KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/சக்தி சாகர் தியானம் (சக்திக் கடல்)Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

சக்தி சாகர் தியானம் (சக்திக் கடல்)

குணப்படுத்தும் சக்கரம்விசுத்தி
சக்கரம் உள்ள இடம்தொண்டைப் பகுதி
சக்கரத்தைப் பூட்டுவனஒப்பிடுதலும்,<br>பொறாமையும்
பூட்டைத் திறப்பதுஉங்கள்<br>தனித்தன்மையை<br>உணர்கல்
தியானம் பெறப்பட்டதுஜென்<br>பௌத்தத்திலிருந்து
காலம்30 நீமிடங்கள்

நம்மிடம் மூன்று அடுக்கு சக்தி இருப்பது, நம்மில் பலருக்கும் தெரியாது.

சாதாரண அடுக்கு, அவசர அடுக்கு, அடுத்த அடுக்கு புத்திசாலித்தனம்.

நமது சாதாரண வாழ்வில், நாம் முதல் அடுக்கிலுள்ள சக்தியையே பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவு சக்தி கிடைத்துவிட்டாலே நமக்கு மகிம்ச்சிதான்!

அபூர்வமாகவே நாம் இரண்டாவது அடுக்குக்கு உந்தப்படுகிறோம்.

ஆனால் மூன்றாவது அடுக்கை நாம் பயன்படுத்துவதே இல்லை. அது இருப்பதன் கவனம்கூட நமக்கு இல்லை.

புத்திசாலித்தனம் என்பது, நமக்குக் கிடைக்கக்கூடிய உயர்ந்தபட்ச சக்திச் செயல்பாடு.

சக்தி சாகர் தியானத்தின்போது, புத்திசாலித்தனத்தின் அடிப்படை ஆதாரங்களை அடைத்திருக்கும் அடைப்புகளை நீங்கள் தகர்க்க முடியும்.

சக்தி சாகர் தியானத்திற்கான குறிப்புகள் :

வாழ்க்கையே ஓர் ஒட்டப் பந்தயம் ஆகிவிட்டது. மற்றவர்களை முந்துவது போய், இப்போது, உங்களையே நீங்கள் முந்தப் போகிறீர்கள்!

உங்களது சுயத்தின் எதிர்மறை அம்சங்களைத் தாண்டிச் சென்று வெற்றி பெறப் போகிறீர்கள்.

இந்த 30 நிமிடத் தியானம், 20 நிமிடம், 10 நிமிடம் என இரு பகுதிகளைக் கொண்டது.

முதலில், கண்களை மூடியபடி நின்று கொள்ளுங்கள். உங்களது தொண்டைப் பகுதியில் உள்ள விசுத்தி சக்கரத்தின் மீது உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.

இனி, (ஜாக்கிங்) - கால் மாற்றி கால் மாற்றி, மெதுவாக ஆரம்பித்துப் பின் வேகத்தைக் கூட்டலாம்.

மெது மெதுவாக அதிகரிக்க வேண்டும்.

ஏனென்றால், வேகத்தைக் கூட்டியபிறகு, அதைக் குறைக்கக்கூடாது! ஆகவே, வேகத்தைக் கூட்டிக் கொண்டே போகவும்.

களைப்பாக இருப்பதாக மனம் சொல்லும். மனத்தின் பேச்சைக் கேதீர்கள்! உங்களுடைய எல்லையைத் தாண்டிவிடுங்கள். உங்களிடம், இதுவரை பயன்படுத்தாத மிக அதிக சக்தி உள்ளது.

முழு மூச்சோடு இந்தத் தியானத்தைச் செய்ய முயற்படும்போது, மேல்நிலைச் சக்தி அடுக்கு திறந்து கொள்வதைக் காண்பீர்கள்.

நிற்குமிடத்தில் ஓடிக் கொண்டே இருங்கள்.

சக்தி மட்டம் உயரட்டும் !

20ஆவது நிமிட முடிவில் நிறுத்தி விடுங்கள்.

அடுத்த 10 நிமிடங்கள், நீங்கள் இருக்குமிடத்தில் அமர்ந்து அமைதியாக இருங்கள்.

உங்கள் கவனம் முழுவதும் விசுத்தி சக்கரத்தின் மீது இருக்கட்டும். இந்தக் கட்டத்தில், முழுச் சக்தியை நீங்கள் திரட்டிக் கொள்வீர்கள்.

பட்டு, தங்கம், வைரம் போன்றவை, சக்தி சேமிப்பிற்கு மிகச் சிறந்த கிடங்குகள். இந்தத் தியானத்தின்போது கழுத்தில் இவற்றை அணிந்து கொண்டால், சக்தியை நீண்ட நேரம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

ஆறாவது நாள்