உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
இறுக்கம் மறைய இயல்பாகி விடுங்கள்
- அறிவு தரும் செருக்கு! பதவி தரும் போதை! பணம் தரும் மிதப்பு! புகழ் தரும் மயக்கம்!
- இவைதான் ஒரு மனிதனுள் இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்கள்.
- જુન இறுக்கத்தோடு குடித்தனம் நடத்துவதால் ஒருவருக்குக் கிடைக்கும் பலாபலன்கள் ;
- சிரிக்கக் கஷ்டப்படும் முகம்!
- வெளியில் பகிர முடியாத கோகம் !
- எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத குணம்!
- 'அறிவு ஞானமாக வேண்டும், பதவி சேவையாக வேண்டும், பணம் பகிரப்பட வேண்டும், புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்', - இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதனுள் இனிமையை அழைத்து வரும் தேவைதைகளாக மாறிவிடும்.
- இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்களாக அவை இருக்க வாய்ப்பே இல்லை.
- જુન இறுக்கத்தால் இறுகிப்போன முகத்தசைகளுக்கும், உதடுகளுக்கும் குதூகலமான சிரிப்பும், வாழ்வும் பூரிப்பைத் தரும்.
- ન્દ્ર மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி.
போலிச் சுகம்
- வாழ்க்கை இயல்போடு கலந்து இயல்பாக செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும்.
- தன்னை உயர்த்திக் கொள்ளும்போது જી மனதிற்கு ஒருவகை போலிச் சுகம் கிடைக்கும். சில மனிதர்கள் இந்தப் போலிச் சுகத்திற்காகத்தான் கர்வத்தோடு நடந்து கொள்கிறார்கள்.
- மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போது பலரால் உயர்த்தப்படுகிறான்.
- 参 கர்வத்தை விட, தாழ்வு மனப்பாங்கோடு நடிப்பவருக்குப் பல மடங்கு போலிச் சுகம் கிடைக்கும்.
- அதன் விளைவுதான் - தன்னை மற்றவர்களிடம் தாழ்த்திக் கொள்வது. தன்னைத்தானே தரம் குறைத்துப் பேசிக்கொள்வது ... என்ற எல்லாமே.
- જ્વન தாழ்த்திக் கொள்வது வேறு, எளிமையாக வாழ்வது வேறு.
- இயல்பாக, இயற்கையாக இருப்பவர்கள் தங்களை உயர்த்தியும் சொல்ல மாட்டார்கள். தாழ்த்தியும் சொல்ல மாட்டார்கள். இவர்களிடம் எளிமை நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும். தங்களின் எளிய நிலையை எளிமையாகவே எப்போதும் வெளிப்படுத்துவார்கள்.
- 'எளிமை' என்பது ஒருவரிடம் જુન வெளிப்படுவது.
*
- புகழ்ச்சிக்காக மதிப்புக்காகத் தன்னையும், அறியாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டால்கூட அது பாதகமே. அது அகங்காரத்தை வளர்க்கும்
- யாருக்காகவும், எதற்காகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். யாரிடமும், எந்தச் சூழலிலும் உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.
- உங்களையும் அறியாமல் உங்களைக் கவ்விக் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் கழண்டு விழ ஆரம்பிக்கும்.