KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/முழுமைப்படுத்துதல் - முறண்பாடற்ற வாழ்க்கைக்கான ஒரு நுட்பம்Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

முழுமைப்படுத்துதல் - முறண்பாடற்ற வாழ்க்கைக்கான ஒரு நுட்பம்

முழுமைப்படுத்துதல் என்றால் என்ன?

முழுமைப்படுத்தல் என்பதன் பொருள், கடந்த கால வாழ்க்கையின் நிகழ்வுகள், வார்த்தைகள், செயல்கள், நினைவுகள் - அவை உங்களுடையதாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடையதாக இருந்தாலும் சரி, அவற்றைப் பற்றிய தொக்கிய விளைவுகள் இல்லாமல் வாழ்வதும் செயல்புரிவதும்தான்.

'தொக்கிய விளைவுகள் இல்லாமல்' இருக்க வேண்டுமென்பதன் பொருள், நீங்கள் கடந்த காலத்தையே மறந்து விட வேண்டும் என்பது அல்ல. நீங்கள் முழுமையுடன், நிறைவுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் கடந்த கால நிகழ்வுகளையும் செயல்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்குள் வலியையோ, கோபத்தையோ, குற்றவுணர்ச்சியையோ ஏற்படுத்துவதற்குரிய சக்தியைப் பெற்றிருக்காது.

உங்களுக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் அபூர்ணத்துவத்தை உருவாக்காமல் இருப்பதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் ஒரே அழகான வழி ஒருங்குவித்தலே!