பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)
பகுதி 1: பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17
உணர்வால் வழிபடுகிறேன்
அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த ஒரு 'தனி மனிதன்' மட்டும் அல்ல. உங்களுக்குள் வாழ்கின்ற ஒரு 'தனி மனித நிலை'யும்கூட! தனி மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனர்களே!
கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், இராஜ யோகம் என எந்தப் பாதையில் நீங்கள் சென்றாலும், அர்ஜுனனது சந்தேகங்களை நீங்களும் ஒருநாள் நிச்சயம் எதிர்கொள்வீர்கள். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்காக அளித்திட்ட இந்தத் தீர்வுகளை எல்லாம், அர்ஜுனனைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்விற்கான அடித்தளமாகத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தீர்களென்றால் ... உறுதியாகச் சொல்கிறேன் ... அர்ஜுனனுக்கு கிடைத்த விச்வ ரூப தரிசனத்தை நீங்களும் தரிசிப்பீர்கள். உங்கள் வாழ்வின் தேரோட்டியாக பகவானே அமர்ந்திருப்பார். இதை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
என்னுடைய வாழ்வில் பகவத் கீதை மாபெரும் பங்காற்றியுள்ளது. என்னுள் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. 'இறைவன் வாழ்கிறார்' என்பதை எனக்கு அனுபவமாக உணர்த்தியுள்ளது.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் பகவத் கீதையை, பாடப் புத்தகங்களைப் படித்ததை விடவும் அதிகமாகப் படித்தேன் ... பரீட்சை நாட்களில்கூட பகவத் கீதையைத்தான் முதலில் படித்தேன். உறங்கும் வரை கீதையைப் படித்துவிட்டு, காலையில் கண்விழித்தவுடன் மீண்டும் எடுத்துப் படித்தேன். என்னுடைய இலக்கை அடைவதற்கு ஸ்திரமான ஆணிவேராக பகவத் கீதை இருந்தது என்றால் அது மிகையாகாது. பகவத் கீதைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
பகவத் கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்ம பலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைகளால் இயலவில்லை ... உணர்வால் வழிபடுகிறேன்.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
பகவத் கீதை - கடவுளின் கீதம் வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய ஆங்கில பகவத் கீதை தியான சத்சங்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தொகுத்து உங்கள் கைகளில் தவழவிட்டிருக்கிறோம்.
விளக்கவுரை - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
உங்கள் தொடர் வெற்றிக்கான உன்னத தீர்வு
ஜீவன்முக்த விஞ்ஞானம்
சிரத்தா த்ரய விபாக யோகம் அத்தியாயம் - 17
உலகம் முழுவதிலும் உள்ள தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் அனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத் கீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.
உலகம் முழுவதிலும் உள்ள தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
அன்பான வாசகர்களே.
மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.
உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சக்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.
எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைகூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.
- இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் ஹிந்து பல்கலைகழகம்.
இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் முன் இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் பீடம் பொறுப்பாகாது.
பக்கங்கள்: 216
முதல் பதிப்பு: ஜனவரி, 2019 -சுத்தாத்வைதத்தை வெளிப்படுத்தும் வருடம்
பிரதிகள்: 1000
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்த புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியிட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும் தியான பீடத்தின் கருணை நோக்கச் சேவையாகச் சென்றடைகிறது.
ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை
ஸ்ம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.
ஆனால், ஸம்ஸ்க்ரு'த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.
ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.
| வகை | 1 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
| எழுத்து | ||||
| க | கடவுள் (ka) | அக்கா(kka) | கங்கை (ga) | கடம் (gha) |
| ச | சரம் (cha) | சச்சரவு(chcha) | ஜூடி (ja) | மஜ்ஜை (jha) |
| ட | பட்டம் (ta) | பட்டம்(tta) | படம் (da) | டம்டம் (dha) |
| த | தங்கை(tha) | தாத்தா(ththa) | தானம் (da) | தர்மம் (dha) |
| ப | பசு (pa) | அப்பா(pha) | பம்பரம் (ba) | பந்தம் (bha) |
| ச், | ச'ரணாகதி |
ஸம்ஸ்க்ரு'தம் அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்மீஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.
ஸமீஸ்க்ரு'தத்தில் மூன்று வகை 'ஸ்'க்கள் உண்டு.
- ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.
ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.
க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.
ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.
ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு'தத்தில்' ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.
ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.
தமிழில் 'ந,ன.ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரு'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பகவத் கீதை ஒரு அறிமுகம்
உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு
இது உன்னதமான ஹிந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ரு'தத்தில் சீருதி (Sruti) என்பார்கள். சீர்ருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.
பகவத் கீதையைப்பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு தனிப்பட்ட இருக்கின்றன. ஆனால், கீதை, ஹிந்து மத கிரிறை கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.
ஹிந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளிடையே அபிவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.
புனித நூலான ச்ரூதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்பணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!
இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. சத்தியத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.
கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த கிரந்தமோ அல்லது கிரந்தத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.
மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்
பரதன் வம்சாவளியினராலும் ஆளப்பட்ட தேசமே பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம். அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.
இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.
ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.
மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவர், சாகுந்தருவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை.
தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் செய்ய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.
கதைக்குள் ஒரு சின்ன கதை
குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். குரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கா்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.
அவ்வாறு நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் காணன் துரியோதனனுடன் இணைந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவா்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.
யுதிஷ்டிரா், தா்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி முலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோகனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.
இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.
பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரர் அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.
யுதிஷ்டிரா், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சுகுனி வஞ்சகமான முறையில் பாண்டவாகளைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.
துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ் ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவாகம் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.
ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.
இப்பொழுது 'பாரத' என்றழைக்கப்படும் நமது பாரததேசத்தின் அனைத்து அரசர்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவருடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடத் தயாரானார்கள்.
கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவா் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தோ்ந்தெடுத்துக்கொள்ளலாம், ' என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.
ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன்
கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த பின்னர், தமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்கான் என்றும் நினைத்தார்!
பாரதத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருகேஷத்ர போர்க்களத்தில், இரு சேனைகளுகும் கூடின.
அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினா்தான். ஆனால், ஒருவருக்கொருவா எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.
கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினா்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.
மனிதனாய் பிறந்த கடவுளுக்கும்
கடவளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை
குருகேஷத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்கான் பகவத்தீதை.
கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அழிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.
உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல. அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல
வேண்டியதன் தேவையைப் பற்றியும் விளக்குகிறது.
கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸ்ஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு மன்னருக்குப் போர்க்களத்தில் நடப்பவற்றைத் தெரிவித்தார்.
ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸலஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.
போரில் எல்லா கௌரவ இளவரசர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மர், துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.
அர்ஜுணனைக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.
ஸம்ஸ்க்ரு தத்தில் அதை 'நர-நாராயண' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் ஒவ்வொருவா மனக்கிலும் உள்ளவைகான்.
கிருஷ்ணரின் பதில்கள் காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேரமிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு லத்யத்தை ஆதாரமாகக்கொண்டதாக இருந்ததோ, அதே அளவுக்கு இன்றும் ஆழமான ஸத்யமாக உள்ளது.
பகவக்கதை, ஐவன்முக்கிக்கான வரைபடம்!
வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்: மஹாபாரதப் போர் என்பது வேறு ஒன்றும் அல்ல, ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டம்கான்.
நேர்மறை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம்; எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவரசர்கள்' என்று சொல்லலாம்.
குருக்கூடிக்கப் போர்க்களம் என்பது நமது மனித உடல்: அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ரூ.ருகுரு.
தனிமனித விழிப்புணர்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய கடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு களபதிகளும் இருக்கின்றனர்.
பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமூதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவா்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.
காணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.
இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '
நடைமுறை மாபுகளை எதிர்ப்பதன் மூலமே பெற்றோராலும் சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் ருானப் பாதையைத் கேர்ந்தெடுப்பவர்கள். ஸ்ரீயாஸிகளாக சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.
பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.
துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து
அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற அசிரியா்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இங்குதான் ஜீஞாகுகுளுவாணவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.
கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஐக்குருகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அபைவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஐருக்குரு தெள்ளத் தெளிவாக உணரச் செய்கிறார்.
இறுதியாக நாம், துரியோதன்னை அதாவது நம்முடைய அவரங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அணங்கார மனப்பாங்கைக் கரைக்க இருந ஜ்ஞார குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞாந குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அரைங்காரம், நாம் ஜ்ஞார குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.
நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இகில், நூற்றிப் பக்கு மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.
பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆழ்ந்த உட்பொருளைக்
கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஒட்டங்களையும் குறிக்கிறது.
அவற்றுள் குரணீர்த்ரியங்கள் என்பவை சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணர்வு'களைக் குறிக்கின்றன.
ஐந்து கர்வேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் ஆகிய 'செயல்புரியும் புலனுணா்வு'களைக் குறிக்கின்றன.
எட்டுவித எண்ண ஓட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
'தன்னை உணர்தல்' எனப்படும் ஆதீம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பதினெட்டும் விடப்பட வேண்டும்.
மஹாபாரதம் ஒரு இதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மறை ஸ்ட்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.
இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத்தை, ஞானமடைதலுக்கான கையேடு!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜ்ஞார ஜ்ருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. குரூருநரின் ஸ்த்ய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.
பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.
பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ரூராத குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸா், இரமண மஹரிஷி அகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.
பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.
கீதையின் ஒவ்வொரு ல்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே லத்குருநாதா, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.
என்றென்றும் வாழும் மஹாபாரதம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குகள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமானஉள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.
சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரு ஆ ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!
முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!