KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தீண்டுபவரே தீண்டப்படுவார்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தீண்டுபவரே தீண்டப்படுவார்

  1. 1. யாரை எப்படி ஏமாற்றலாம்? 2. நடிப்பால் மற்றவரை நம்ப வைத்து நம் காரியத்தை மட்டும் சாதிப்பது எப்படி? 3. சாதித்தபின் மற்றவர் படப்போகும் கஷ்டத்தைக் கணக்கில்கூட எடுத்துக் கொள்ளாமல் விடுவது எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்கு பதில் தரும் குண அமைப்பிற்கு பெயர்தான் கள்ளம், கபடம்.

கள்ளம் உள்ளத்தில் குடியிருக்கும்வரை இல்லத்திலோ, உள்ளத்திலோ நிம்மதி இருக்காது. இருக்கவும் முடியாது.

கள்ளங்களை உள்ளங்களிலிருந்து களையும் கலை நுணுக்கமானது. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் உள்ளத்தை ஆராயுங்கள் உள்ளதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

ஏமாற்றப்பட்டவர்களுக்கு... அது பாடம். பண்படுவார்கள். ஏமாற்றுபவர்களுக்கு ... அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து ! கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களைத் தீண்டுவதுபோல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும். துன்பப்படும்.