஜுனனது சந்தேகங்களை நீங்களும் ஒருநாள் நிச்சயம் எதிர்கொள்வீர்கள். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்காக அளித்திட்ட இந்தத் தீர்வுகளை எல்லாம், அர்ஜுனனைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்விற்கான அடித்தளமாகத் தேர்ந்தெடுந்து வாழ்ந்தீர்களென்றால் ... உறுதியாகச் சொல்கிறேன் ... அர்ஜுனனுக்கு கிடைத்த விச்வ ரூப தரிசனத்தை நீங்களும் தரிசிப்பீர்கள். உங்கள் வாழ்வின் தேரோட்டியாக பகவானே அமர்ந்திருப்பார். இதை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
என்னுடைய வாழ்வில் பகவத்கீதை மாபெரும் பங்காற்றியுள்ளது. என்னுள் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. 'இறைவன் வாழ்கிறார்' என்பதை எனக்கு அனுபவமாக உணர்த்தியுள்ளது.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் பகவத்கீதையை, பாடப் புத்தகங்களைப் படித்ததை விடவும் அதிகமாகப் படித்தேன் ... பரீட்சை நாட்களில்கூட பகவத்கீதையைத்தான் முதலில் படித்தேன். உறங்கும் வரை கீதையைப் படித்துவிட்டு, காலையில் கண்விழித்தவுடன் மீண்டும் எடுத்துப் படித்தேன். என்னுடைய இலக்கை அடைவதற்கு ஸ்திரமான ஆணிவேராக பகவத்கீதை இருந்தது என்றால் அது மிகையாகாது. பகவத்கீதைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்ம பலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைகளால் இயலவில்லை ... உணர்வால் வழிபடுகிறேன்.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
விளக்கவுரை – THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
உங்கள் அடிமைத்தன்மைகளிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு
ஸ்ரீமத் பகவத் கீதை
(ஜீவன்முக்த விஞ்ஞானம்)