நீங்கள் எல்லாம் தெரிந்தவரா?
- பதில் தெரிந்தால் கட்டத்தில் டிக் செய்யவும். பதில் தெரிந்தவர், உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவர். தூங்கும்போது உங்கள் உடலுக்குள் எங்கே இருக்கிறீர்கள் ? எப்படி இருக்கிறீர்கள் ? □
- மனம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சொல்லுவோம். மனம் இருப்பது நமக்குத் தெளிவாய் தெரியும். அது எங்கே, எப்படி இருக்கிறது ? 1
- பிறப்பதற்கு முன் எங்கே இருந்தீர்கள் ? □ *
- நம்மையெல்லாம் ஆட்டுவிக்கும் இறைவன் அல்லது இயற்கைச் சக்தி எங்கே?
- ஏன் இந்த பிரபஞ்சம் உருவானது ?
- சில புத்தகங்களில் படித்த தத்துவக் கருத்துக்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு 'எனக்கு அது தெரியும், இது தெரியும்' என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
- அறிவியல், மருத்துவம், விஞ்ஞுானம், மொழி, கலை. வியாபாரம், அரசியல் என்ற எல்லாமே வாழ்வின் சிறு சிறு பகுதிகளே.
அந்தத் துறையின் உச்சிவரை ஒருவர் தெரிந்து கொண்டால்கூட, அது முழுழு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதாகாது.
அப்படியே வாழ்வைப் பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தாலும்…
- நீங்களே உணர்வுப் பூர்வமாக உணர்ந்து பார்க்காதவரை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்துகொண்ட ஜீரணமாகாத (அனுபவமாகாத) கருத்துக்களுக்கும், ஜீரணமாகாத உணவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
- கடைசியாக ஒரே ஒரு ஒரு சத்தியத்தைச் சொல்லி இந்தக் கட்டுரைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.
நமக்குத் தெரியாது என்ற ஒரு விஷயம் தெரியாத வரை, 'நமக்குத் தெரியாது' என்ற ஒரு விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது. 'நமக்குத் தெரியாது' என்ற ஒரு விஷயம் தெரிந்தால், குறைந்தது 'நமக்குத் தெரியாது' என்ற ஒரே ஒரு விஷயமாவது நமக்குத் தெரிய வரும். தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்.
இதுதான் அகங்காரம்
- உண்மையில் யாருடைய மனதையும், யாராலும் புரிந்து கொள்ள முடியாது. காரணம், மனம் என்றாலே அது ஆழமானது, அதனால் மனத்தை அவ்வளவு எளிதாக யாரும் புரிந்து கொள்ள முடியாது. இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும்.
- ત્વન્યું હતું. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகத்தின் அருமை முகபாவனையில் தெரியும்.
- જુન வயிற்று வலி, நோகும் அளவுக்கு ஒருவருக்கு இருக்கும்போது, அவர் சிரிக்க முயன்றால் அவரது சிரிப்பு எப்படி இருக்கும் ?
கட்டாயத்தின் பேரில், சூழ்நிலைக்காக அந்த நபர் சிரிக்க முயற்சித்தாலும், சிரிப்பு உண்மை அல்ல, வெறும் நடிப்பு என்று முகபாவனைகள் காட்டிக்கொடுத்து விடும்.
- எவ்வளவுதான் அந்த நபர் இயல்பாகப் பேசிச் சிரிக்க முயற்சித்தாலும், அவரது வலியின் வெளிப்பாடு முகபாவனையில் வெளிப்பட்டே தீரும்.
- சாதாரண வயிற்று வலியே இந்த அளவுக்கு நமது முகபவானையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதே ...
- நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், நமக்கு மட்டுமே தெரிந்த மன வலி எந்த அளவுக்கு நமது முகபாவத்தையும், வார்த்தைகள் வெளிப்படும் விதத்தையும் பாதிக்கும் ?
- જુન அது எந்த அளவு நமது சுமூகத்தன்மையைப் பாதித்து சமுதாய வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும் ? யோசியுங்கள்.
- பல காரணங்களால் அகம் காரமடைகிறது.
- அகம் காரமடைந்து, அகத்தின் சுகம் 參 குறைந்து, அகங்காரம் வலுப்பெற வலுப்பெற மனவலியானது அதிகமாகிறது.
- சட்டென்று வரும் கோபம், 发 எதிர்பாராமல் வரும் படபடப்பு, காரணமே இல்லாமல் வரும் கவலை, சம்பந்தமே இல்லாமல் வரும் வெறுப்பு, ஆகியன, ஒருவரின் அகம் காரமடைந்து, அது அகங்காரத்தினால் பாதிக்கப்பட்டிருக்கதற்கான மிக முக்கிய அறிகுறிகள்.
- જ્ கோபம், படபடபடப்பு, கவலை, வெறுப்பு ஆகிய அனைத்துமே அகங்காரத்தின் வெளிப்பாடுகளே.
心 கடலில் குளித்த பிறகு, சாதாரண நீரில் குளிக்க வேண்டும். இல்லையென்றால், நம் உடலில் படிந்த ஒரடுக்கு உப்பு நம் நிம்மதியைக் கெடுத்து விடும். அதுவும் நம் தோலில் ஒரு புண் இருக்கும்போது அதில் கடல் நீர், உப்பு நீர் பட்டு விட்டால் நமக்கு ஏற்படும் எரிச்சலுக்கு அளவே இருக்காது. அகங்காரம் இதே வேலையைத்தான் நமக்குள் செய்கிறது. அகங்காரம் ஆங்காங்கே நமது மனதில் புண்களை ஏற்படுத்துவதால்தான் மனவலியும், வேதனையும் வாழ்வின் சாதாரண அம்சங்களில்கூட வெளிப்படுகிறது.
- な கர்வம் அகங்காரத்தின் ஒரு சிறு வெளிப்பாடு மட்டுமே. திமிர் மட்டுமல்ல, திண்டாட்டம் மற்றும் தடுமாற்றம்கூட அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தான்.
- 发 அகங்காரமில்லாதவன் எந்த ஒரு குழ்நிலையிலும் தடுமாற மாட்டான்.
• உங்களின் அகங்காரங்களைப் பட்டியலிடுங்கள் ... நம் நிம்மதியையும், நிதானத்தையும்
நம்மிடமிருந்து பறிபோக வைக்கும் எல்லா உணர்ச்சிகளும் அகங்காரங்களே! இந்த சத்தியத்தை ஆழமாகப்புரிந்துகொண்டால் மட்டுமே அகங்காரத்தை வேரறுக்க முடியும். அதிலிருந்து வெளிவர முடியும்.
ூ உங்களை மையமாக வைத்து வெளியில் நடக்கும் சண்டைச் சச்சரவுகளையும், சஞ்சலங்களையும் வழிகாட்டியாகக் கொண்டு உள்ளே இருக்கும் மனவலியின் அளவைக் கண்டுபிடியுங்கள். அகங்காரத்தின் வீரியம் புரியும்.
அகத்தின் காரத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள், அகத்தின் சுகம் தானாகவே அதிகமாக ஆரம்பிக்கும். இல்லறம் நல்லறமாகவே இருக்கும்.