KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

நிம்மதி தரும் தெய்வஸ்தலங்கள்

  • கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம் அமா்ந்து விட்டு திரும்பும்போது ... ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே அது எதனால் ? இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்து வீடு திரும்பும்போது ... ஒருவித அமைதி நம்முள் இருக்கிறதே அது எதனால் ? காரணம் 'சக்தியூட்டம்' தான்.
  • இயற்கைச் சூழலில் இயற்கையாகவே இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். பேட்டரி சார்ஜ் செய்வதுபோல் நமது உடலும், மனதும் இயற்கையால் சக்தியூட்டப்படுவதால்தான் உடலுக்கு

புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது.

  • கோயில்களுக்கு, சார்ச்சுகளுக்கு, மசூதிகளுக்கு ஒருவர் சென்று முழுழு பக்தி நிலையில், - வேண்டிக் கொள்ளும்போது அவரை அறியாமலேயே திறந்த மனதோடு தெய்வ சந்நிதி முன் நிற்கிறார். (முழு பக்தி = தியானம்)
  • ஒவ்வொரு இறை சந்நிதியும் உலகின் சிறு, சிறு சக்தி நிலையங்கள். (Energy stations) மனம் திறந்திருந்தால், அதாவது திறந்த மனதோடு இருந்தால் இயற்கை விதிப்படி, சக்தி குறைவாக இருக்கும் நம்முள் தேவையான அளவு சக்தி வந்து நிரம்பி விடும். இதனால்தான் கோயிலுக்குச் செல்வது பலருக்கு மன நிறைவைத் தருகிறது.