KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/யதார்த்தவாதியாகுங்கள்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

யதார்த்தவாதியாகுங்கள்

  • 1. நான் செய்தால் சரி,
  • நீ செய்தால் தவறு
  • முதல் வகை. இது அகங்காரத்தின் உச்சம்.
  • 2. நண்பன் செய்தால் சரி. எதிரி செய்தால் தவறு - இரண்டாம் வகை. இவர்கள் சூழ்நிலைக் கைதிகள்.
  • 3. நண்பன் தவறு செய்தாலும் தவறு தவறுதான். எதிரி நல்லது செய்தாலும் அது நல்லதே, சரியே! -மூன்றாம் வகை. இவர்கள் நடுநிலைவாதிகள். தைரியசாலிகள்.

நீங்கள் எந்த வகை ?

  • 4. இது தவறு, இது சரி எனும் சிறுவட்டங்களைத் தாண்டியவரே யதார்த்தவாதி. தவறு, சரி, கடந்தவருக்கு நண்பரும் எதிரியும் ஒன்றே. யதார்த்தவாதி 'தவறு' எனும் சப்பைக் காரணங்காட்டி அன்பெனும் வெகுமதிகளைத் தவறவிடமாட்டார். எந்த வகையாக இருந்தாலும் சரி, தாண்டிச் செல்லுங்கள்.

தவறு, சரி என்ற இரும்பு கரங்கள் கொண்டு 'அன்பு' எனும் மலரை நசுக்காதீர்கள். யதார்த்தத்தோடு வாழ்க்கையையும், மனிதர்களையும் அணுகுங்கள், வாழ்வு கொண்டாட்டமாகும்.

பயம்

  • உயிர்சக்தியை நொடிக்குள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள் வல்லமை கொண்டது பயம்.
  • மனிதன் தீங்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இறைவனால் மனிதனுக்குத் தரப்பட்ட ஒரு பரிசு - பயம்.
  • மனித குலம் இந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் பயமும் ஒன்று.
  • எப்படி உப்பு உணவில் கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காதோ அப்படித்தான் பயம் கூடினாலும், குறைந்தாலும் வாழ்வு நரகம்தான்.
    • பய உணர்வை சரியாகப் பயன்படுத்த மனிதனுக்கு அனுபவ ஞானம் தேவை. அனுபவ ஞானம் இல்லாவிட்டால் பயம் நம்மையே அழித்து விடும்.

உங்களின் கண்ணை மறைப்பது

ஆஹா ... இது கானல் நீர்! அதோ! அங்கே சோலைவனம் இருப்பதுபோல் நம் கண்களுக்கு தெரிகின்றதே, அது சோலைவனமே அல்ல. அதுவும் பாலைவனத்தின் ஓர் பகுதிதான். நம் தாகத்தைத் தீரப்பது நிச்சயமாக அங்கே இல்லை என்று தெள்ளத் தெளிவாக ஏற்கனவே தெரிந்து கொண்ட ஒருவன் கானல் நீர் வரை சென்று ஏமாறவே மாட்டான்.

மோகம்,

வேகம்,

புகழ்,

பணம் - என்று ஓடும் ஒருவனுக்கு, தன் மோகத்தைத் தீர்ப்பது அங்கே இல்லை என்று தெரிந்து விட்டால் ஓடமாட்டான்.

திடீரென்று எல்லோருக்குமே இந்த உண்மை புரிந்துவிட்டால் மொத்த சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

தேடுவது

தேடும் இடத்தில் இல்லை என்ற உண்மையை யதேச்சையாகப் படித்துவிட்டால்கூட புரிந்துகொள்ளவிடாதபடி பார்த்துக் கொள்ளும் ஒன்றுதான் மாயா சக்தி.