KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் இறைவன்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் இறைவன்

இறைவனைத் துதிக்கிறேன்! நமஸ்கரிக்கிறேன் ! புகழ்கிறேன் ! என்று ஆரம்பித்த மனிதன், 'இறைவன் ஒரு தனி நபர்' என்று நம்ப ஆரம்பித்ததை, வெம்பும் மனது பிடித்துக் கொண்டது, அதோடு நில்லாமல் இறைவனின் அன்பு, கருணை, கோபம் ஆகியவற்றைத்தான் ... 'அன்பு' என்று நினைக்கும் பாசம்; 'கருணை' என்று நினைக்கும் பட்சாதாபம்; 'கோபம்' என்று நினைக்கும் எரிச்சல் ஆகியவற்றோடு சேர்த்து குழப்பிக் கொண்டான். இந்தக் குழப்பம்தான் மனிதன் இறைவனை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது. இறைவன் என்றழைக்கப்படும் இறைசக்தியின் ... அன்பு, கருணை, கோபத்திற்கும் மனிதனின்... அன்பு, கருணை, கோபத்திற்கும் சம்பந்தமே இல்லை. மனிதன் தன் மனக் கண்ணோட்டத்தின்படி இறைவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை இறைவனை தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றான்.