உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
மன்னித்து... மறந்துவிடுங்கள்!
- உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது ! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது! -இரண்டுமே எதிராளி அல்ல. நீங்கள்தான்.
- தொடர்ந்து உங்கள் உடலும், மனதும் கொதித்துக் கொண்டிருந்தால் மாத்திரமே. கோபக்கனல் மூலம் மற்றவர்களைச் சிறு தவறுக்காக கோபித்துக் கொண்டு சக்திவிரையம் செய்ய முடியும். வெறுப்பு கொள்ள முடியும்.
- இதில் யாருக்குப் பாதிப்பு அதிகம் ? கோபப்படுவனுக்கா? இல்லை பொங்கும் கோபத்தின் வெளிப்பாடான உங்கள் சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக் கொள்ளும் எதிராளிக்கா ? மன்னித்து விட்டால், மன்னித்த அடுத்த நிமிடமே கோப எரிமலை குளிர்ந்து விடும் ! உடலும், மனமும் இலகுவாகிவிடும் !
- கோபத்தால் சக்தி விரையமாவது மிச்சமாகும். பழி தீர்க்க யோசனை செய்யும் நேரம் மிச்சமாகும்.
- சக்தியும், நேரமும் மிஞ்சினால் பலன் பெறப் போவது,
- மன்னிப்பவரா? இல்லை,
- மன்னிக்கப்படுவரா ? யோசியுங்கள் !
- சுயக்கட்டுப்பாட்டுத் திறனைப் பொறுத்து கோபம் ஒரு சக்தி அல்லது கத்தி!
மன்னித்தல் ஒரு அருமருந்து!
- அகங்காரத்திலேயே மிகவும் மோசமானது 'நான் நல்லவன்' என்கிற நினைப்பினால் வரும் அகங்காரம் தான்.
- நான் நல்லவன் என்ற கற்பனைதான் பல விஷயங்களை 'கெட்டது! மோசம்!' என்று சுட்டிக்காட்டிக் கோபத்தை வளர்க்கும்.
- உங்களின் 'கெட்ட குணங்களையும்', மற்றவரின் 'நல்ல குணங்களையும்' மட்டுமே ஆராயுங்கள். கோபம் தணியும். சுயக்கட்டுப்பாடு மலரும்.
- மற்றவர்களை மன்னித்து விடுங்கள். அத்தோடு அதை மறந்து விடுங்கள். மறக்க முடியவில்லை என்றால் 'மன்னித்து விட்டேன்' என்ற பெயரில் வேஷம் போடுகிறீர்கள் என்று அர்த்தம். முழுழுமையாக
மன்னித்து விட்டால், மன்னித்தல் நிகழும்போது மறத்தலும் நிகழ்ந்து விடும்!
ஆனந்தப் பயணம்
ூ ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்யும் மூன்று தரப்பட்ட மனிதர்கள்: 'என்னுடைய வீட்டில் இருப்பவர்களை திருப்திப்படுத்தினால் போதும். இவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும். அதுதான்என் வாழ்க்கையின் நோக்கம்" - முதல் வகையினர்.
- ூ 'வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது. முதலில் நான் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். நான் திருப்தி அடைய வேண்டும்'. - இரண்டாவது வகையினர்.
- 'வெளி உலகில் அடையும் சந்தோஷமும், திருப்தியும் நிரந்தரமாக இருப்பதில்லையே. இந்த நிரந்தரத் தன்மைத்தான் நாம் முதலிலிருந்தே தேடுகிறோமோ ? ஒருவேளை அதுதான் ஆனந்தமா ? அதுதான் நிம்மதியா ?' - மூன்றாவது வகையினர்.
- வாழ்க்கையின் எல்லையை எட்டிப் பார்க்காதவரை, வாழ்க்கையின் நோக்கத்திற்கான விடை தெரியாது. நோக்கம் புரியாது. ஆனால் ஏக்கம் இருப்பது மட்டும் புரியும்.
- மனிதப் பிறப்பின் நோக்கமே நிலையான, நித்தியமான ஆனந்தத்தைப் பெறுவதுதான். ஆனந்தம் பெறும்வரை ஏதோ ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
- இப்படி வாழ்க்கையின் பல புரியப்பட வேண்டிய புதிர்களை விடுவிப்பது ஆன்மீகம்.
நீங்கள்... விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவிட்டாலும், நாம் அனைவரும் ஆனந்தம் நோக்கித்தான் பயணம் செய்துக் கொண்டிருக்கிறாோம். என்ற உண்மையைப் புரிந்து கொண்டு உற்சாகமாகுங்கள். 'ஆனந்தப் பயணம்' ஆனந்தமாக அமையட்டும்.