KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/90. இன்ப சாதனை செய்யுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

90. இன்ப சாதனை செய்யுங்கள்

ப்ரசன்ஜித் புத்தருடைய தந்தையின் நண்பர். அவர் புத்தரை சந்தித்த போது ... புத்தரிடம் "நாடோடி பிச்சைக்காரன்போல் வாழும் வாழ்வை விட்டு அரண்மனைக்குச் செல்" என்று வற்புறுத்தினார்.

புத்தர், "உண்மையைச் சொல்லுங்கள். அந்த அரச வாழ்க்கை ஒரேயொரு நாளாவது உங்களுக்கு ஆனந்தத்தைத் தந்ததா?''எனக் கேட்டவுடனே... ப்ரசன்ஜீத் தலைகுனிந்தார். சில நிமிடங்களுக்குப் பேசவேயில்லை.

்துன்பப்படுகிறோம்' எனத் தெரிந்தும் துன்பப்படுவது, அதைப் பூசிமெழுகுவது… என்ற இரண்டும்தான், மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. துன்பத்தை துடைத்தெறிந்து இன்ப சாதனை செய்யுங்கள்.