KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/எங்கே நிம்மதி? (கேள்வியல்ல - வேள்வி)Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

எங்கே நிம்மதி? (கேள்வியல்ல - வேள்வி)

பாதுகாப்பின்மையை (Insecurity) எதிர்த்தே வாழுப் பழகியதின் பக்க விளைவாக மனிதனைத் தொற்றிக் கொண்ட குணம்தான் 'பற்றுதல்'. நிஜப்பற்று நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். மனப்பற்று நிம்மதியையும், சந்தோஷத்தையும் திருடும். மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது - மனப் பற்று.

மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன்னுயிர் போலப் பாவிப்பது - நிஜப்பற்று.

மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளும், தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்தி அடைய முடியும்

நிஜப்பற்று: உண்மையான ஈடுபாட்டோடு, உங்களுடைய பொருள்களை முழுமையாக அனுபவிப்பது, சொந்தங்கள் மற்றும் நண்பர்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களோடு இனிமையான அன்பும், உறவும் கொண்டிருப்பது, என தன் வாழ்வை முழுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.

மனப்பற்று ; உண்மையான ஈடுபாடில்லாமல், பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பரமாக உங்களுடைய பொருள்களை விரையம் செய்வது, பொறுமையின்மையால், வெறுப்பால், சலிப்பால், கா்வத்தால் உங்களுடைய சொந்தங்களையும், நண்பர்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் கடமைக்காக வாழ்வதுதான் மனப் பற்று. இது மனநிம்மதியைக் குலைத்து விடும். உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள் பற்றுதல்தான்.