KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/சொர்க்கழும், நரகழும் மனோரீதியானதுSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

சொர்க்கழும், நரகழும் மனோரீதியானது

  • சொர்க்கமோ, நரகமோ புவியியல் ரீதியாக எந்த இடத்திலும் இல்லை. மனவியல் ரீதியாகவே உள்ளது.
  • கோபம், வெறுப்பு, கவலை, துக்கம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் உண்மையில் வாழ்வது நரகத்தில்தான். அந்த நிமிடங்களில் ... நரக உணர்வான துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.
  • சாந்தம், சந்தோஷம், நிம்மதி, அன்பு ஆகியவை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் நிச்சயமாக வாழ்வது சொர்க்கத்தில்தான். அந்த நிமிடங்களில்... சொர்க்க உணர்வான இன்பத்தைத்தான் ருசித்துக் கொண்டிருப்பீர்கள்.
  • துன்பத்தையும், இன்பத்தையும் தாண்டிய ஒரு நிலைதான் ஆனந்தம். நரகத்தையும், சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு வெளிப்பாடுதான் ஞானம்.
  • கோபத்தைப் போன்றே... மனிதனுக்குத் துன்பத்தையும், வேதனையையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் நரகத்தில் வாழ்கிறான்.
  • சந்தோஷத்தைப் போன்றே... மனிதனுக்கு இன்பத்தையும், உற்சாகத்தையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதன் சொர்க்கத்தில் வாழ்கிறான்.
  • முயன்றால் சொர்க்கத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
  • சொர்க்கமும், நரகமும் ஒரு தனிமனிதனின் கையில் இருக்கிறது. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்.