KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/நீங்கள் கிளர்ச்சியாளனா?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

நீங்கள் கிளர்ச்சியாளனா?

ஒரு கிளர்ச்சியாளன் நிச்சயமாக மூர்க்கன், மூடன் ஆகிய இருவரையும்விட உயர்ந்தவனே. ஆனால் அது இறுதியல்ல. பொங்கியெழுவது முதிர்ச்சியாகாது.

  • மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் அல்லது கேட்டதும் கோபமோ எரிச்சலோ வந்தால் நீங்களும் ஒர் கிளா்ச்சியாளனே. (ஏதோ பெரிய பெரிய புரட்சியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே கிளர்ச்சியாளர்கள் அல்ல )

கிளர்ந்தெழுவது என்பது, மனம் அதன் மந்தத் தன்மையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே.

  • ஒய்வேயில்லாமல் யோசிப்பதும், பரபரப்பாக எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருப்பதும், தனக்குப் பிடிக்காத விஷயங்கள் தன்னைச் சுற்றி நிகழும்போது, கிளா்ந்தெழுவதும் பொங்கியெழுவதும் நம் வளர்ச்சியின் நல்ல அடையாளங்களே. பொங்கியெழுவதும், கிளர்ந்தெழுவதும் தாண்டப்பட வேண்டிய நிலைகள். கொண்டாடப்பட வேண்டிய நிலைகள் அல்ல. பெருமைப்பட வேண்டிய குணாதிசயங்கள் அல்ல.

சாந்த குணம்

கிளர்ந்தெழுதல் ஒரு பேய் மாதிரி மனிதனுக்குள் இருந்து கொண்டு மனிதனை உலுக்கிக் கொண்டே இருக்கும். உத்திரவிட்டுக் கொண்டே இருக்கும். மனிதனும்தான் உயிரோட்டம் உடையவனாய் செயல்படுவதாய் நம்புவான். கிளர்ந்தெழுதல், மனிதனை இளைப்பாற அனுமதிக்காது. போதும் என்ற திருப்தி மனிதனை நெருங்க விடாது பார்த்துக் கொள்ளும். மந்தத் தன்மைக்கும் கிளர்ந்தெழுவதற்கும் இடைப்பட்ட சுபாவம்தான், நிதானம் ! சாந்தம் ! நிம்மதி ! திருப்தி ! ஆனந்தம் ! இந்த உண்மை மனிதனால் உணரப்படாதவரை கிளா்ந்தெழுதல், வாழ்க்கையை காட்டாறுபோல அதன் இஷ்டத்துக்கு அலைக்கழிக்கும். உண்மை தெரியாத மனிதனோ! 'நான் சரியாகத் தானே வாழ்ந்தேன், கஷ்டப்பட்டுதானே உழைத்தேன்! ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள்?' என்று வாழ்வின் பிற்பகுதியில் நொந்து கொள்வான்.

சாந்த குணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். கிளர்ந்தெழும் சுபாவத்தைத் தணியச் செய்வது சாந்த குணத்தைப் பெறும் ஒர் எளிய வழி.

தியான சக்திக்கு, இந்தப் பேய்ச் சுபாவத்தை எரித்து விடும் சக்தியுண்டு. கிளர்ச்சி முதிர்ச்சியல்ல. கிளர்ச்சி வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே. கிளர்ச்சியைக் கடந்து சாந்தமடையுங்கள். வாழ்வு சந்தோஷமாகும்.