KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசா் துருபதனின் மகன்
சி' கண்டி: சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதானன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி பேர்ஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்: யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸ்ஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்

கௌரவர் சேனை: -

ஸ்ஞ்ஜயன்: அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்: கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்: கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்: பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்: துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க் 'ருபா்: கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்: அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்தி: பகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்: கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்: கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூத்தனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்: கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்: எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்: மேலான புருஷன்
மதுஸூதனன்: மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்: லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்: 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்: யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்: வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்: விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு
ஜகந்நிவாஸன்: ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்: ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன்: இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்: பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டி: கிரீடம் தரித்தவர்
குடாகேசான்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்கன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்