உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
குரு – சிஷ்யன்
ீ வா! அருகில் வா! என் அருகில் வா! என்னோடு கலந்துவிட வா! - என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துக்கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும், உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.
- உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை நீங்கள் திருப்பிப் பார்க்க, நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவதுதான் ஒரு குருவின் பணி.
- குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பன் சிஷ்யன்.
- ஒரு குருவின் நோக்கம் தனிமனிதனுக்குள் ஆனந்தத்தை மலர வைப்பதே.
- உண்மையான குருவிற்கு எந்தவொரு காலத்திலும் பஞ்சம் இருந்ததே இல்லை. ஆனால், உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம் இருந்துக் கொண்டே இருக்கிறது.