KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்

  • 17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, சீர்த்தை, நிஜத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தபஸ் என்று சொல்லப்படுகின்றன.
  • 17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேத நூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக் கூடிய தபஸ் என்று சொல்லப்படுகின்றன.
  • 17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனத்தால் ஆற்றக்கூடிய தபஸ் எனப்படுகின்றன.
  • 17.17 பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தபஸ், ஸாத்வீகமானது என்று சொல்லப்படுகிறது.
  • 17.18 மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸிகம் எனச் சொல்லப்படுகிறது.
  • 17.19 முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சித்ரவதையுடனோ அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ், தாமஸம் எனப்படுகிறது.

கிருஷ்ணர், இங்கே எண்ணம், சொல், செயல்களில் உள்ள தபஸ் பற்றி விளக்குகிறார்.

தபஸ் அல்லது தவம் என்பது எளிமையான வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. எளிமையான வாழ்க்கை முறையை அமைல்க்ரு 'தத்தில் சியரிக்ரூர் என்கிறோம். அது, ஒருவருக்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஒருவர் எதற்காக ஏங்குகிறார் என்பதை அல்ல. இதை வெற்றிகரமாகப் பயிற்சி செய்பவரே தபஸ்வி.

ஒருவர் தம்மையோ அல்லது அல்லது பிறரையோ துன்புறுத்துவது தபஸ் அல்ல, ஒருவர் தம்மீதோ அல்லது மற்றவர்களின்மீதோ வேதனைகளைத் திணிப்பது தபஸ் அல்ல என்று கிருஷ்ணர் ஏற்கெனவே வலியுறுத்தியதையே, இங்கு மீண்டும் வலியுறுத்துகிறார்.

முறையைக் குறிக்கிறது.

இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் துன்பம், உடலுக்குத் தரப்படும் துன்பத்தை மட்டும் குறிக்கவில்லை. எண்ணங்களால் ஏற்படுத்துகின்ற துன்பமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

உடல், கடவுள் வாழும் ஆலயம் என்பதை மறந்து, ஒருவர் தம்மையும் அவமதித்துக் கொள்வதையே இப்படிப்பட்ட தவம் குறிக்கிறது.