KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/டிதிர்ச்சியின் அளவுகோல்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

டிதிர்ச்சியின் அளவுகோல்

  • 'மனிதர்களின், குணம் மாறும் போது, நிறம் மாறும். தரமும் மாறும்'என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குணமுதிர்ச்சியினால் புரிந்து கொள்ள முடியும்.
  • மற்றவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பால் தடுமாறிக் கோபப்படும்போது, பதிலுக்கு நாமும் கோபத்தையோ வெறுப்பையோ காட்டினால், அது நாம் இன்னும் குணமுதிர்ச்சியைப் பெறவில்லை என்பதற்கான அறிகுறி.
  • பிடித்த விஷயங்கள் எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தருகிறதோ அதேபோல் தான் நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நம்மை துக்கத்தில் ஆழ்த்தும்.

*

இதை விளக்கும்… ஒரு அருமையான ஹஸிட் கூற்று.

  • கிளர்ச்சியின் ஆழம்தான் துக்கத்தின் உயரம் !
  • குணமுதிர்ச்சி பெற்ற ஒருவனை 'புகழ்ச்சி' - கிளர்ச்சிக்குள்ளாக்காது. 'இகழ்ச்சி' - தளர்ச்சிக்குள்ளாக்காது.
    • புகழ்ச்சியும், இகழ்ச்சியும் உங்களை என்ன செய்கின்ற ? உங்களை எவ்வளவு ஆட்டிப் படைக்கின்றன ? பதில் காணுங்கள்… குணமுதிர்ச்சியின் விகிதாச்சாரம் தெரியவரும்.