உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஏன் மனமொடிகிறோம் ?
- மற்றவரின் சூழ்ச்சி நமக்குப் புரியாததால்தான், மற்றவர்கள் நம்மைக் குறை சொல்லும்போது நாம் மனம் ஒடிந்து போய்விடுகிறோம்.
- மற்றவர்களை நாம் குற்றப்படுத்தும்போது நம்முடைய குரூர உணர்வு திருப்தி அடைந்து, அது இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பித்து விடுகிறது.
- அது தப்பு இது தப்பு என்று மற்றவரிடம் குற்றஉணர்ச்சியைத் தூண்டி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பதுதான் உண்மையான தவறு.
இன்றிலிருந்து, மற்றவர்களின் தவறை சரிசெய்ய நேரத்தை வீணடிக்காமல், உங்கள் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து அதை சரிசெய்ய நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
- உங்கள் மீதே உங்களுக்கு மதிப்பு கூடும். உங்கள் மீது மற்றவர்க்கும் மதிப்பு கூடும்.
நேசம்-வேஷம்
நேசி'
- நேசம் புதிரானது.
- நேசம் என்பது பலர் எதிர்பார்த்தும் கிடைக்காத ஒன்று !
- பலர் மற்றவருக்குக் கொடுக்க முயற்சித்தும் கொடுக்க முடியாத ஒன்று! என்ன! குழப்பமாக இருக்கிறதா?
- நேசத்தைப் பற்றிப் பலர் பேசியிருந்தாலும் அதில் முக்கியமான சிலரின் கூற்றைத் தெரிந்து கொண்டால் உங்கள் குழப்பம் தீர்ந்துவிடும். புத்தா் - 'உன்னை நேசி' இயேசு - 'உன்னை நேசிப்பது போல் பிறரையும்
ரிஷி கூற்று - 'உன்னை நேசிக்காமல் பிறரை நேசிக்கவே முடியாது' இன்று மூன்று பேரின் கூற்றையும் தெரிந்து கொண்ட பிறகு கீழ்க்கண்ட உண்மைகளைப் புரிந்துகொள்வது வெகு சுலபம்.
- 'பிறரை நேசிக்கும் அளவுக்குத்தான் நீங்கள் உங்களை நேசிக்க முடியும். உங்களை நேசிக்கும் அளவுதான் பிறரை நீங்கள் நேசிக்கும் அளவு.
- வேஷம் அல்லது உள்வெறுப்பு கலந்த நேசமாக உங்கள் நேசம் இருந்தால் ... அது பிறரைத் தீண்டுவதைவிட முதலில் உங்களைத்தான் அதிகம் தீண்டும்'.
- நேசத்தின் வேஷம் கலையுங்கள்... நேசத்தின் தோஷமும் ( மனிதாபமின்மை ) நேசத்தின் தோஷமும் (ஆரோக்கியமின்மை ) உயிர்வாசத்தின் தோஷமும் (ஆனந்தமின்மை) நொடியில் பறந்தோடும். புது வழி பிறக்கும்.
பஞ்சு மனம்
- தவறான மனிதர்கள் உருவாவதற்குத் தவறான வளர்ப்புமுறை காரணமா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.
- வளர்ப்பு முறையில்தான் எப்போதும் தவறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. வளர்ப்பவரின் முதிர்ச்சியில்தான் எப்போதும் தவறு இருக்கிறது.
- குழந்தையைக் கண்டிக்க -குழந்தையின் மனோநிலை பற்றிய ஞானமும், வாழ்க்கையின் போக்கு பற்றிய ஞானமும் வேண்டும். குழந்தைக்குச் செல்லம் கொடுக்கவும் மேற்கூறிய இரண்டும் தேவை.
- குழந்தைகள் மூளையிலிருந்து செயல்படுவதில்லை. குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.
- உங்களது வார்த்தைகளையும், எதிர்பாா்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால் அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள். உங்களது முகபாவங்களையும், உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாக கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.
- உங்களுடைய 'முகமூடி' 'அழுத்தப்பட்ட உணர்வுகள்'
'வெறுப்புகள்' 'துக்கங்கள்' - ஆகியவை உங்களின் முகபாவங்கள் மூலமும் வெளிப்படும். அப்படியே அவை குழந்தைக்குச் சென்றுவிடும்.
- காரணம் குழந்தையின் மனம் பஞ்சு போன்று நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே கிரகித்துவிடுவதுதான்.
- இது சூட்சுமமான உண்மை.
- அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் ஆழ் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் கோபக்காரர்களாகவும், கலவரக்காரர்களாகவும் எளிதில் மாறி விடுவார்கள்.
- 'சண்டைச் சச்சரவு' இல்லாமல் 'அன்போடும்' 'பரிவோடும்' 'ஒருவருக்கொருவர் ஆதரவாக' இருக்கும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பு, விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும்.
- இதுபோல் அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனதிற்குக் கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்தல் என்பது எல்லாம் நஞ்சாகத் தெரியும்.
ூகள்ளம் கபடம் இல்லாமல் உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் மன முதிர்ச்சியே அந்த அமிர்தம்.
- உங்கள் குழந்தைகளுக்கு ... பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள். புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.
- குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொள்வதைவிட, உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.