உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
தியானம் புதிரானதா ?
- தியானம் செய்வது எப்படி ? -மேலுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
- காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால் சாதாரண நேரங்களில் வரும் எண்ணங்களைவிட அதிகமான எண்ணங்கள் வருவதுபோலவே தோன்றுவதுதான். அப்படித் தோன்றக் காரணம், அப்போதுதான் தங்கள் வாழ்வில் முதல்முறையாக தங்களினுள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மனக் குதிரையை நேருக்குநேர் சந்திக்கிறார்கள்.
- 'இயல்பாகவே இருக்கிறேன்' என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின் உள்ளே இருக்கும் 'இயல்பற்ற தன்மைதான்' தியானத்தில் அமரும்போதுதான் ஒருவருக்குத் தெரியவரும்.
ஆனந்தத்தை ஈர்க்கும் வெற்றிடம்
- 'பகிர்தல்' ஒரு தியான முறை.
- அகங்காரத்தை வலி தெரியாமல் அறுத்துவிட உதவும் வாழ்வியல் வழிமுறை 'பகிர்தல்'
- உள்ளத்தில் உள்ளதையெல்லாம் பகிர்ந்து விடுங்கள். பகிர்வதால் உள்ளே உருவாகும் வெற்றிடத்தை, ஆனந்தம் நிரப்பிவிடும்.
- மேல் உள்ள கூற்றைச் சோதித்துப் பாருங்கள். உங்களினுள் ஆனந்தக் கதவு தானாகவே திறந்துகொள்ளும்.
- கவலைப் பகிரப் பகிர குறையும் ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும்.
- பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பாடத்தில் புதுப்புது பக்கங்களை திருப்பிக் காட்ட வல்லது! பகிர்தல் ஒருவித வளர்தல்.
செயலும் எண்ணமும் தெளிவாக ...
- இன்றைய நிகழ்காலம் என்பது நேற்றைய எதிர்காலம். நாளைய எதிர்காலம் அது சந்திக்கப்படும்போது நிகழ்காலமாகியிருக்கும். எனவே நிகழ்காலத்தைச் சந்திக்கத் தெரிந்தால்போதும். எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
- கவலைப்பட்டாலும், கவலைப்படாவிட்டாலும் சந்தித்தே ஆகவேண்டிய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதே புத்திசாலித்தனம்.
எதிர்கொள்ள ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தை! வாழ ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தில் ... கவலைகளாலும், தேவையற்ற சிந்தனைகளாலும் வீணாகும் நேரமும், சக்தியும் மிச்சமாகும். செயலும் எண்ணமும் தெளிவாக ஆரம்பிக்கும்.
நிகழ்காலத்தில் நினைவொன்றி வாழ வாழ நிச்சயம் வாழ்வு வளமாகும்.
கஷ்டங்களெல்லாம் கரைந்து விட ...
- மக்களைக் கற்பனையிலேயே வாழச் செய்யும், சில பொழுழை போக்கும் அம்சங்களால் மனித மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது வருத்தத்திற்குரிய உண்மை.
- கற்பனை உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை அறியாமல் ... கற்பனைகளை நிஜம் என்றும், நிஜத்தைக் கற்பனை என்றும், பார்த்துப் பார்த்து மனம் பாதிக்கப்பட்டதால் தெளிவற்றுப்போன மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கையில் பல குழப்பங்கள்.
- கற்பனை நிஜமாக மூடியாது. நிஜத்தைக் கற்பனை செய்ய முடியாது. இது நடைமுறை உண்மை.
- மனிதன் செய்யும் 100 கற்பனைகளில் ஒன்றிரண்டு நிஜமானால் அதுவே பெரிய விஷயம். இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. உங்களின் மன ஏட்டில் 'சொந்த அனுபவங்கள்' எனும் பகுதியைப் புரட்டடிப் பாருங்கள். புரியும்.
உங்களின் ... பயம் பரிதவிப்பு
ஏக்கம்
எதிர்பார்ப்பு
ஆகிய அனைத்தும் கற்பனைகளே.
- நிஜமாகாத கற்பனைகளுக்காக நிஜ வாழ்வை கரைக்காதீர்கள்.
- கற்பனைகளைக் கரையுங்கள், கஷ்டங்களெல்லாம் கரைந்துவிடும்.