KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/பீனியல் சுரப்பியைச் சுறுசுறுப்பாக்குங்கள்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

பீனியல் சுரப்பியைச் சுறுசுறுப்பாக்குங்கள்

  • கிடைத்தவகைளுக்கு மனிதன் மதிப்பளிப்பதில்லை. அதோடு நில்லாமல், கொடுக்கப்பட்டதில் குறை சொல்லிக் கொடுத்தவரையே கொட்டுவதும், 'இன்னும் கொடு' எனச் சொல்லி பெற்றுக்கொண்டதை அவமதிப்பதும் நன்றியுணர்வற்றவர்களின் குணாதிசயங்கள்.
  • பீனியல் சுரப்பி, சுரப்பிகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. நமக்குள் ரம்யமான உணர்வையும் (Senser of well being), இளைப்பாறுதலில் கிடைக்கும் அமைதியையும் (Peace) உருவாக்குவது இந்த பீனியல் சுரப்பி.
  • 'நன்றியுணர்வோடிருத்தல்' என்னும் உணர்வு நிலை சஹஸ்ராரச் சக்கரத்தை மலரச் செய்யும், பீனியல் சுரப்பியை சுறுசுறுப்பாக்கும்.
  • நன்றியின்மை மரியாதையின்மை எனும் குணக்கேடுகளின் வெளிப்பாடுகளான ... அவமதித்தல், எகத்தாளம் ஆகிய எல்லாம் ஒன்றாய் சேர்ந்துதான், ஒருவருள் வெறுமையை உருவாக்குகின்றன. அவரின் அருமையை மறைக்கின்றன. மற்றவரின் அருமையையும் அவருக்கு மறைத்து விடுகின்றன.

ஞானப் பயணம்

  • புத்து (BHUDDHU) புத்தா (BHUDDHA) என்ற இருவருக்குமே துக்கமில்லை.
  • புத்து என்றால் முட்டாள். புத்தா என்றால் ஞானி.
  • இப்போது நீங்கள் அனுபவிக்கும் எல்லா துக்கங்களுமே நீங்கள் முட்டாள் அல்ல என்பதற்கான அறிகுறிகள். ஞானம் நோக்கி நகருகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள். உற்சாகத்தோடு முன்னேறுங்கள் !