உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஒப்பீடற்றவரே!
- வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.
- மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு நொந்துபோவது - தாழ்வு மனப்பான்மை. ஒப்பிட்டுக் கர்வப்படுவது - உயர்வு மனப்பான்மை.
- மற்றவர்களோடு தினம், தினம் தன்னை, ஒப்பிட்டு, ஒப்பிட்டு... மனதைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது பொறாமையாகவும், வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது ஆதிக்க குணமாகவும் மாறும்.
- ஒப்பீடற்றவரே! மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு நொந்து போவதும்… ஒப்பிட்டு ஒப்பிட்டு ஊக்கப்படுத்துவதும் ... உங்கள் கையில் !
- நாம் பிறந்ததற்கான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் 'தவிப்புத்' தான்... ஒப்பிடுதல் ! பொறாமை ! போன்ற எதிர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.
- நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும்.
- பிரபஞ்சம் என்னும் பூங்காவின் தனித்துவம் வாய்ந்த மலர் நீங்கள். உங்களுக்கு இணை நீங்களே!
- உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவத்தை வெளிக்கொண்டு வர முயற்சியுங்கள்... ஒப்பீடற்றவர்களாகுங்கள்!