Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
யார் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தராவார்கள்?
- 18-ல் காதல் 20-ல் எதிர்காலக் கனவு 25-ல் திருமணம் 30-ல் குடும்பச் சுமை 40-ல் வயிற்றுக் கோளாறும், மனச்சோர்வும் 45-ல் В.Р. / டயாபடீஸ் 50-ல் முட்டி வலி...
- என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்து விட்டது. திருமணத்திற்குபின் ஒருநாள் தானும் எல்லாப் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும் இளைஞர்கள் அரிதாகி விட்டார்கள்.
தானும் சிக்கித் தவிக்க 100% வாய்ப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணராத இளைஞர்கள்தான் எதிர்காலத்தில், சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.
ஊடல்
- 'உறவுகளுக்கிடையே ஊடல் அவசியம் இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் உற்சாகமாக வாழ்த் தெரியாதவா்கள்'.
- ஆழ்மன வெறுப்பின் முன்னோட்டமே 'ஊடல்'.
- ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும்வரை மனித உறவில் ஊடல் புகைபோல் கசிந்து கொண்டிருக்கும்.
- ஈர்ப்பு மறைந்த அடுத்த கணமே ஆழ்மன வெறுப்பு வெடிக்கும்.
- ஆழ்மன வெறுப்பு உருவானதற்குக் காரணம் -ஆழ்மனத்தின் மாயக்கருத்துக்களால் ஆன, வாழ்வு பற்றிய கனவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே
இருக்கும் பொருத்தமின்மையே!
- எல்லா ஊடல்களும் எல்லா கிளர்ச்சிகளும் எல்லாத் தற்காலிக சந்தோஷங்களும் நிஜ உலகில் கனவைக் குடிப்பவனுக்கு மட்டுமே நிகழ்வது.
- அகங்காரம் என்பது தாறுமாறான கருத்துக்களின் தொகுப்பு. அகங்காரம் என்பது அதீத கற்பனைகளின் அதிபதி.
- அகங்காரம் மறைய, ஊடல்கள் மறையும், உற்சாகம் பொங்கும், தேனினும் இனிய மனித வாழ்வு கனியும்.