உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
சந்நியாசம்
பாரத் நாட்டில் உள்ள எல்லாருமே துறவிகளாகி விடுவது சாத்தியமில்லை. ஆகவே என்னைப்போல சிலா் துறவிகளாகி, நாங்கள் ஆனந்தமயமாவது மாத்திரம் அல்லாமல் பிறருக்கும் ஆனந்தமயமாவதற்கான வழிகளைக் காட்டுகிறோம். இது ஒரு சமுதாயத் தேவை. இறைச்சித்தம்.
- உண்மையான சந்நியாசிகள் உருவாக்கப் படுவதில்லை - பிறக்கிறார்கள். (Real sanyasis are not made, They are bourn).
- சந்நியாசி ஆவதற்கு வீரர்களுக்கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும்.
- வீரன், அடுத்தவர்களை வெற்றி கொள்கிறான். சந்நியாசி தன்னைத்தானே வெற்றி கொள்கிறான். ஆகவே, எல்லோரும் சந்நியாசிகளாகிவிட முடியாது.
- 100% சதந்திரமான ... 100% ஆனந்தமயமான ... - வாழ்வு முறைக்குப் பெயர் சந்நியாசம். இப்படிப்பட்ட சுதந்திரமயமான வாழ்க்கை வாழ்பவனுக்குப் பெயர் சந்நியாசி.
இது உச்சக்கட்ட போதை
- ஒருவனைச் சிறுமையில் சிக்கவிடாமல் காக்கும். அது தற்பெருமையாகவோ வெட்டிப் பந்தாவாகவோ, அகந்தையாகவோ மாறும்போது, அதுவே அவனை அழித்துவிடும்.
- பெருமை தரும் உற்சாகம் போதை மருந்து தரும் உற்சாகத்திற்குச் சமம்.
- போதை மருந்து உடலை அடிமைப்படுத்தும். பெருமையுணர்வு மனதை அடிமைப்படுத்தும்
- போதை மருந்தால் உடல் மட்டும் வீணாகும். பெருமை என்ற மாய உணர்வு மனதை வீணாக்குவதின் மூலமாக உடலையும் சேர்த்து வீணாக்கும்.
- மேதையைக்கூட பேதையாக்கும் போதை இந்தப் பெருமை !
- மனிதன் தான் இடிப்பட்டதாய் உணரும் எல்லாச் சூழ்நிலைகளிலும்… அவன் அடிபடுவது இந்தப் பெருமையுணர்வில்தான்! பெருமைப்பட ஆயிரம் காரணமும், சிறுமைப்பட ஆயிரம் காரணமும் சொல்வது எளிது. ஆனால், எளிமையாய் வாழ ஒரு காரணம் சொல்வதுகூட மனதுக்கு மிகக் கடினமானது.
- பெருமையை விட்டு வெளியே வாருங்கள். அப்போதுதான் உங்களின் அருமை உங்களுக்கே புரியவரும்.
வேண்டுதல்களை நிறைவேற்றுவது எப்படி?
- கோயில்களுக்குச் சக்தி கிடைத்தது எப்படி?
- ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ஒரு 'ஸ்தலத்தில்' அவர் அனுபவப் பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
- இதற்குப் பல உதாரணங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
- பழனியில் திருக்கோயிலை உருவாக்கி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் போகர் என்ற ஞானி.
- தஞ்சாவூரில் கரூரார், திருவண்ணாமலையின் அக்னி ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்தவர் இடைக்காட்டுச் சித்தர் என்னும் ஒரு ஞானி.
- சிதம்பரத்தில் திருக்கோயிலைப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.
- திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கிப் பிராண பிரதிஷ்டை செய்து வைத்தவர் கொங்கனவர் என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு கோயிலில் விட்டுச் செல்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோயில்களும் வெவ்வேறு விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றிருக்கின்றன.
- மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலை மோதுவதற்கு காரணம் அங்கே இருக்கும் ஞானி (இறைதூதர்) முகமது நபியால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வ சக்திதான் காரணம்.
அங்கு தொடர்ந்து வரும் சக்தியால் தான் மக்கள் பயன்பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.
- வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலை மோதுவதற்கும் அங்கே இருக்கும் ஒரு தெய்வ சக்திதான் காரணம்.
- தெய்வஸ்தலங்களில் நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
- 1. உங்களின் திறந்த மனதும், பக்தியும். 2. அந்த இடத்தில் இருக்கும் தெய்வ சக்தி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.
- நீங்கள் எந்த இடத்திற்கு எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை.
- உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படுகிறதா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.
- கோயில்களுக்குச் சென்று 'பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல்' என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும், மனத்திற்கும் எடுத்துக் கொடுக்கும் ஒரு எளிய முறை. (வேண்டுதல்கள் நிறைவேறுவதின் சூட்சுமம் இதுதான்).
- எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் 1/2 மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந்திருந்து தியானம் செய்யாமல் திரும்பாதீர்கள்.
படிப்பு சுமையா? சுவையா?
- நன்றாகப் படிக்காதவர்கள், நன்றாகப் படிக்க இயலாதவர்கள் - என்பது தவறு. படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்காமல் விட்டுவிட்டவர்கள் - என்பதுதான் சரி.
- உண்மையில் எல்லோரும் நன்றாகப் படிக்கும் திறன் கொண்டவர்கள்தான்.
- படிப்பு என்பது இன்றைய வாழ்க்கைக்கும் இன்றைய உலகத்திற்கும் அவசியமாகிப்போன ஒரு சுமை.
- கல்வியைச் சுமை என்று நான் சொல்வதைக் கேட்டு, உங்களில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படலாம்.
இந்தச் சுமை சுகமாக மாறத் தவறிய சுமை என்று புரிந்து கொள்ளுங்கள்.
- பிறந்தது முதல் பதினான்கு வயது வரையிலான பகுதி வாழ்வில் சுதந்திரப் பறவையாக ஆனந்தமாகத் திரியும் காலம்.
- இந்த சுதந்திரம் சிறுவர்களுக்குப் பல்வேறு காரணங்களால்'மறுக்கப்படுவதால்' அல்லது 'மறுக்கப்படுவதாக நினைத்துக் கொள்வதால்' - இழந்து விட்டதாக நினைக்கும் சந்தோஷத்தைப் பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்து கொள்ள மனரீதியாக தயாராகிறார்கள். (இந்த தூண்டலுக்குக் காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுதந்திரமும், வாலிபத் துடிப்பும்தான்).
- தங்களின் கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால்போதும். படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.
- இதைப் புரிந்துகொண்டால் படிப்பின்மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈாப்பும் குறைய ஆரம்பிக்கும்.
- படிப்பின்மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும், துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.