KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/உங்களின் உள்சக்திகளை விடுப்படுத்துங்கள்Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

உங்களின் உள்சக்திகளை விடுப்படுத்துங்கள்

வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டு, தீக்ஷையளிக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களின் நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும். மேலும், நீங்கள் இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு பயிற்சி செய்யுங்கள். இந்தக் நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீக்ஷை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும்.

வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ...

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களால் வாழும் அவதார சக்தியாக வழிபடப்படுபவர். ஹிந்து மதத்தின் மூத்த தலைமை அமைப்பான மஹாநிர்வாணிபீடத்தினுடைய மஹாமண்டலேஸ்வர் (ஆன்மிக தலைவா). THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்து கோயில்களையும், ஆஸ்ரமங்களையும் மற்றும் கிளைகளையும் நிறுவியுள்ளார்.

இந்தப் புத்தகம் தவத்திரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சர்வதேச பார்வையாளர்களுக்கு ஆற்றிய நித்ய சத்சங்கங்களிலிருந்து தொகுக்கப்பட்டது.

வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, இந்தப் புத்தகத்தில், எல்லா சமயங்களிலும் நமக்குக் கிடைக்கூக்கூடியதாக இருக்கும் நான்கு சக்திகளைப் பற்றிய சத்தியங்களை வெளிப்படுத்துகிறார். அதன் மூலம், 'உண்மையிலேயே ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது' என்றால் என்ன என்பது பற்றிய நம்முடைய புரிதலை புரட்சிகரமான முறையில் புதுமையாக்குகிறார். இது, நம்முடைய 'கனவு வாழ்க்கையை' வடிவமைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் நமக்குத் தருகிறது.

ஹிந்துமத ஆன்மிக சத்தியங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்து, அதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையிலும், நம் வாழ்வில் அதை நடைமுறைப்படுத்தும் வகையிலும் அருள்கிறார்.

வாருடைக்கம்

உங்களின் நான்கு உள் சக்திகள்
றான்கு உள்ளாற்றல்களை சுற்தியுங்கள்14
4 சக்திகளை விடுவித்தும் மேற்று என்ன நிகழ்திறது?15
தத்துவங்கள் - 4 சக்திகளுக்கான திரவுகோல்கள்16
வார்த்தைகளின் சக்தியை விடுவித்தல்
-ஒருங்குவித்தல்
உங்களின் வார்த்தைகளை உங்களின் வாழ்வு!18
ஒருங்குவித்தல் என்றால் என்ன?19
1நிறைகுவற்றப்படாத வார்த்தைகள் உங்களுக்குள்
தொக்கி நின்றுவிடும்20
1ஒருங்குவித்தல்
- உங்கள் வார்த்தைகளுக்குச் சக்தி கொடுத்திறது21
வார்த்தைகளை விழிப்புடன் உச்சரிக்க கூண்டும், ஒன் ?22
==============================================================================================================================================================================
நூல்கள் உருவாக்கிக் கொள்ளவாம்22
▪ வார்த்தைகளின் சக்தியைப் பற்றி விளக்கும் ஒரு சின்ன அதை23
கேட்டல், உங்கள் வாரத்தைகளுக்கு ஒருங்குவித்தலைக்
கொண்டு வரும்24
வன்னால் வார்த்தையை நிலைகேவற்ற முடியாவிட்டால்
வன்ன ஆகும் ?26
முழுமைப்படுத்துதல்
- முறண்பாடற்ற வாழ்க்கைக்கான ஒரு நூட்பம்27
1பூரணத்துவத்திற்கான இறண்டு நூட்பங்கள்:
1. தொடர்ந்து முழுமைப்படுத்திக் கொண்டேயிருப்பதற்கான நுட்பம்28
2. சுச்சிடன்று" தானாக்கே நிகழ்தின்ற நிலைவுணைவிற்கான நூட்பம்રૂત્વ
1 முழுமைமைப்படுத்துதல், உங்களுக்கு என்ன செய்கிறது?31
உங்கள் வார்த்தைகளுக்குப் பொழுப்பெடுத்துக் கொள்ளுதல்32
பிரகடனப்படுத்தலின் சக்தி32
சிற்தனை சுக்தியை விருவித்தல் -சிரத்தை
உங்களுடைய சிற்தனையை உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுடன் இசைவு செய்தல்:રૂડે
சிறத்தை என்றால் என்ன?રૂવ
உங்களுக்கு நான்கு அடையாளங்கள் உண்டுરૂવે
மூலமையாங்கு
- முறண்பாடுகளின் ஆதாரம்36
அசிரத்தை, உங்கள் சிற்தனை சக்தியை எப்படி விடுவிக்கும்?રૂક
உங்களால் அர்பனை செய்ய முடிந்தவை எல்லாமே உண்மைதானરૂજી
உங்கள் முக்குத்தையும் அகாங்காரத்தையும் ஒருவதிணைப்பதற்கான பயிற்சி40
உங்கள் சிற்தனையில் சிறத்தையை எடுத்து வாருங்கள42

உணர்வின் சக்தியை விடுபடுத்துதல் -பொறுப்பெடுத்தல்

பொறுப்பெடுத்தல் என்றால் என்ன?

நாமெல்கேலாரும் அறிந்த ஒரு சின்ன அதை

மூன்று வகையான மனிதர்கள்

காரணங்கள் VS பெரறுப்பெடுத்தல்

உங்களுடைய பிறம்மாண்டத்தன்மையே உங்களைப் பயமுறுத்துகிறது

பொறுப்பெடுத்தலை உங்களைப் பலசாலியாக்கும்

உணர்வின் விஞ்ஞானம்

உணர்வின் சுத்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்…

உங்கள் உணர்வின் சக்தியை விடுவித்தும் பயிற்சி முறை

வாழ்க்கையின் சக்தியை விடுவித்தல்
-வளப்படுத்துதல்
வாழ்கேவ ஒரு சுத்தி
வளப்படுத்துதல் என்றால் என்ன?52
அனைத்தும் உங்களின் அங்குகே
வளப்படுத்துதல், வல்லா சக்திகளுக்கும் உயிரளிக்கிறது
றான் ஒன் மற்றவர்களை வளப்படுத்த கவண்டும்?
மற்றவாகவைப் பலமிக்கவர்களாக்குங்கள்55
வளப்படுத்துதலைப்பற்றிய சில அத்தியங்கள்56
டங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்57
வாழ்க்கை சக்தியை விடுவிக்கும் நூப்பம57

றான்கு சக்திகளை உணர்தல் - டிரைவுப்படுத்துதலும் படைத்தலும்

உங்களை நிறைவுசெய்ய பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது

உங்கள் வாழ்வில் அதிசயங்களை நிகழ வையுங்கள்

விருப்பத்தை நிதர்சனமாக்குதல்

நிறைவுணர்விலிருந்து படைத்தலுக்கான நுட்பம்

அடுத்த படி… அக விழிப்புணர்வு முகாம்

உங்களின் நான்கு உள் சக்திகள்

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் முரண்பாடு, மன அழுத்தம், துக்கம் ஆகியவற்றை என்றென்றைக்கும் நீக்கிவிடுவதற்கான வழிமுறை ஒன்று இருக்கிறது என்று தெரியவந்தால்,

என்ன செய்வீர்கள் ?

கேளுங்கள்: நீங்கள் அதைச் செய்ய முடியும்!

உண்மையில், உங்களுடைய விருப்பங்களை நிதர்சனமாக்கிக்கொள்ளும் சக்தி உங்களிடம் இருக்கிறது. சுய உணர்வுருமாற்றம் அடைவதற்கான உள்ளாற்றல் உங்களிடம் தான் புதைந்துள்ளது. இது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையுமே வளப்படுத்தும்; உடல்நலத்திலிருந்து செல்வத்திலிருந்து அர்த்தமுள்ள உறவுகளிலிருந்து நீடித்த மகிழ்ச்சியான வாழ்வுவரை, அனைத்தையுமே உங்களுக்கு எடுத்துவரும்.

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் குண்டலினி எனப்படும் அளப்பறிய உள்ளாற்றல் சக்தி உறைந்துள்ளது. குண்டலினி என்பது உங்களால் இதுவரை பயன்படுத்தப்படாத, நீங்களே அறிந்துகொள்ளாத, ஆனால் உங்களுக்குள்ளேயே சுருண்டு படுத்துக்கிடக்கும் உங்களுடைய சொந்த சக்திதானே தவிர, வேறு ஏதோ ஒன்று அல்ல; இதைப்பற்றி நீங்கள் அறியாதுகூட இருக்கலாம்! குண்டலினி சக்தி, உங்கள் மூலம் நான்கு சக்திகளாக, நான்கு வெவ்வேறு ஊற்றுக்களாக வெளிப்படுகிறது, அதை 4 ஆற்றல்கள் என்றும் சொல்லலாம். இந்த நான்கு சக்திகளுமே குண்டலினி சக்தியின் வேறு வேறு வெளிப்பாடுகள்தான்.

உடல்நலம், வெற்றி, நிலையான மகிழ்ச்சி இவற்றுக்கான திறவுகோல், தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவே இருக்கும் இந்த நான்கு சக்திகளையுமே விடுவிப்பதுதான்.

உங்கள் வாழ்க்கையில் இந்த நான்கு சக்திகளையுமே நீங்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்தாலுமே, அவற்றை நீங்கள் விழிப்புடனோ தெளிவான நோக்கத்துடனோ பயன்படுத்துவதில்லை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மின்சாரம் அல்லது காற்று சக்திபோல இந்த நான்கு சக்திகளுமே மிக உயர்ந்த சக்திகள்தான். அவற்றை நீங்கள் சரியான முறையில் கையாண்டீர்களானால், நீங்கள் விரும்புகிற அனைத்தையும் அவற்றால் உங்கள்மீது அள்ளி சொரியமுடியும். ஆனால் அவற்றை நீங்கள் சரியான வழியில் கையாளவில்லையென்றால், அவை தொடர்ந்து எதிர்மறை தாக்கங்களையே உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.

இவற்றைச் சரியான வழியில் கையாள்வதற்கான நுட்பம்: 'உங்களுக்குள் சரியான உணர்வை உருவாக்குவதும், உங்களுடைய சிறந்த மற்றும் உச்சபட்ச சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும்தான்!'

உங்களுக்குள் சரியான உணர்வை நீங்கள் உருவாக்கும்போது நீங்கள் விரும்புகிற ஒவ்வொரு நிகழ்வுமே, தானாகவே மிக எளிதாக உங்கள் வாழ்வில் வந்துசேரும், எந்தவித ஒரு சிரமமுமின்றியே அவை உங்கள் வாழ்வில் நிகழத் துவங்கும். நீங்கள் செய்வதனைத்தும் வெற்றிபெறும். இந்த சக்திகளை சரியான வழியில் உபயோகிப்பது எப்படி, பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளும்பொழுது, அந்தக் கணமே நீங்கள் உங்கள் வாழ்வை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் உணர்வுருமாற்றம் பெறச் செய்வீர்கள்.