ச்ஞீடி ண்டச்டி
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்... மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்... மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...
ரமண மகரிஷி ரொம்ப அருமையாக அண்ணாமலையானைப் பார்த்து வாழ்த்துவார்,
'என்போலும் தீனரை இன்புறக் காத்து
நீ எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாச்சலா'
- என்னைப் போன்ற தீனர்களை எல்லாம் இன்புற காக்கின்ற நீ, இதேபோல் எல்லாக் காலத்திலும் காத்து, எந்நாளும் வாழ்ந்து அருள் என்று!
இதே வார்த்தையைத்தான் ஆதிசைவத்தை நோக்கியும் நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றேன். என்போலும் தீனரை நித்யானந்தத்தில் நிலைபெறச்செய்த சைவ சத்தியமே, ஆதி சிவமே, உலகமெலாம் நீ பொங்கிப் பெருக, மேன்மையைத் தரும் இந்த சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
வழிவழியாய் வந்த சைவத்தை மீண்டும் உயிர்ப்பித்து ஸ்தாபனம் செய்த சர்வஞ்ஞபீடாரூடரான குறான சம்பந்த பெருந்தகையாலும், அப்பர் பெருமான் எனப்படும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும், சுந்தரராலும், மாணிக்கவாச கராலும், நாயன்மார்களாலும் நெறிபடுத்தப்பட்டு, வாழ்வியல் முறையாக வாழ்ந்து காட்டப்பட்ட, பெருமானோடு இரண்டற கலக்கும், சிவோஹம் எனும் நிலையில் நித்ய ஆனந்தமாய் நிலைபெற்று இருக்கும் இந்த மிகப்பெரிய வாழ்வியல் ஞானம் சொல்லவும் கேட்கவும் மிகுந்த புண்ணியத்தைத் தருவது, சொல்லவும் கேட்கவும் வாழ்க்கையை மேம்படுத்துவது.
அதனால்தான் 'மேன்மை கொள்' என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்கள். மேன்மை கொள் என்றால் சொன்னவா்கள், கேட்டவர்கள், எதிர்காலத்தில் கேட்கப்போகிறவர்கள், இவர்கள் எல்லோருக்கும் மேன்மையை கொடுப்பது, மேன்மையில் அவர்களை நிறுத்துவது!
மேன்மை கொள் சைவநீத விளங்குக உலகமெலாம்
வான்முகில் வழாது பெய்க மதிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!
அன்பான வாசகா்களே,
மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவுமதான்.
உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சத்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.
எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரி செய்து வெளியிட உதவியாக இருக்கும்.
- இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா பதிப்பகம்.
ஐ. ஆதிசைவம் ஓர் அறிமுகம்
ஐஐ. சரியை
ஐஐஐ. க்ரியை
- 1. சுந்தரர்
- 2. திருநாவுக்கரசா்
ஐங.
- ங. ஞானம் மஹாதேவ இரகசியம்
ஙஐ. வாழ்வியல் நெறி