KAILASA Library/பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)/விழிப்புணர்வும் மனசாட்சியும்Sign in
பகவத்கீதை விளக்கம் - அத்தியாயம் 13 (Bhagavad Gita Explanation - Chapter 13)

விழிப்புணர்வும் மனசாட்சியும்

  • 13.3 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தக் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவருடைய மஹிமைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.
  • 13.4 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய விதிகளோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
  • 13.5,6 இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்ற தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும் புலன்கள் ஐந்து, புலன்களின் விஷயங்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இங்ஙனம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், உடல்- மனம் எனப்படும் கிஷத்ரம், அதன் செயல்பாடுகள், அதன் மாற்றங்கள், அவை எப்படி உருவாக்கப்படுகின்றன விளக்கங்களைக் கவனமாகக் கேட்குமாறு சொல்கிறார்.

இந்த உண்மைகள் காலங்காலமாக, விளக்கப்பட்டிருக்கின்றன. வேத சாஸ்த்ரங்கள், உதாரணத்திற்கு உண்மைகளை மிகத் தெளிவாகச் சரியான விளக்கங்களோடு விளக்கியிருக்கின்றன.

மனிதனுடைய உண்மையான தன்மை, தூய்மையான விழிப்புணர்வே!

இலட்சக்கணக்கான உள்ளுலக விஞ்ஞானிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் இதே உண்மைகளைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மனிதனுடைய உண்மையான தன்மை, தூய்மையான விழிப்புணர்வே! விழிப்புணர்வே! க்ஷத்ரம் எனப்படும் செயல்களை அறிந்த க்ஷத்ருஜ்ஞனாக மனிதன் இருக்கிறான்.

மீண்டும் மீண்டும் இந்த அத்தியாயம் முழுவதும் கிருஷ்ணர், உடலை அறிந்தவனோடு உடலையும், மனத்தை அறிந்தவனோடு மனத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம் எச்சரிக்கிறார். களத்தை, களம் அறிந்தவனோடு சேர்க்கும்பொழுதுதான் பிரச்சினையே எழுகிறது.

நாம், இந்த உடலையும் மனத்தையும், நம்முடைய ஸம்ஸ்காரங்களை, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு நோக்கத்திற்காகவே கொண்டுவந்திருக்கிறோம். இந்தப் பிறப்பிற்காக இந்த உடல்-மன ஆடையை வாடகைக்கு எடுத்திருப்பதையும், நம்மைப் படிப்படியாக அதனோடேயே இணைத்துக்கொள்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம். சில நாட்களுக்கு பிறகு, மற்ற எதையும்விட அந்த ஆடையே நமக்கு மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த ஆடை சிறிது காலத்திற்குப் பிறகு, தேய ஆரம்பித்தவுடன் நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம்.

மனதிற்குச் சுகம் தந்த கட்டுறு மனப்பாங்கு

உண்மையில் இது நம் தவறல்ல. சமூகம் நம் மேல் அடுக்கடுக்கான கட்டுறு மனப்பாங்குகளை விதித்திருக்கிறது. நாம் என்பது இந்த உடலும் மனமும்தான் என்று நம்மை நம்பவைத்து முட்டாளாக்கியிருக்கிறது. நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம், இந்த உடல், மனத்துடன்கூடிய ஒரு தனி ஜீவன் என்றேதான் சொல்லப்பட்டிருக்கிறோம்.

இந்த உடலுக்கும் மனத்துக்கும் ஒரு பெயர்கூட வருவதற்குப் பிறகு நாம் நம்மை அந்தப் பெயரோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். என்னுடைய பெயர் இதுதான், நான் இன்னாருடைய மகன், நான் ஒரு டாக்டர் என்று அடுக்கடுக்காக பல அடையாளங்களோடு, அதாவது நம் பெயர், பெற்றோர், தொழில், நண்பர்கள் ஆகியவற்றோடு நம்மையே அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

உடலை அறிந்தவனோடு உடலையும், மனத்தை அறிந்தவனோடு மனத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்!

இது பல தபால் முத்திரைகள் குத்தப்பட்ட ஒரு அஞ்சல் கட்டைப்போலத்தான். நாம் ஒரு அஞ்சல்கட்டை (Parcel) இங்கிருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பினால், அது அனுப்பப்படுவதற்கு முன்னால் ஒரு முத்திரை குத்தப்படுகிறது. அதைப் போலவே, அது செல்லும் வழிநெடுக, அது ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு முத்திரையாக வாங்கிக்கொள்கிறது. அது திருவண்ணாமலை சென்று சேரும் சமயத்தில் நிறைய முத்திரைகள் பெற்றிருக்கும். இப்பொழுது அந்தக் கட்டானது, தன் மீது குத்தப்பட்டிருக்கும் முத்திரைகள்தான் 'தான்' என்று நினைத்துக்கொள்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் பொருள்தான் 'தான்' என்பதை அது மறந்தே விட்டது!

உடல்-மனத்தை வழிநடத்திச் செல்லும் என்பதற்குப் பதிலாக, நாம் நம்மை அதனோடு இணைத்துக்கொள்ளும்பொழுது, இதுதான் நடக்கிறது.

'நாம் க்ஷத்ரம் அல்ல, அதாவது முத்திரைகள் அல்ல; நாம் க்ஷத்ருஜ்ஞன்தான், அதாவது உள்ளே இருக்கும் பொருள்தான்' என்பதை நாம்தான் குழப்பிக்கொள்கிறோம். இயற்கையாக, உடல்-மன நிலையில் இருந்து வெளிப்படும் விழிப்புணர்வு இன்றி மனசாட்சியோடு மட்டும் இருக்கும் ஒருவர்தான் துன்பப்படுகிறார்!

எல்லாப் பிரச்சினைகளும் நம்மைப் பாதிக்கின்றன. உடல்-மனத்தில் நடக்கும் செயல்பாடுகள் நம் வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அடுத்த சில செயல்பாடுகள் என்ன? அவை எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்புரிகிறது என்பதைப் பற்றிப் படிப்படியாக விளக்குகிறார்.

கிருஷ்ணர், மகத்தான ஐந்து மூலப்பொருட்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம் அல்லது முடிவெடுக்கும் மனம் மற்றும் பத்து புலன்களைப் பற்றி பேசுகிறார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அவர் சொல்கிறார், பத்து புலன்கள் - கிர்த்ரியாரி தச் கம்சு: நமக்கு ஐந்து புலன்கள்தான் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம். நமக்கு ஐந்து கர்மேந்தியங்களும், ஐந்து ஞானேந்த்ரியங்களும் இருக்கின்றன. ஞானேந்த்ரியம் என்பது அறிவை உள்வாங்கிக்கொள்ளும் ஐந்து புலன்கள் கிர்த்ரியங்கள். அவை கேட்டல், தொடுஉணர்வு, பார்வை, ருசி மற்றும் வாசனை முதலியவற்றை உணரும் காதுகள், தோல், கண்கள், நாக்கு மற்றும் மூக்கு.

கர்மேந்த்ரியம் என்பது செயல்புரியும் புலன்கள்; அவையாவன, வாய், கைகள், கால்கள், மல-மூத்திரக் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு மற்றும் பிறப்புறுப்பு (இனப்பெருக்க உறுப்பு).

இந்தப் பத்து புலன்களுடன், பற்று வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், உடல், பரஸ்பர ஈர்ப்பு, மற்றும் விழிப்புணர்வு ஆகியனவும்கூட செயல்பாடுகள் நிகழும் களத்திற்குப் பங்களிக்கின்றன.

உண்மையில் 'விழிப்புணர்வு' என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. நம் விழிப்புணர்வு கடினமாகும்பொழுது, அது மனசாட்சியாக மாறிவிடுகிறது. இருக்கிறது.

விழிப்புணர்வு - கடவுள் தந்தது

உதாரணத்திற்கு, நம் மனசாட்சியின்படிதான் நாம் 'சரி, தவறு' என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதை அடிப்படையாகக்கொண்டே நாம் செயல்படுகிறோம்.

அடுத்த தலைமுறைக்கு, நாம் இதே உபதேசத்தைக் கொடுத்தோமானால், அது சரியாக வராமல் போகலாம்; ஏனென்றால் அவர்கள் வேறு எதையோ 'சரி, தவறு' என்று நினைக்கலாம். நாம் செய்தவற்றையே அவர்களையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தும்பொழுது, நாம் அதை ஒரு நல்லொழுக்கமாகவும், மனிதாபிமானமாகவும் அல்லது சுயக்கட்டுப்பாடாகவும் மட்டுமே போதிக்கிறோம். நாம் அவர்களுக்கு உயிரற்ற, சாரமற்ற ஒரு சட்டத்தையே தருகிறோம்.

ஆனால், அதற்குப் பதிலாக, நம் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கையைத் தரும்பொழுது, நாம் அவர்களுக்கு விழிப்புணர்வையே தருகிறோம்.

மனசாட்சியோடு எப்பொழுதும் ஒருவர்தான் துன்பப்படுகிறார். வாழ்வை அனுபவித்தாலும் சரி அல்லது துறவு வாழ்க்கையை மேற்கொண்டாலும் சரி, அவரால் மகிழ்ச்சியாய் இருக்க முடிவதில்லை. அனுபவிக்கும்பொழுதும், அதைப் பற்றிய குற்றவுணர்ச்சியால் துன்பப்படுகிறார்; துறந்து விடும்பொழுது, அதை இழந்துவிட்டோமோ என்று வருந்துகிறார். இரு வகையிலும் அவர் வருந்துகிறார்.

ஒருபோதும் மனசாட்சியை மட்டும் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்காதீர்கள். வாழ்க்கையைப் பற்றிய புரிதலைக் கொடுங்கள். நான் இதைத்தான் 'விழிப்புணர்வு' என்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய புரிதலைத்தான் விழிப்புணர்வு என்கிறேன். அவர்களே அனுபவித்து, ஆராய்ந்துகொள்ள அனுமதியுங்கள்.

நான் நல்லொழுக்கத்தை நம்பவில்லை. நான் விழிப்புணர்வு அனுபவத்தை நம்புகிறேன். நான் நிச்சயம் மனசாட்சியை நம்பவில்லை ; விழிப்புணர்வையே நம்புகிறேன்.

மனசாட்சி சமூகத்தால் நமக்குக் கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. மனப்பாங்கு. விழிப்புணர்வு என்பது நம்முடைய இயல்பு.

இயற்கையாகவே, நம்முடைய முழு வாழ்க்கையையும் ஒரு சடங்காகச் செய்துவிடுகிறது. நாம் எதையும் செய்யும் முன்பாக, நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதை நாம் சீர்த்தியுடன் செய்வோம்.

நாம் செய்து கொண்டிருக்கும் செயலுக்கான அர்த்தத்தைத் தர்க்கரீதியாக நாம் தெரிந்துகொள்ளவில்லையென்றால், நாம் நம்மை அதற்குள் முழுமையாக ஈடுபடுத்தி, அதற்காக நம்மை அர்ப்பணித்துக்கொள்ள மாட்டோம்.

கிருஷ்ணர், தன்மையும், எல்லா விதிமுறைகளும்கூட களமே என்று சொல்கிறார். அவை பருப்பொருளே, அவை சக்தி அல்ல, அவை உங்களுடைய 'இருப்பு'ம் அல்ல, அவை நீங்கள் அல்ல. இங்கே எதைக் குறிப்பிட்டாலும் அது நீங்கள் அல்ல.

நாம் என்னவாகவெல்லாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளும் அந்தத் தருணத்தில், நாம் அந்தத் தளைகளிலிருந்து விடுதலையாகிறோம் என்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்.

நாம் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும்கூட, தெரிந்துகொண்டால் அதற்குப் பின் நாம் அவற்றின் அடிமைகளாக இருப்பதில்லை!

நாம் செய்து கொண்டிருக்கும் செயலுக்கான அர்த்தத்தை நாம் தர்க்கரீதியாகத் தெரிந்துகொண்டால் மட்டுமே, அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்!

உங்கள் விருப்பத்திற்கு எதிராக ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும்வரை, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அதை 'அடிமைத்தனம்' என்றே சொல்லலாம். நீங்கள் இந்த உடல், மனத்தோடு வாழ்ந்தாலும்கூட, விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் அவற்றின் அடிமை இல்லை.