உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஆரோக்கியமான மனிதன்
- மக்கள் தெய்வமாக, வீடு மாளிகையாக உலகம் சொர்க்கமாக - நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஆரோக்கியமான மனிதர்.
- ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள்.
- ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம் ஆரோக்கியத்தோடு இருந்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை - இது 'ஆனந்த சூத்திரம்'.
- உடல் பிரச்சினை நோய். மனப் பிரச்சினை - வேதனை. உணர்வுப் பிரச்சினை - ஆரோக்கியக் குறைவு.
- ஆரோக்கியம் குறைய ஆரம்பித்ததிலிருந்தே நோய் உருவாக ஆரம்பிக்கின்றது. நோய் திடீரென்று தோன்றுவது இல்லை. தோன்றவும் முடியாது.
- ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து - எதிர்பாராத தருணத்தில் அது நோயாக வெடிக்கிறது.
- நோய் என்பது பல நாட்களாக இருக்கும் ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.
- உங்கள் உற்சாகம், சந்தோஷம் குறைய ஆரம்பிக்கும்போதே, உங்களின் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.
- மனதளவில் புண்பட்டு இருப்பவர்களே அடுத்தவர்களின் மனதைப் புண் படுத்துவார்கள்
- உங்களுடைய அணுகுமுறை ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஆரோக்கியமான உறவுகள் தானாகக் கிடைக்கும்.