உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
பக்தி சக்தி
- பக்தி உணர்வு இல்லாமல் பெற்றவர்களும் மற்றவர்களும் சொன்னார்களே! என்பதற்காகக் கோயிலுக்குக் கடமைக்காக சென்று வந்தால் ... அவன் தன்னை ஆத்தீக வாதி என்று கூறிக் கொண்டாலும் அவன் ஒரு நாத்தீகவாதிதான். இப்படிப்பட்ட மனிதர்கள் ... பெயரளவில் ஆத்தீகவாதியாகவும், உணர்வளவில் நாத்தீகவாதியாகவும் இருப்பார்கள்.
彩 கோயிலுக்குச் சென்று பக்தியுணர்வோடு தெய்வ சந்நிதியில் சிறிது நேரம் அமர்ந்திருக்கும் போது - அங்கே இருக்கும் சக்தி களத்தால் சக்தியூட்டப்படுவதால்தான் நம் உடலில் புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் ஏற்படுகிறது. அப்படியென்றால், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
- அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல் சோர்வாகவும், மந்தமாகவும் இருப்பதற்குக் காரணம் சக்தியின்மையே. 'சக்தி குறைவே'.
- நம்முள் மனமானது அதைி இல்லாமல், சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு இருந்தால் அதற்கும் சக்தி குறைவே காரணம்.
- எனவே, ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கும் மனதுக்கும் சக்தியைக் கொடுப்பதற்குக் கற்றுக்கொண்டால்போதும்.
- எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணகர்த்தாவான சக்தி குறைப்பாட்டை சரிசெய்து நிம்மதியாக, ஆனந்தமாக இருக்கலாம்.
- பக்தியோடு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் தியானமே. தியானம் உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்களே பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு வழிமுறை.
அவமானம் என்னும் நாடகம்
- 'அவமானம்' என்பது நம் அந்தஸ்து, வயது, குலம், கோத்திரம் பொறுத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.
- பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி நம்மை விட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - 'உரிமை' (ஆஹா! எவ்வளவு உரிமை எடுத்துக்கிறார்கள்! எல்லாம் பாசம் ! )
- மாறாக! அந்தஸ்து, வயது, பதவி நம்மைவிட குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - 'அவமானம்' (கொஞ்சம் இடம் கொடுத்தால் என்மேல் எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம் )
- அவமானம் நிஜமா ? கற்பனையா ? பதில் - உங்களின் மனநிலையைப் பொறுத்தது.
- நிஜத்தில் அவமானம் - மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்.
- பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்:
- முதல் வகை : மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்பத் திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை. அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்கூட மாட்டார்கள். மந்த மனம் படைத்தவர்கள்.
- இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்வார்கள். புதிது, புதிதாகக் கண்டுபிடித்து, 'நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய்', 'என் மதிப்பென்ன ... ' என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.
- அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள் !
- மூன்றாவது வகை: அற்புதப் பிறவிகள். பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.
- நம் Ego-விற்கு விழும் அடியைத்தான் நாம் அவமானம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Ego-வை தொலைத்தவர்கள். அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.
- தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.
- எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு 'அவமானம்' என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.
*
அவமானத்தை மூன்று விதமாக அணுகலாம்: 1. அவமானத்தை அலட்சியப்படுத்துவது 2. அவமானத்தை எதிர்கொள்வது 3. அவமானம் என்னும் மாயையைத் தாண்டிச் செல்வது. மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.
அவமானத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதை அலட்சியப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்! அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள் அதைத் தாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அவமானத்தைத் தாங்கத் தெரிந்தவர்கள் அதைத் தாண்டக் கற்றுக்கொள்ளுங்கள்!
கோப சக்தி விரையம்
- நீங்கள் கோபப்படும் போது மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள்.
- கோபப்படுவதை அடக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, கோபத்துக்கான காரணத்தை ஆராயுங்கள்.
- தவறு நம் மீது இருக்கும்போது, நாம் ஏன் அடுத்தவர் மீது கோபப்பட வேண்டும் என்கிற ரீதியில் யோசித்துப் பாருங்கள்.
- நீங்கள் கள்ளம் கபடமில்லாதவர், தவறே செய்யாதவர் என்றால் யாராவது உங்களைப் பார்த்துச் சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா ?
- நாம் கோபப்படுகிறபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நம்மை விட வலிமை குறைந்தவர்களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் எப்போதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
- உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர் என்றால் அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம்.
- மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை.
- ஒரு மடங்கு வேலைக்குப் பல மடங்கு கூலி நாம் தருவதில்லை.
- ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு செய்து விட்டால் ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் கோபப்படுகிறோம்.
- ஒரு மடங்கு தவறுக்குப் பல மடங்கு சக்தியைக் கோபமாகக் கொட்டுகிறோம்.
- யாருக்கு இழப்பு அதிகம் ?
- யோசியுங்கள்.
- அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக் காட்டும்போது நம் கிரியா சக்தி அநியாயமாக வீணாகிறது.
- எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்தக் கிரியா சக்திதான்.
- அளவுக்கதிகமாகக் கோபப்படுகிறவர்கள் எளிதில் உற்சாகமிழந்து, மந்தமாவதற்குக் கோபத்தால் விரையமாகும் கிரியா சக்தியே காரணம்.
- கோப சக்தி வங்கியில் இருக்கும் பணத்திற்குச் சமம்.
- இடம் பார்த்து ! பதம் பார்த்து ! தேவை பார்த்து ! தேவையானவர்களுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
- சக்தி விரையம் செய்யாதீர்! சக்தியின்மையில் தவிக்காதீர் !
- சக்திச் சிக்கனம் தேவை இக்கணம்.