பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)
17.10 தமோ குணமுடையவர்கள், யாமங்கழிந்த, சுவையற்ற, அழுகிய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள்.
சத்வ, ரஜஸ் மற்றும் தமோ குண இயல்புகொண்ட நபர்கள் உண்கிற உணவின் தன்மையைப் பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.
இந்த மனிதர்கள், எந்த மாதிரியான உணவை விரும்புகிறார்கள், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், எந்த மாதிரியான புரிதலை தங்கள் வாழ்க்கையில் உணர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் விவரிக்கிறார். இதில் மிகவும் முக்கியமான விஷயம் எந்த மாதிரியான புரிதலை அவர்கள் பெறுகிறார்கள் என்பதே.