உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள் ...
- இது தப்பு, அது தப்பு, என்று சுட்டிக்காட்டி மற்றவர்களிடம், 'தவறு செய்கிறோம்' என்ற உணர்வை உருவாக்க உதவும். 'தப்பு' என்ற வார்த்தை ஒரு வீச்சரிவாளுக்குச் சமம். வீச்சரிவாளை பயன்படுத்த அதை ... எப்போது ? எங்கே ? எதை ? வெட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் ? என்ற தெளிவு வேண்டும்.
- புத்தி தெளிவில்லாத பட்சத்தில் ... தன் சுய விருப்பு, வெறுப்புகளுக்காகவும் தடுமாறும் எரிச்சல் மனத்திற்காகவும் பல தலைகள் உருளும்.
- மற்றவரின் தப்புத்தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனித மன, குண உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பற்றிய உண்மை நிலவரமும் தெரிந்திருக்க வேண்டும்.
- இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் நம்மிடம் பல தவறுகளை வைத்துக்கொண்டு மற்றவரின் தவறைத் திருத்த முயற்சித்தால் ... கூரிய வீச்சரிவாளால் குத்திக் குத்தி ரணகளமாக்கப்பட்ட ஒரு புண்பட்ட மனத்தைத் தான் நம்மால் மற்றவர்களிடம் ஏற்படுத்த முடியும்.
- தேவையில்லாத மன, குணப் பிரச்சினைகளை நீக்கி ஒரு பண்பட்ட மனத்தை உருவாக்க முடியாது. புண்பட்ட மனத்தைதான் உருவாக்குவோம்.
- மற்றவர்களின் மனத்தைக் குத்திக் குத்தி ரணகளப்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
- ஈருடல் ஓருயிராக இருந்து மனம் ஒருமித்து வாழ வேண்டிய கணவன், மனைவி...
- வாழ்க்கைத் துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக் காண்பிப்பது அல்லது அவரின் தப்புத் தவறுகளை நினைத்து, நினைத்து தன்னைத்தானே புண்படுத்திக்கொள்வது ...
- என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியினா் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான்.