அன்போடு சாப்பிடுங்கள்
பழைய மற்றும் கெட்டுப்போன தாமஸிக உணவுகளை உண்பதற்கு பாரம்பரியம் தடை விதிக்கிறது
உணவின் தாய்மை மற்றும் உணவின் இயல்பின் அடிப்படையில் அமைந்த ஒரு பொதுவான உணவுமுறையைக் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
பழைய தாமஸிக உணவுகளை உண்பதற்கு பாரம்பரியம் தடை விதிக்கிறது என கிருஷ்ணர் விளக்குகிறார். சமைத்த சில மணி நேரங்களுக்குள் உணவை உண்டுவிட வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. நேரங்கழிந்த உணவை உண்ணக்கூடாது.
தற்போது நாம் உணவை மாதக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறோம்! எப்படி நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் ?
மக்கள் அரிதாகவே புத்தம் புதிதான உணவைச் உண்கின்றனர். ஒவ்வொன்றையுமே தனித்தனியாக முன்கூட்டியே தயார்செய்து வைத்துக்கொண்டு, பிறகு அவற்றைக் கலந்து மின்னடுப்பில் வைத்து சூடுபடுத்தி உண்கின்றனர். இதுபோன்ற உணவுகளையே உண்ணும் மக்களுக்கு என்ன மாதிரியான மரபணு மாற்றம் நிகழும் என்பதை கடவுள் மட்டுமே அறிவார்.
சமைத்த சில மணி நேரங்களுக்குள் உண்ணுங்கள். 'சமைக்காத உணவையே சாப்பிட வேண்டும்' என்று சிலா் சொல்கிறார்கள். அப்படி, உணவைச் சமைக்காமல் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நெருப்பும், வெப்பமும் நல்ல சக்திகள்தான். ஆனால் எந்த வகையான பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கப் படும் உணவுகள் நோய்களையே தரும், சக்தியைத் தராது.
உணவை எப்படிச் சமைக்க வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதையே நாம் மறந்து விட்டோம். பல்பொருள் அங்காடிகள்தான் (Super market) உணவு வகைகள் விளையுமிடம் என குழந்தைகள் நினைக்கும் காலம் வெகு தூரம் இல்லை.
அவர்களுக்கு விவசாயம் பற்றிய, பயிர்களைப் பற்றிய அறிவு இருக்கப் போவதில்லை. ஏனெனில், தற்போது நாம் பயன்படுத்தும் பூக்கள்கூட செயற்கையானவையாக இருக்கின்றன. நாம் அவற்றைத் தொடும்போது, அந்தப் பிளாஸ்டிக் நம் விரல்களைக் காயப்படுத்துகிறது.
போன்ற இது இரசாயனங்கள் தேவைப்படுகின்றன. நாம் நமக்குள் சக்கிக்குப் பதிலாக இரசாயனங்களைப் புகுத்தினால், நம்மால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் ?
நாம் ஓடிக்கொண்டே சாப்பிடுகிறோம். சாலையில் நடந்துகொண்டே, ஒரு கையால், அலைபேசியைக் காதருகில் வைத்து பேசிக் கொண்டும், மற்றொரு கையால் பர்கரை வாயில் திணித்துக்கொண்டும் செல்லும் பலரை நான் அமெரிக்காவில் பார்க்கிறேன். இதை அவர்கள் பன்முகத்
திறன் என்கின்றனர். மனச் சோர்விற்கும், மன அழுத்தத்திற்கும், நோய்களுக்குமான சுலபமான வழி இதுவே!
நம்மால் இவ்வகையில் அவமதிக்கப்பட்ட உணவு, இயற்கையாகவே நம்மை அவ மதிக்கவே செய்யும். இது நம்முள் சில இடங்களில் தங்கிவிடுகிறது. விளைவு ... ஆரோக்கியக்கேடு நம்மைப் பீடிக்கிறது. நல்ல உணவான அப்பிளை இந்த முறையில் சாப்பிடுவதே மோசமானதென் றால், மோசமான உணவான பர்கரை
நம்மால் அவமதிக்கப்பட்ட உணவு, இயற்கையாகவே நம்மை அவமதிக்கவே செய்யும். இது நம்முள் சில இடங்களில் தங்கிவிடுகிறது. விளைவு .. ஆரோக்கியக்கேடு நம்மைப் பீடிக்கிறது.
இந்த முறையில் சாப்பிடுவதைப் பற்றிக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள் !
புதிய, சுத்தமான உணவை அமைதியாகவும், அதில் உங்கள் கவனத்தைப் பதித்தும் உண்ணுங்கள்.
ஒவ்வொரு கவள உணவையும் கவனத்தோடும் நன்றியுணர்வுடனும் அன்புணர்வுடனும் உண்ணுங்கள். உண்பது, சமுதாய நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் ஒரு தருணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது அப்படி இருக்கவும்கூடாது. உங்களுடைய பொது அளவளாவல்களை உண்பதற்கு முன்போ அல்லது உண்ட பின்போ வைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் உண்ணும்பொழுது, நிகழ்காலத்தில் இருங்கள்.
கிருஷ்ணரின் வார்த்தைகள், உடல் - மன ஆரோக்கியத்திற்கான முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இயற்கை உணவுகள், அவற்றுக்கே உரிய தனித்துவமான மணத்தையும் நன்மைகளையும் கொண்டிருக்கின்றன. அவற்றோடு மசாலாக்களையோ அல்லது வாசனைப் பொருட்களையோ சேர்க்க வேண்டியதில்லை. அவை அவற்றின் மணத்தையும் நன்மைகளையும் அழித்துவிடுகின்றன.
பூமியிலிருந்து விளையும் பொருட்களை, அதே பசுமையோடு அக்னி சக்தியில் வைத்துப் பக்குவப்படுத்தி உண்ணுங்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அப்படி சமைத்த உணவை சில மணி நேரங்களுக்குள்ளேயே உண்டு முடியுங்கள், நீங்கள் ஸத்வத்தில் நிலைகொள்வீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள்.