KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோக: க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்Sign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோக: க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்

அர்ஜூந உவாச

ப்ரக்ரு'திம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச / ஏதத்வேதிதும் இச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேச'வ // 13.0

அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; ப்ரக்ரு'திம் - இயற்கை; புருஷம்- அனுபவிப்பவன்: ச - அதுவும்: ஏவ - அப்படியே: க்ஷேத்ரம் - சரீரம்; க்ஷேத்ரஜ்ஞ - சரீரத்தைப் பற்றி அறிந்தவர்; ஏவ - அப்படியே; ச - அதுவும்; ஏதத் - இதை; வேதிதும்- புரிந்துகொள்ள; இச்சாமி -விரும்புகிறேன்; ஜ்ஞாநம் - அறிவு, ஜ்நேயம் - அறியப்படும் பொருள்; ச - அது; கேச்வ - பகவானே

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

பகவத்திதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

அர்ஜுனன் சொன்னது

13.0 ஒ கேசவா, பிரகிருதி மற்றும் புருஷ எனப்படும் செயல்படும் மற்றும் செயலற்ற சக்திகளையும் களம் மற்றும் களத்தை அறிந்தவரையும், அறிவு மற்றும் அறிவின் முடிவையும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். (சில பதிப்புகளில் இச்சுலோகம் இடம்பெறுவதில்லை)

ஸ்ரீபகவாந் உவாச

இதம் ச'ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே / ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித: // 13.1

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; இதம் - இந்த; ச'ரீரம் - உடல்; கௌந்தேய - குந்தி புத்திரா; க்ஷேத்ரம் - களம்; இதி -என்ற பெயரால்; அபிதீயதே - அழைக்கப்படுகின்றது; ஏதத் - இதை; ய: - எவன்; வேத்தி - அறிகின்றானோ; தம் - அவனை; ப்ராஹு; -சொல்கின்றார்கள்; க்ஷேத்ரஜ்ஞ: - களமறிந்தவன்; இதி - என்று; தத்வித: - தத்துவம் அறிந்த ஞானிகள்

ஸ்ரீபகவான் சொன்னது

13.1 ஓ, குந்தி மகனே, இந்த உடலைத்தான் 'களம்' என்கிறோம். யாரொருவர் இந்த உடலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவரைத்தான் 'களமறிந்தவர்' என்கிறோம்.

க்ஷேத்ரஜ்ஞும் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத / க்ஷேத்ரக்ஷ்த்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஜ்ஞாநம் மமம் மம // 13.2

க்ஷேத்ரஜ்ஞும் ச அபி - களத்தை அறிந்தவனும்; மாம் - நானே என்று; வித்தி - தெரிந்து கொள்: ஸர்வக்ஷேத்ரேஷு - எல்லா சரீரங்களிலுமுள்ள : பாரத - பரத குலத்தில் உதித்தவனே; க்ஷேத்ரஜ்ஞ்ஞயோ:- இந்த உடலையும் இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் பற்றிய; ஜ்ஞாநம் - அறிவு; யத் - எது; தத் - அதுதான்; ஜ்ஞாநம் - ஞானம்; மதம் -கருத்து; மம - என்னுடைய

  • 13.2 ஒ பரத குலத்தில் உதித்தவனே, சிருஷ்டிகர்த்தாவாகிய நானே களமறிந்தவனாக எல்லா உடல்களிலும் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள். என்னுடைய அபிப்பிராயப்படி 'அறிவு' என்றால், படைத்தலுக்குரிய களமான இந்த உடலையும், இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் புரிந்துகொள்வதே.

தத் க்ஷேத்ரம் யச்ச யாத்ரு'க்ச யத்விகாரி யதச்'ச யத் / ஸ ச யோ யத்ப்ரபாவச்'ச தத்ஸமாஸேந மே ச்'ரு'ணு // 13.3

தத் - அந்த; க்ஷேத்ரம் - சீரீரம்; யத் - எது ?; ச - மேலும்; யாத்ரு'க் - எத்தகையது?; ச- அப்படியே; யத்விகாரி - எந்த விகாரங்ளோடு கூடியது?; யத: - எதிலிருந்து; ச - மேலும்; யத் - எது உண்டாயிற்று ?; ஸ: - அந்த; ச - மேலும்; ய: - யார்?; யத்ப்ரபாவ: - எத்தகைய பெருமை கொண்டவன்?; ச - மேலும்; தத் - இவையனைத்தையும்; ஸமாஸேந -சுருக்கமாக; மே - என்னிமிடமிருந்து; ச்'ரு'ணு - கேள்

  • 13.3 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தக் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவருடைய மஹிமைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.

ரு'ஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ரு'தக் / ப்ரஹ்மஸூத்ரபதைச்'சைவ ஹேதுமத்திர்விநிச்'சிகை: // 13.4

ருஷிபி: - ரிஷிகளால்; சந்தோபி: - வேத மந்தரங்கள் மூலமாகவும்; விவகை: - பலவிதமான; ப்ருதக் - தனித்தனியாகப் பிரித்து; ப்ரஹ்மஸூத்ரபதை: ஏவ ச- வேதாந்த பதங்களாலும்; ஹேதுமத்பி: - யுக்திகளோடு கூடிய; விநிச் சிதை:-விளக்கப்பட்டுள்ளது

13.4 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய விதிகளோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

மஹாதுதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச / இந்த்ரியாணி தசை'கம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா: // 13.5

இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதச் சேதநா த்ரு'தி: / ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேந ஸ்விகாரமுதனுறைரு'தம் // 13.6

மஹாததாநி - நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும்; அஹங்கார: -அஹங்காரமும்; இந்த்ரியாணி தச' - பத்துப் புலன்களும்; ஏகம் ச - மனமும்; பஞ்ச இந்த்ரியக்காசரா: - புலன் விஷயங்கள் ஐந்து; இச்சா - விருப்பு; த்வேஷ - வெறுப்பு;ஸுகம் - இன்பம்; து:கம் - துன்பம்; ஸங்கரத: - உடற்கட்டு; சேதநா - சைதன்ய சக்தி; த்ருதி - உறுதி; ஏதத் - இந்த; சீரீரம்; ஸமாஸேந - சுருக்கமாக;ஸவிகாரம் - ஆகிய மாறுபாடுகளுடைய; உதாஹ்ரு'தம் - சொல்லப்பட்டது

  • 13.5,6 இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்றத் தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும் புலன்கள் ஐந்து, புலன் விஷயங்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இங்ஙனம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன.

அமாநித்வமதம் பீத்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் / ஆசார்போபாஸ்ம் செ'ளசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ: //13.7

இந்த்ரியார்கேஷூ வைராக்யமநவரங்கார ஏவ ச / ஜந்மம்ரு'த்யுஜராவ்யாதி து:கதேஷாநுதர்ச'நம் // 13.8

அஸக்கிராபிஷ்வங்க: புக்ரதார்க்ரு'ஹாதிஷு / நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு //13.9

மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ / விவிக்ததே ச'ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி // 13.10

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ச'நம் / ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோடந்யதா // 13.11

அமாநித்வம் அஹிம்ஸா - துன்புறுத்தாமை; க்ஷாந்தி: - பொறுத்துக் கொள்ளுதல்; ஆர்ஜவம் - எளிமை; ஆசார்ய உபாஸநம் - சிரத்தையுடனும், பக்தியுடனும் குருவுக்குப் பணிவிடை செய்தல், செள சம் -உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்; ஸ்தைர்யம் - உள்ளத்தின் உறுதி; ஆத்மாவிநிக்ரஸ; - மனம் புலன்களோடு கூடிய உடலைக் கட்டுப்பத்துதல்; இந்த்ரிய அர்தேஷு - இவ்வுலக பரலோக போகங்கள் அனைத்திலும்; வைராக்யம்- பற்றற்றத் தன்மை; ச - மேலும்; அநஹங்கார: ஏவ - அஹங்காரம் இல்லாமை; ஜந்ம ம்ருதயு ஜரா வ்யாதி து:க தேர்ஷ அநுதா்ச'நம் - பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் இவற்றில் உள்ள துக்கத்தையும் குறைபாடுகளையும் திரும்பத் திரும்பச் சிந்தித்துப் பார்த்தல்; அஸக்தி - பற்றின்மை; அநபிஷ்வங்க:- தன்னுடையது என்ற எண்ணமின்மை; புத்ர தார்க்ரு'ஹாதிஷு - மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில்; நித்யம் - எப்போதுமே; ச - அவ்வாறே; ஸமசித்தத்வம் - ஸ்மபாவனையுடன் இருத்தல்; இஷ்ட அநிஷ்ட உபபத்ஷு - வேண்டியன வேண்டாதனவற்றை அடையும் போது; மயி - பரமேசுவரனான என்னிடத்தில்; அநந்யயோகே ந - வேறு எதையும் எண்ணாத யோகத்தின் மூலம்; பக்தி; அவ்யாசிசாரிணீ -பிறழாதவிவிக்த தேச'ஸேவித்வம் - தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு; அரதி - விருப்பம் கொள்ளாதிருத்தல்; ச -மேலும்; ஜநஸம்ஸதி - உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதர்களுடைய கூட்டத்தில்; அத்யாத்மஜ்ஞாந நித்யத்வம் - அத்யாத்ம ஞானத்தில்

எப்பொழுதும் நிலைத்து நிற்றல்; தத்த்வஜஞாந அர்ததா்ச'நம் -தத்வஞானத்தின் பொருளான பரமாத்மாவையே தரிசனம் செய்தல்; ஏதத் - இவையெல்லாம்; ஜ்ஞாநம் - ஞானம்; இதி - என்றும்; ப்ரோக்தம் - சொல்லப்பட்டது; அஜ்ஞாநம் - அஞ்ஞானம்; யத் - எது; அத: -அதனிலும்; அந்யதா -மாறுபட்டதோ

13.7-11 பணிவு, கர்வமின்மை, அஹிம்ஸை, சகிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஞானகுருவுக்குச் சேவைசெய்தல், தூய்மை, மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு;

  • புலன்களைத் திருப்தி செய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி அகியவற்றின் சுமற்சியை அறியும் திறன் ;

குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் பிறவற்றின்மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்;

என்னிடத்தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசித்தல், பொது மக்களிடமிருந்து விலகிவசித்தல்; 'தன்னை உணர்தலின்' முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி சத்தியத்திற்கான தத்துவத் தேடல்; - இவையெல்லாம்தான் 'புத்திசாலித்தனம்' என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் 'அறியாமை' என்றும் வலியுறுத்துகிறேன்.

ஜ்ரேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ரு'தமச்'நுதே / அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே // 13.12

ஜ்னேயம் - அறியப்படவேண்டியதோ; யத் - எது; தத் - அதை; ப்ரவக்ஷ்யாமி - விளக்கிகூறுவேன்; யத் - எதை; ஜ்ஞாத்வா- அறிந்து; அம்ரு'தம் - பரமானந்தத்தை; அச்'நுதே -அடைகின்றானோ; அநாதி மத் - ஆதியில்லாத; பரம் ப்ரன்ம - பரப்ரஹ்மம்; ந - இல்லை; ஸத் - ஸ்தி என்றும்; தத் - அந்த; ந அஸத் என்றும்; உச்யதே -சொல்லப்படுகிறது

  • 13.12 எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.

ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ≤க்ஷிசிரோமுகம் / ஸா்வத: ச்'ருதிமல்லோகே ஸர்வமாவ்ரு'த்ய திஷ்டதி // 13.13

ஸர்வத: - எங்கும்; பாணிபாதம் - கைகால்களை உடையது; தத் - அது; ஸர்வத்: - எங்கும்; அக்ஷிசிர; முகம் - கண், தலை, முகங்களோ(டு கூடியது; ஸர்வத்: - எங்கும்; ச்'ருதிமத் - காதுகளை உடையது; லோகே - உலகில்; ஸர்வம் - அனைத்தையும்; ஆவ்ரு'த்ய - வயாபித்து; திஷ்டதி - நிற்கின்றது

13.13 எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது.

ஸர்வேந்த்ரியகுணாபரஸம் ஸா்வேந்த்ரியவிவர்ஜிதம் / அஸக்தம் ஸா்வப்ரு'ச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு' ச // 13.14

ஸர்வ இந்த்ரியகுண ஆமாஸம் - எல்லாப் புலன் நுகா் பொருட்களை அறிவது; ஸா்வ இந்த்ரிய விவர்ஜிதம் - புலன்கள் அற்றது; அஸக்தம் -ஒன்றிலும் பற்றற்றது; ஸா்வப்ருத் ச ஏவ - எல்லாவற்றையும் தாங்குவது, காப்பது; நிர்குணம் - குணமற்றதாக இருந்தாலும்; குணபேரக்த்ரு' -குணங்களை அனுபவிப்பது; ச - மேலும்

13.14 பரமாத்மாவோவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை அதாரம். ஆனாலும் அது உண்மையில் எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மீதும் பற்றற்றது. எல்லா ஜீவராசி களைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லா செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல் ரீதியான இயற்கை செயல் வகைகளில் தலைசிறந்த நிபுணத்வம் மிக்கதாக இருக்கிறது.

பஹிரந்தச்'ச பூதாநாமசரம் சரமேவ ச / ஸூக்ஷ்மத்துவிஜ்ஞேயம் தூஸ்தம் சாந்திகே ச தத் // 13.15

பஹி: - புறமும்; அந்த: ச - உள்ளும்; சரம் - அசைவன; அசரம் ஏவ ச -அசையாதனவற்றின் வடிவிலும் கூட; பிராணிகளினுடைய; ஸூக்ஷ்மத்வாத் - நுண்ணியதாக இருப்பதால்; தத் - அது; அவிஜ்ஞேயம் - அறிய முடியாதது; தூரஸ்தம் ச - மிகுந்த தூரத்திலும் இருப்பது; அந்திகே ச - மிக அருகிலும்; தத் - அதுவே

13.15 சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் அருகில் இருக்கிறது !

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் / பூதாபர்த்ரு' ச தஜ்ஜ்ஜேருயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச//13.16

அவிபக்தம் பூதேஷு- சராசரமாகின்ற பிராணிகள் அனைத்திலும்; விபக்தம் இவ ச - பிரிக்கப்பட்டுத் தனித்தனியாக இருப்பது போன்ற; ஸ்திதம் -தோற்றத்தை அளிக்கின்றது; பூதபர்த்ரு' - ஸகல பிராணிகளையும் தாங்கிப் பேணிக் காப்பது; ச - மேலும்; தத் - அந்தப் பரப்ரஹ்மம்; ஜ்ரேயம் - அறியத்தக்க; க்ரஸிஷ்ணு - அழிப்பது; ப்ரபவிஷ்ணு ச-படைப்பதும்

13.16 பார்ப்பதற்குத் தனித்தனியாகப் பிளவுபட்டதுபோல் தோன்றினாலும் அதுபிளவுபடாதது. ஸகல பிராணிகளையும் பேணிக் காப்பதென்றாலும் அழிப்பதாகவும் படைப்பதாகவும் அதுவே இருக்கிறது.

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே / ஜ்ஞாநம் ஜ்ரேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ரு'தி ஸா்வஸ்ய விஷ்டிதம் // 13.17

ஜ்யோதிஷாம் அபி - ஒளிகளுக்கெல்லாம்; தத் - அந்தப் பரப்ரஹ்மம்; ஜ்யோத் - ஒளி; தமஸ - மாயைக்கு; பரம் - அப்பாற்பட்டது; உச்யதே -என்று சொல்லப்படுகின்றது; ஜ்ஞாநம்- அறிவு; ஜ்ஞேயம் - அறியப்பட வேண்டியது;ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி - இதயத்திலும்; ஸர்வஸ்ய - எல்லோருடைய; விஷ்டிதம் -நிலைக்கிருக்கிறது

13.17 அந்தப் பரமாத்மன் ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, அதாரமாக இருக்கிறது. இருளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, உருவமற்றது, ஞான வடிவானது, அறியப்படவேண்டியது, ஞானத்தினால் அடையப்பட அடையப்பட எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது.

இதி கேஷத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ரேயம் சோக்தம் ஸமாஸத: /

மத்பக்த ஏதத் விஜ்ஞாய மத்பவாயோப்பத்யதே // 13.18

இதி - இவ்விதம்; கைஷத்ரம் - சரீரத்தினுடைய ஸ்வரூபம்; ததா - அவ்விதமே; ஜ்ஞாநம் - எனுனமும்; ஜ்ஞேயம் ச -அறியப்படவேண்டியதும்; உக்கம் - சொல்லப்பட்டன; ஸ்மாஸ்க; -சுருக்கமாக;மத்பக்த: - என்னுடைய பக்தன்; ஏதத் - இதை; விஜ்ஞாய - தத்துவரீதியாக அறிந்து; மத்பரவாய - என்னுடைய ஸ்வரூபத்தை; உபபத்யதே - அடைகின்றான்

13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பெற்றியும், என்னால் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ள காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும் !

ப்ரக்ரு 'திம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி / விகாராந்ச்'ச குணாந்ச்'சைவ வித்தி ப்ரக்ரு'திஸம்பவாந் //13.19

ப்ரக்கு'திம் - பிரபஞ்ச இயற்கையையும்; புருஷம் ஏவ ச புருஷனையும்; வித்தி - அறிந்துகொள்; அநாதீ - ஆரம்பமற்றதென; உபௌ - இவ்விரண்டையுமே; அபி - அனைத்தையும்; விகாராந் ச -ராகம் துவேஷம் முதலிய விகாரங்களும் ; குணாந் ஏவ ச - குணங்களும் ; வித்தி - அறிந்துகொள்; ப்ரக்ரு'திஸம்பவாந் - இயற்கையிலிருந்து உண்டானவையே என்று

13.19 பிரகிருதி புருஷன் - இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உணர்வுமாற்றங்களும் பிரகிருதியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.

கார்யகரணகா்த்ரு'த்வே ஹேது: ப்ரக்ரு'திருச்யதே / புருஷ: ஸுகது:காநாம் போக்த்ரு'த்வே ஹேதுருச்யதே// 13.20

கார்யகரணகர்த்ரு'வே - காரியத்தையும் கரணங்களையும் உண்டு பண்ணும் விஷயத்தில்; ஹேது: - காரணம் என்று;ப்ரக்ரு'தி: - இயற்கை; உச்யதே - சொல்லப்படுகின்றது; புருஷ: - ஜீவாத்மா; ஸுகது:காநாம்

ஸுக துக்கங்களை; போக்த்ருவே - அனுபவிப்பதில்; ஹேது: --காரணமென்று; உச்யதே - சொல்லப்படுகின்றான்

13.20 உடலையும் பலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் பிரகிருதி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணமென்று கூறப்படுகிறான்.

புருஷ: ப்ரக்ரு'திஸ்கோ வி புங்க்கே ப்ரக்கு'திஜாந்கணாந்/ காரணம் குணஸங்கோல்ய ஸ்தஸத்யோநிஜந்மஸு // 13.21

புருஷ - மனிதர்; ப்ரக்ருதிஸ்த: ஹி - பொருள் சார்ந்த உலகில் இருந்து கொண்டுதான்; புங்க்தே - அனுபவிக்கின்றான்; ப்ரக்ருதிஜாந் - இயற்கையிலிருந்து உண்டான; குணாந் - முக்குணங்கள் நிறைந்த பொருட்களை; காரணம் - காரணமாகின்றது; குணஸங்க- அந்த குணங்களுடைய தொடர்பே; அஸ்ய - அந்த ஜீவாத்மா; ஸ்த் அஸத் யோநி ஜந்மஸு - நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு

  • 13.21 பொருள் சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப் பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான். மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக் குணங்களே காரணம்.

உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா பேரக்தா மஹேச்'வர: / பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேsஸ்மிந் புருஷ: பர: // 13.22

உபத்ரஷ்டா- ஸாக்ஷியாக இருப்பர்;அநுமந்தா - அனுமதி அளிப்பவர்; ச - மேலும்; பர்தா - காப்பவர் என்றும்; போக்தா - அனுபவிப்பவர் என்றும்; மஹேச்'வர - மஹேஸ்வரன் என்றும்; பரமாத்மா இதி ச -பரமாத்மா என்றும்; உக்த - சொல்லப்படுகின்றார்; தேஹே-தேஹத்தில்; அஸ்மிந் - இந்த; புருஷ: - ஜீவாத்மா; அபி - இருப்பினும்; பர: -பரமாத்மா

13.22 இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிற ஜீவாத்மா - ஸாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேச்வரன், பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ரு'திம் ச குணை: ஸஹ / ஸர்வதா வர்தமாநோபி ந ஸ பூயோப்பிஜாயதே // 13.23

ய: - எந்த மனிதன்; ஏவம் - இவ்வாறு; வேத்தி - தத்துவரீதியாக அறிவானோ; புருஷம் - புருஷனையும்; ப்ரக்ரு'திம் ச - உலகியல் இயற்கையையும்; - எல்லாவிதங்களிலும்; வா்குமாந: அபி - இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும்; ந - இல்லை; ஸ்ஹ - அவன்; அமிஜாயதே - பிறப்பது

  • 13.23 இவ்வாறு புருஷனையும், குணங்களோடு கூடிய இயற்கையின் இயல்புகளையும் எந்த மனிதன் தத்வ ரீதியாக அறிவானோ, அவனுடைய இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.

த்யாநேநாத்மநி பச்'யந்தி கேசிதரத்மாநமாத்மநா / அந்யே ஸாங்க்யேந யோகேந கா்மயோகேந சாபரே //13.24

த்யாளேந - தியானத்தின் மூலமாக; ஆத்மநி - இதயத்தில்; பச்'யந்தி - பார்க்கின்றார்கள்; ஆத்மாநம் - அந்த பரமாத்மாவை; கேசித் - சில மனிதர்கள்; ஆத்மநா - தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால்; அந்யே - மற்றும் சிலர்; ஸாங்க்யேந யோகேந - ஞானயோகத்தின் மூலமாகவும்; கா்மயோகேந ச - கா்மயோகத்தின் மூலமாகவும்; அபரே - வேறு சிலா்

  • 13.24 தூய்மை படுத்தப்பட்ட மனம் மற்றும் அறிவின் துணைகொண்டு, தங்கள் ஆழ்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.

அந்யே த்வேவமஜாநந்த: ச் ருத்வாந்யேப்ய உபாஸதே / தேபி சாதிதரந்த்யேவ ம்ரு'த்யும் ச்'ருதிபராயணா: //13.25

அந்யே - வேறு சிலர்; து - ஆனால்; ஏவம் - இவ்வாறு; அஜாநந்த -அறியாமல்; ச் ருத்வா - கேட்டு; அந்யேப்ய - மற்றவர்களிடமிருந்து; உபாஸ்தே - உபாஸனை செய்கின்றார்கள்; தே அபி ச- அவர்களும்; அதிதரந்தி ஏவ - ஸ்ந்தேஹமின்றிக் கடக்கின்றார்கள்; ம்ரு'த்யும் -மரணப் பாதையை; ச்'ருதிபராயணா: - கேட்டறிந்த உபதேசத்தை மேலான கதியாகக் கொண்ட

13.25 வேறு சிலர், சிலர், போதிய அன்மிக புத்திசாலித்தனம் இல்லையென்றாலும் ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் தொடங்குகிறார்கள். ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே சிலர் பிறப்பு, இறப்பு என்னும் பாதையைக் கடக்கிறார்கள்.

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம் /

கேஷத்ரக்ஷத்ரஜ்ஞுஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப / / 13.26

யாவத் கிஞ்சித் - எத்தனை எத்தனை; ஸஞ்ஜாயதே - உண்டாகின்றதோ; ஸத்த்வம் - பிராணி வர்க்கம் ; ஸ்தாவர ஜங்கமம் - அசைவன, அசையாதன ஆகிய; கேஷத்ரஜ்கு லம்யோகாத் - சரீரம், சரீரத்தையறிந்தவன் இவர்களுடைய அவையனைத்தும்; வித்தி - அறிந்து கொள்; பரதா்ஷப - பரத சிரேஷ்டா

13.26 பரத குலத்துதித்தவர்களில் தலைசிறந்தவனே, பிறக்கிற அனைத்துமே, அது அசைகிறதோ அசையவில்லையோ, அது க்ஷத்ர க்ஷேத்ரஜ்ஞ என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றின.

ஸமம் ஸா்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேச்'வரம் விநச்'யத்ஸ்வவிநச்'யந்தம் ய: பச்'யதி ஸ பச்'யதி //13.27

ஸமம் - எங்கும் ஸமமாக; ஸஸ்ர்வேஷுடுதேஷு - சாரசரங்களை அனைத்திலும்; திஷ்டந்தம் - இருப்பவராகவும்; பரமேச்வரம் - பரமேசுவரனான பகவானை; விநச்'யத்ஸு - அழியக்கூடிய; அவிநச்'யந்தம் - அழியாதவராகவும்; ய: - எந்த மனிதன்; பச்'யதி -பார்க்கின்றானோ; ஸ: - அவனே; பச்'யதி - உண்மையில் பார்க்கின்றவன்

  • 13.27 யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறாரோ, அந்தத் தனிப்பட்ட ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்துகொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.

ஸமம் பச்'யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீச்'வரம் / ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம் // 13.28 ஸமம் - ஸமமாகவே;பச்'யதி - பார்த்துக் கொண்டு; ஹி - ஏனெனில்; ஸர்வத்ர - அனைத்திலும்; ஸ்மவஸ்திதம் - ஸ்மமாக நிலை பெற்றிருக்கும்; ஈச்'வரம் - பகவானை; ந ஹிநஸ்தி - அழித்துக் கொள்வதில்லை; ஆத்மநா - தன்னாலேயே; ஆத்மாநம் - தன்னை; தத: - அதனால்; யாதி - அடைகின்றான்; பராம் கதிம் - பரமகதியை

13.28 ஒருவர் மனத்தால் இழிவுபடுத்தப்படாமலோ அல்லது தூண்டப்படாமலோ இருக்கும்பொழுதும், மற்றும் அசையா பொருட்கள் அனைத்திலும் ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை பார்க்க முடியும்பொழுதும் அவர் மனம் கடந்தநிலையை அடைகிறார்.

ப்ரக்ரு'த்யைவ ச கா்மாணி க்ரியமாணாநி ஸா்வச': / ய: பச்'யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பச்'யதி // 13.29

ப்ரக்ரு'த்யா ஏவ - இயல்பினாலேயே; ச - மேலும்; கா்மாணி -எல்லாக்கா்மங்களும்; க்ரியமாணாநி - செய்யப்படுவன வென்றும்; ஸர்வச்: - எல்லா விதங்களிலும்; ய: - எந்த மனிதன்; பச்'யுதி -பார்க்கிறானோ; ததா - மேலும்; ஆத்மாநம்- ஆத்மாவை; அகர்தாரம் - கர்த்தா அல்லன் என்றும்; ஸ - அவனே; பச்'யதி - உண்மையில் பார்க்கின்றவன்

  • 13.29 பொருட்களினால், பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை என பார்க்கமுடிந்த ஒருவர்தான் உண்மையில் பார்க்கிறார்.

யதா பூதப்ரு'தக்பாவமேகஸ்தமநுபச்'யதி / தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே தகா // 13.30

யதா - எப்பொழுது; பூதப்ரு'தக்பாவம் - சராசரங்கள் அனைத்தினுடைய தனித்தனித் தன்மை; நிலைபெற்றிருப்பதாகவும்; அநுபச்'யதி - காண்கின்றானோ; தத: ஏவ - அந்த பரமாத்மாவிடமிருந்தே; விஸ்தாரம் ச- ஸகல சராசரங்களும் விரிவடைந்தனவாகவும்; அடைகின்றான்; ததா - அப்பொழுதே

13.30 எல்லா உயிர்களிடத்தும் ஒப்புயர்வற்ற அத்மாவைக் காண

முடிந்த ஒருவர், உயிர்களிடத்தே வேற்றுமைகாணும் தன்மையை விட்டுவிடுகிறார். அவர், இந்த முழுப் பிரபஞ்சமும் அந்த ஒரே ஸத்யத்தின் விரிவாக்கமும் வெளிப்பாடும்தான் என்பதைப் பார்க்கிறார்.

அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய: / ச்ரீரஸ் தோபி கௌந்தேய நகரோதி ந லிப்யதே // 13.31

  • அநாதிக்வாக் நிர்குணமானபடியாலும்; பரமாத்மா - பரமாத்மா; அயம் - இந்த; அவ்யய: - அழிவற்ற; ச'ரீரஸ்த: அபி - உடலிலேயே இருந்த போதிலும் ; கௌந்தேய - குந்தி புத்திரா; ந கரோதி - ஒன்றும் செய்வதில்லை; ந லிப்யதே - எதிலும் ஒட்டுவதும் இல்லை

13.31 குந்தி புத்திரா, மனத்திற்கெட்டாத, அநாதியான, நிர்குணமான இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்தபோதிலும் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.

யதா ஸர்வகதம் ஸெளக்ஷ்ம்யாதா காச'ம் நோபலிப்யகே / ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே // 13.32

யதா - எவ்வாறு; ஸா்வகதம் - எங்கும் நிறைந்த; ஸெளக்ஷ்ம்யாத் -நுண்ணியதாக இருப்பதால்; ஆகாச'ம் - அகாசம்; ந உபலிப்யதே -எதிலும் ஒட்டுவதில்லையோ; ஸர்வத்ர - எங்கும்; அவஸ்தித: - நிலை பெற்றிருக்கும்; தேஹே - இவ்வுடலில்; ததா - அவ்வாறே; ஆத்மா -ஆத்மா; ந உபலிப்யதே - ஒட்டுவதில்லை

13.32 எங்கும் நிறைந்திருந்தாலும் ஆகாச் ம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் கலப்பதில்லையோ அவ்வாறே அத்மா இவ்வுடலில் வசித்தாலும், இந்த உடலோடு அது கலப்பதில்லை.

யதா ப்ரகாச'யத்யேக: க்ரு'த்ஸ்நம் லோகமிமம் ரவி: / கேஷத்ரம் கேஷத்ரீ ததாக்ரு'த்ஸ்நம் ப்ரகாச'யதி பாரத // 13.33

யதா - எப்படி; ப்ரகாச'யதி - பிரகாசிக்கச் செய்கிறானோ; ஏக: -ஒருவனே; க்ரு'த்ஸ்நம் லோகம் - பிரம்மாண்டம் முழுவதையும்; இமம் - இந்த; ரவி: - சூரியன்; கேஷத்ரம் - சரீரம்; கேஷத்ரீ - ஆத்மா ஒன்றே; ததா - அப்படியே; க்ரு'த்ஸ்நம் முழுவதையும்; ப்ரகாச'யதி -பிரகாசிக்கச் செய்கின்றான்; பாரத - பரத குலத்தில் உதித்தவனே

13.33 பரத குலத்தில் உதித்தவனே, எப்படிச் சூரியன் ஒருவனே இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே இந்த கேஷத்ரம் முழுவதையும் பிரகாசி க்கச் செய்கிறது.

கேஷத்ரகேஷத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா / துதப்ரக்கு' திமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம் // 13.34

கேஷத்ரக்க்ஷத்ரஜ்ஞயோ: - கேஷத்ரம், கிஷத்ரக்குன் இவற்றின்; ஏவம் - இவ்விதம்; அந்தரம் - வேறுபாட்டையும்; ஜ்ஞாநசக்ஷஷா - ஞானக்கண்களால்; பத்த ப்ரக்ரு'தி மோக்ஷம் ச - ப்ரகி(ருதி, ப்ரகிருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும்; யே - எவர்கள்; விது; - தத்துவரீதியாக அறிகின்றார்களோ; யாந்தி -அடைகின்றார்கள்; தே - அந்த மஹாத்மாக்கள்; பரம் - பரமாத்மாவை

13.34 இவ்விதம் கேஷத்ரம் மற்றும் கிஷத்ரஜ்ஞன் இவற்றின் வேறுபாட்டையும் எவர்கள் ஞானக்கண்களால் தத்வ ரீதியாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல் ரீதியான பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமாத்மாவை அடைகிறார்கள். ஒம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்திதாஸுபநிஷத்ஸூ ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே க்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே கேஷத்ரக்கூஷத்ரஜ்ஞ விபாக யோகோ நாம த்ரயோதசோ's த்யாய: //

ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'கேஷத்ரகேஷத்ரக்ஞவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

1.அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம்13.12
2.அநாதித்வாந்நிர்குணத்வாத்13.32
3.அந்யே த்வேவமஜாநந்த:13.26
4.அமாநித்வமதம் பித்வமஹிம்ஸா13.8
5.அவிபக்தம் ச பூதேஷு13.17
6.அஸக்திரநபிஷ்வங்க:13.10
7.இச்சா த்வேஷ: ஸுகம் து:கம்13.7
8.இதி கேஷத்ரம் ததா ஜ்ஞாநம்13.19
9.இதம் ச'ரீரம் கௌந்தேய13.2
10.இந்த்ரியார்தேஷு வைராக்ய13.9
11.உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா13.23
12.ரு'ஷிபிர்பஹுதா கீதம்13.5
13.கார்யகரணகர்த்ரு'த்வே13.21
14.கேஷத்ரகேஷத்ரஜ்ஞயோரேவ13.35
15.கேஷத்ரஜ்ஞும் சாபி மாம் வித்தி13.3
16.ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி13.13
17.ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதி13.18
18.தத்கேஷத்ரம் யச்ச யாத்ரு, க்ச13.4
19.த்யாநேநாத்மநி பச்'யந்தி13.25
20.புருஷ: ப்ரக்ரு 'திஸ்தோ ஹி13.22
21.ப்ரக்ரு'திம் புருஷம் சைவ13.20
22.ப்ரக்ரு'திம்…… கேஷத்ரம்13.1
23.ப்ரக்ரு'த்யைவ ச கா்மாணி13.30
24.பஹிரந்தச்'ச பூதாநாமசரம்13.16
25.மயி சாநந்யயோகேந13.11
26.மஹாபூதாந்யஹங்காரோ13.6
27.ய ஏவம் வேத்தி புருஷம்13.24
28.யதா ப்ரகாச'யத்யேக:13:34
29.யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதா13.33
30.யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்13.27
31.யதா பூதப்ரு'தக்பாவ13.31
32.ஸமம் பச்'யந்ஹி ஸா்வத்ர13.29
33.ஸமம் ஸா்வேஷு பூதேஷு13.28
34.ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ13.14
35.ஸர்வேந்த்ரியகுணாபாஸம்13.15

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்அரசா் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி' ராஜன்அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி பேரூன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸ்ஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க்' ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்' சா'தனன்கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்
பகவான்ஆறுவித குணங்களை உடையவர். அவை<br>1. பரிபூரண ஞானம்.<br>2. பரிபூரண வைராக்கியம்.<br>3. பரிபூரண பலம்<br>4. பரிபூரண கீர்த்தி<br>5. பரிபூரண தேஜஸ்<br>6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்மேலான புருஷன்
மதுஸூதனன்மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன்விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு
ஜகந்நிவாஸன்ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன்இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்பாபம் அற்றவர்