KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/தானம், அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

தானம், அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும்

பாரம்பரியத்தில், யாகம், ஹோமம் போன்ற அக்னிச் சடங்குகள், தெய்வங்களை செய்யப்படவில்லை. அவை, எல்லா உயிர்களுக்கும், ஏழைகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்ற மிக ஆழமான கருத்தில்தான் செய்யப்பட்டன.

ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயமுமே, தகுதிவாய்ந்த ஏழைகளுக்குத் தாரம் அளிக்க வேண்டுமென்ற ஒரு முக்கிய அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் எவருமே வெறுங்கையோடு திரும்புவதில்லை.

ரிஷிகளும் புரிந்துகொண்ட, அனுபவித்த யாகங்களைச் செய்தார்கள். அவர்கள், தங்களுக்கென்று தனி விருப்பம் எதுவும் கொண்டிருக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில், ஒரு தினசரி வழக்கமாகவே இவற்றைச் செய்தார்கள். தெய்வங்களும் இயற்கையும் மகிழ்ச்சியடைவதால் பொழியப்படும் அருள்மழையில், மனிதகுலம் சடங்குகளை நடத்தினார்கள். இவை, ஸ்தீவ குணத்தின் சுயநலமில்லாச் சமா்ப்பணங்கள்.

ரீஷிகளும் ஞானிகளும், தங்களுக்கென்று தனி விருப்பம் எதுவும் கொள்ளாமல், யாகங்களைச் செய்தார்கள்.

யுதிஷ்டிரர் போன்ற பெரியோர்களும்கூட அஷ்வமேத யாகம், ராஜஸூய யாகம் போன்ற யாகங்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள், தங்களின் வீரத்தைப் பறைசாற்றவும், மற்ற அரசர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே இவற்றைச் செய்தார்கள். இவை ரஜஸ் தன்மையின் அகங்கார வெளிப்பாடுகள்.

எனினும், அவர்களின் செல்வங்களைத் தாராளமாக ஒரு தருணமாகவும் அவை இருந்தன.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மற்றொருபுறம் அசுரா்களால், கொடூரத் தன்மையான பலத்தை வேண்டுவதைத் தவிரவேறெந்த நல்ல நோக்கத்தையும் அடிப்படையாகக் கொள்ளாத யாகங்களும் செய்யப்பட்டன. அவற்றில் அறமோ அல்லது தாராள மனப்பான்மையோ கிஞ்சித்தும் இருக்கவில்லை, மேலும், வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் எந்த நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை. இவை, சுயநலக் காரணங்களுக்காக மட்டுமே செய்யப்பட்டன.

இளம் நசிகேதனின் தந்தை, தாம் செய்த வேள்வியின் இறுதியில், வயதான பால் சுரக்காத பயனற்ற பசுக்களைத் தாநமாக வழங்கியபோது, அச்சிறுவன் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில், "தந்தையே,

நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? மதிப்புமிக்க பொருட்களையே தாநமாகக் வழங்க வேண்டிய தருணத்தில், உபயோகமற்ற பொருட்களை வழங்குகிறீர்கள், வேறெதையும் நீங்கள் வழங்க என்னைத் தாரமாகக் கொடுத்துவிடுங்கள், ' என்றான்.

அறியாமையிலும், அதன் விளைவாக எழுந்த ஆழமான கோபத்திலும் சிக்குண்ட அவன் தந்தை அவனையே யமனுக்கு கொடுத்துவிட்டார்.

கொடுப்பதனால், நாம் எதையாவது இழக்க நேர்ந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், கொடுக்கப்படும் ஒரு தாநம் நேரடியாக நம்மை ஜீவன்முக்திக்கு எடுத்துச்செல்லும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து தாநத்தின் மதிப்பு அளவிடப்படுவதில்லை. கொடுப்பதனால், நாம் எதையாவது இழக்க நேர்ந்தாலும், அந்த இழப்பு நம்மை வருத்துவதாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதையும், மேலும் கொடுக்கிறோமா என்பதையும் பொறுத்தே அளவிடப்படுகிறது. இதுபோன்றதொரு தாரம் நேரடியாக ஜீவன்முக்தியை நல்கும்.

பல மக்கள், அருமையான நோக்கத்தோடுதான் தானம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள், தங்கள் வாழ்க்கைமுறையை எவ்வகையிலும் பாதிக்காத வகையில், தங்கள் செல்வத்திலிருந்து ஏதோ ஒரு சிறுபகுதியைக் கொடுக்கிறார்கள். அது தாரமாகாது. அது தியாகமே கிடையாது.

பலபேர் ''ஸ்வாமிஜி, என் சொத்துக்கள் அனைத்தும் உங்கள் ஆசிரமத்திற்கே வேண்டுமென, நான் சட்டப்படி உயில் எமுதி வைக்கின்றேன்,'' என்பார்கள்.

மரணத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் கொடுப்பதில், என்ன முக்கியத்துவம் இருக்கிறது, அதுவொரு அரிய செயலா? எப்படியாயினும், உங்களோடு எடுத்துச்செல்ல முடியாது.

மரணத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் கொடுப்பதில், என்ன முக்கியத்துவம் இருக்கிறது ? எப்படியிருந்தாலும், உங்களால் அவற்றை உங்களோடு எடுத்துச் செல்ல முடியாது.

உண்மையான தாரம் என்பது உங்களைப் பாதிக்க வேண்டும். அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும். இருந்தாலும் நீங்கள், அதை முழு மனத்துடனும் சந்தோஷத்துடனும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலும் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான சரணடைதலின் சாரம். அதுவே பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்வதற்கான ஊக்கம்.

செல்வம், உங்களைத் தேடிவரும்

தங்கள் புகைப்படங்கள் ஊடகங்களில் வரவேண்டுமென்பதற்காக அல்லாமல், பல செல்வந்தர்கள் செய்யும் அருமையான நன்கொடைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை. இயலாதவர்களுக்கு உதவ வேண்டும், தங்களிடம் இருப்பதைத் தேவைப்படுகின்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நல்ல நோக்கத்தில்தான் கொடுக்கிறார்கள். இந்த மனப்பான்மை அவர்களுக்குப் பலன் அளிக்கும். இந்தத் தாராள மனப்பான்மையின் வாஸனை அவர்களுடைய ஆன்மாவில் நிலைத்திருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இருந்தாலும், நன்கொடை என்பது ரூஜா மன அமைப்பிலிருந்தே செய்யப்படுகிறது. நிலையிலான தாரத்திலிருந்து ஸத்வ நிலையிலான தூரத்திற்கு மனிதர்கள் உயரும்போது, செல்வம் அவர்களைத் தேடி வரும். செல்வத்திற்கு

அதிபதியான தேவி லஷ்மியை அவர்கள் அழைக்க வேண்டியதில்லை; அவரே அவர்களைத் தேடி வருவார்! ஏனெனில், இந்த மக்களே மனித குலத்திற்குப் பயனளிக்கும் பாதையாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார்.

செல்வத்தையும் அதிகாரத்தையும் வேண்டியதில்லை. அவை மாபெரும் சக்திகள். நமக்குள் காவத்தை ஏற்படுத்தாமல், நம்முடைய ஜீவன்முத்திக்கு வழிவகுக்கும் வகையில், அவற்றை எப்படிக் கையாள்வது என்பதுதான் பிரச்சினை.

உதாரணமாக, இராவணனுக்கும் ஜனகருக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். ஜனகர் ஒரு கிராஜ ரிஷி. அதாவது ஓர் அரசா். ஆனால் ஒரு துறவியாகவும் இருந்தவர். அவர் நாட்டை ஆண்டார். ஆனால் அந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் தம்முடைய உடைமைகளாக்கருதவில்லை. அவை பிரபஞ்சத்திற்குச்சொந்தமானவை என்பதை உணர்ந்து, ஸாக்ஷியாகஇருந்து, அவற்றைக் கையாண்டார்.

மற்றொருபுறம், இராவணன் ஒரு சிறந்த தமஸ்வியாக இருந்து, அசாதாரணமான அகங்காரத்திற்கும் புலனின்பங்களுக்கும் ஆட்பட்டிருந்தார். அதுவே அவரின் அழிவிற்குக் காரணம்.

பிரபஞ்சம், அபரிமிதமான வளமை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு எதற்கும் பற்றாக்குறை இல்லை.

நமக்கு என்ன தேவையோ, அதை நாம் பெறுகிறோம். பிரச்சினை என்னவென்றால், நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவில்லாமல் இருக்கிறோம். நம்முடைய ஆசைகள் அளவிட முடியாதவை.

இந்தப் பூமியில் வாழும் எல்லோருடைய 'தேவைகளையும்' பிரபஞ்சத்தால் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒரே ஒருவரின் 'ஆசையைக்கூட' பூர்த்தி செய்ய முடியாது என்று ஞானிகள் சொல்கிறார்கள். நமது பேராசைக்கு எல்லையே இல்லை.

பிர்பஞ்சம், அபரிமிதமான வளமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. பிர்பஞ்சத்தில் எதற்கும் பற்றாக்குறை இல்லை. 'கொடுக்க வேண்டும்' என்ற உங்கள் விருப்பம் எல்லையற்றதாக இருக்கட்டும். 'பெற வேண்டும்' என்ற உங்கள் விருப்பம் பூஜ்யமாக ஆகட்டும். அதன்பிறகு, செல்வம் உங்களைத் தேடிவருவதைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.