பிரபஞ்ச சக்தியே, மனிதர்களின் சக்தி
கேள்வி: ஸ்வாமிஜி, ஆயுர்வேத மருத்துவம், ஒவ்வொருவரின் உடல்-மன அமைப்புக்கு ஏற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்று தானா?
ஆயுர்வேதம் என்பதற்கான சரியான அர்த்தம் 'வாழ்வைப் பற்றிய அறிவு அல்லது விஞ்ஞானம்' என்பதே. இது ஆரோக்கியத்திற்கான பண்டைய ஹிந்து முறை. ஆயுர்வேதம், மற்ற பெரும்பாலான மருத்துவ முறைகளைப் போன்று நோய்களைக் குணமாக்குவதில் கவனம் செலுத்துவதைப் பற்றியது அல்ல. அது தனி மனித வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தையும் முக்கிய அடிப்படையாகக் கொண்டது.
ஆயுர்வேதக் கோட்பாடு, பிரபஞ்சத்துடன் நமக்கிருக்கும் உறவுமுறை யிண் அடிப்படையில் அமைந்ததே.
பிரபஞ்சத்தின் அதே சக்திதான் நம்முள்ளும் உள்ளது என்கிற மூலக் கருத்திலிருந்துதான் ஆயுர்வேதம் உருவானது.
தைத்ரிய உபநிடதம், பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஐம்பூதங்களின் சக்தியைப் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் விவரிக்கிறது. பிரபஞ்ச சக்தியிலிருந்து, முதலாவதாக, ஆகாசம் எழுகிறது. ஆகாச ்த்திலிருந்து வாயு உருவாகிறது. வாயுலிலிருந்து அக்னி தோன்றுகிறது. அக்னியானது ஆப -தண்ணீரைத் தோற்றுவிக்கிறது. நீரிலிருந்து ப்ரு 'த்வி - மண் உருவாகிறது. மண்ணிலிருந்து, ஜீவராசிகளின் உருவாக்கம்.
தாவர மூலிகை உணவுகளில் நிறைந்திருக்கும் பிரபஞ்ச சக்தியின் இந்த ஐந்து மூலக்கூறுகளே, எல்லா ஜீவராசிகளின் வாழ்வாதரமாக இருக்கின்றன. ஆயுர்வேகும் சக்தி ஆதாரங்களையும் (Source of Energies), சக்திகளையும் (Energies), சக்தி தாங்கிகளையும் (Energy carriers), சக்தி நுகா்வோர்களையும் (Energy consumers) ஆன்மிக முறையில் இணைக்கிறது. அதனால் உணவு என்பது ஆரோக்கியத்திற்கான முறையின் ஒர் உள்ளார்ந்த பாகமாக இருக்கிறது.
மனிதர்கள் வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்று விதமான தோஷங்களை உடையவா்களாக இருக்கிறார்கள் என ஆயுர்வேதம் வகைப்படுத்துகிறது. இம்மூன்று விதமான தோஷங்கள், நம்முடைய செயல்களுக்குக்
போன்றவை அல்ல; நம்முள் உச்சமாக இருக்கின்ற சக்திகளின் கலவையே அவை. உதாரணமாக, நமக்குள் இருக்கும் ஆகாச மீ மற்றும் வாயுவின் கலவையே வாதம் என்பது.
ஆயுர்வேத முறையில், பகுத்தாய்வுசெய்து நமது உடல் - மனத்தின் இயல்புகள் எந்தப் பிரிவைச் சார்ந்திருக்கின்றன என்பதைக் கணித்துவிட முடியும்.
ஆயுர்வேதம், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற
ஆயுர்வேதம், நோய்களைக் குணமாக்குவதில் கவனம் செலுத்துவதைப் பற்றியது அல்ல. அது, தனி மனித வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தையும் முக்கிய அடிப்படையாகக் கொண்டது.
வெவ்வேறு வகையான உணவு வகைகளை, இனிப்பு, உறைப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவைகளின் அடிப்படையில் பரிந்துரைக்கிறது. எந்தப் பிரிவினருக்கு எந்தச் சுவை ஆரோக்கியமானது என்பதையும், அதன் அடிப்படையில் எந்த மாதிரியான காய்கறிகள், பழங்களை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதையும் பிரத்யேகமாகப் பரிந்துரைக்கிறது.
உணவு, முழுமையான ஆயுர்வேத முறையில் அமைவதற்கு உதவும் சமையல் முறைகளையும் அது குறிப்பிடுகிறது.