KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தைரியசாலி அதிர்ஷ்டசாலி!Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தைரியசாலி அதிர்ஷ்டசாலி!

  • பயம் என்ற ஒரு மனப்புண்தான் துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின் சாதாரண அம்சத்தைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும்.
  • பயத்தை விட்டொழித்து விட்டு தைரியமாக வாழ்க்கையை அணுக ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பயமுறுத்தாது. 'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே! எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா?' என்ற ஏக்கம் இருக்காது.
  • பயத்திலிருந்து மனதைத் தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.
  • மனதின் பயமும், உழைப்புக் குறைவும்தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்புத் தீயை மூட்டுகிறது.
  • அதே செயல்கள்தான் உங்களால் ஜீரணிக்க முடியாத - சாதாரண வாழ்க்கை அம்சங்களைச் சுற்றித் துக்கப் புகையை கிளப்பி துரதிஷ்டமாகக் காண்பிக்கிறது.
  • துரதிர்ஷ்டம் என்பது ஒருவரால் ஜீரணிக்க முடியாத சாதாரண வாழ்க்கை அம்சங்களே!
  • அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும், துரதிர்ஷ்டத்தை நினைத்துத் துக்கப்படுவதும் புத்திசாலி செய்யும் காரியம் அல்ல.
  • புத்திசாலி புத்தியைப் பயன்படுத்தி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் புகுந்து

ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்ட புதுத் தெம்போடு வெளியே வருவான்.

  • தைரியமாக சுறுசுறுப்போடு வாழ்க்கையை அணுகுங்கள். சாதாரண வாழ்க்கை அம்சங்கள் அதிர்ஷ்டமாக மாறும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பலராலும் பிரமிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தின் சூட்சுமம் இதுதான்.
  • வாழ்வில் கொட்டிக் கிடக்கும் அதிர்ஷ்டங்களை உங்களுக்கு சொந்தமாக்குங்கள் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.