KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/உங்கள் உடல் ஒரு கோயிலா?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

உங்கள் உடல் ஒரு கோயிலா?

  • காளையால் இழுக்க முடியாத அளவுக்கு அதிக சுமையை வைத்து, 'இழு!' என ஏவும்போது அது தடுமாறினால் அது தவறு செய்வதாக பொருள்படுமா ?
  • உடலில் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான அளவு உணவை உள்ளே தள்ளிவிட்டு ...
  • 'எனக்கு ஜீரணக்கோளாறு' என உடல் மேல் பழிபோட்டால் என்ன அர்த்தம்! ? யார் பொறுப்பு ... சொல்லுங்கள்.
  • 'You are Food' என ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.
  • 'Your eating habit tells, who you are' எனச் சொல்கிறது.
  • 'உணவுக்கும் மனித குணத்துக்கும் நேரடித் தொடர்புண்டு. நாவைக் கட்டுப்படுத்தியவன், தவ குணத்தையும் கட்டுப்படுத்தியவன்' எனச் சொல்கிறது வேதாந்தம்.
  • உண்ணும்போது சாந்தமாய் நிதானமாய் உண்ணமுடிகிறதா... ? 'போதும்' என்ற உணர்வு வந்ததும், காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல உண்ணுவதை நிறுத்த முடிகிறதா ... நாவிற்கு மட்டும் மதிப்பளிக்காமல் 'என் உடலுக்கு இந்த உணவு, இவ்வளவு உணவு பொருந்துமா?' என உடலை மதித்து உணவருந்துகிறீர்களா...

*

  • உடல் கோயில், உணவு பிரசாதம். நீங்கள்தான் அர்ச்சகர். உங்களின் இரப்பை என்னும் கற்பகிரகத்திற்குச் செல்லும் பிரசாதங்கள், பிரசாதங்கள்தானா ... ஒரு நாளின் மூன்று வேளையும் பூஜை புனிதமாக நடைபெறுகிறதா... ?
  • கோயிலுக்குள் அராஜகமோ, துஷ்பிரயோகமோ கூடாது. கோயிலின் புனிதம் காக்கப்பட்டால், அங்கு தெய்வ சக்தி விழித்துக் கொள்ளும். எல்லாம் சுலபமாகும்.