KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/ஞானிகளை நம்பாதே!Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ஞானிகளை நம்பாதே!

*

  • நம்பினால் 100% முழுமையாக நம்புங்கள், நம்ப முடியாவிட்டால் ஞானிகளின் கூற்றுக்களை 100% முழுமையாக நம்பாதீர்கள்.
  • ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள் அனைத்தும் முக்காலத்திலும் மாறாத சத்தியங்கள்.
  • ஒரு ஞானியின் கூற்றுக்களில் நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும்போது ... 1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு) பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு ஞானியிடம் இருந்து எடுத்துக்கொள்ளும்போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனியிடுகிறீர்கள்.
  • 2. காரணம், ஒரு ஞானி என்னதான் சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள் உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும், மன கண்ணோட்டத்தைப் பொருத்தும் அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து கொள்வீர்கள்.
  • 3. அரைகுறையாக ஒரு ஞானியின் கருத்தை நம்பும்போது உங்கள் மனக்குறைகள் உங்களுக்கு நிறைபோல தெரிய ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.
  • 4. ஞானியின் கூற்றை முழுமையாக நம்பினால் மாத்திரமே, சத்தியம் சத்தியமாக உங்களை வந்து சேரும். இல்லையென்றால் சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே உங்களுக்குள் நுழையும்.
  • 5. உங்களுக்குப் பிடித்தக் கருத்துக்களை மட்டும் பெற்று அகங்காரத்தை வளர்க்க ஞானிகள் தேவையில்லை. வீதியில் விற்கப்படும் சில தரம் கெட்ட புத்தகங்களே போதுமானது. தரம் குறைந்து பேசும் சில மேடைப் பேச்சாளர்களின் பேச்சுக்களே போதுமானது.

் 6. சத்தியத்தை முழுமையாக நம்பினால் மாத்திரமே அது உங்களுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் நம்புங்கள்! நம்புங்கள்!! நம்புங்கள்!!! நம்பிக்கைதான் வாழ்க்கை! நம்பிக்கைதான் எல்லாம்!

  • இல்லையெனில், நம்பாதீர்கள்! அரைகுறையாக நம்பி, அரைகுறையாகப் புரிந்து கொண்டு, 'அந்த ஞானி இப்படித்தான்

சொன்னார்... அவர் சொன்ன கருத்துக்களிலேயே இதுதான் சரி. எனக்கு பிடித்தது. அவர் ஞானிதான் ... அதுக்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த ஞானி அதன் மூலம் என்ன சொல்லவரார்னா ?' என்று வெட்டி வேதாந்தம் பேசி, உங்கள் ஞானியால்தான் இவர் இப்படி லூசு மாதிரி பேச ஆரம்பித்து விட்டார் என்று நினைத்து, ஒரு ஞானியை மற்றவர்கள் இழக்க நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது.

  • ஞானத்தையும், ஞானிகளையும் தொடக்கத்தில் ஆராய்ச்சி செய்வதுதான். மகாதவறு. அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை.
  • நம்பினால் 100% நம்புங்கள். வெட்டியாக பேச மாட்டீர்கள். வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள்…