KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/87. வேதனையை தாண்டி வாருங்கள் ...Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

87. வேதனையை தாண்டி வாருங்கள் ...

தேவனஹல்லி ASPல் கிடைத்த ஓய்வு நேரத்தில் சில வாழ்வியல் ஆலோசனைக்காக என்னைச் சந்தித்தார்கள்.

மேனேஜராகப் பணிபுரியும் அந்த நபர், வங்கியில் ''திருமணமாகிப் பத்து வருடமாகிறது. இன்னும் எனக்குக் குழந்தையில்லை. என்னுடைய கவலையெல்லாம் எனக் கொரு குழந்தையில்லையே என்பது தான்...'' என ஆரம்பித்து தன்னுடைய மற்ற மனப் பிரச்சினைகளைப் பகிர்ந்து தெளிந்து விடைபெற்றார்.

சிறிது நேரத்திற்குப் பின் அதே வங்கியில் கிளார்க்காக பணிபுரிபவர் வந்தார். "திருமணமாகிப் பத்து வருடம் முடிந்து விட்டது. பத்து வருடத்திற்குள் ஆறு குழந்தைகள். ஒன்று கூட சொல்பேச்சு கேட்பதில்லை ... '' என ஆரம்பித்தார்.

இருந்தாலும் வேதனை. இல்லாவிட்டாலும் வேதனை. எல்லோரும், எல்லா வாழ்க்கைக் கட்டத்திலும் சந்திக்கும் பிரச்சினை இது. கொஞ்சம் கவனத்தோடு வாழ்வை அலசிப் பாருங்கள். இது உண்மை என்பது புரிய வரும்.

சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் வேதனை தொடர்கிறது. முதலில் தாண்டப்பட வேண்டியது வேதனை. இதையடுத்து தான் சாதனை பற்றியே யோசிக்க வேண்டும்.