உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்
- மற்றவர்களைத் தொடர்ந்து பாராட்டுவது, – சரியான விஷயங்களுக்கு ! மற்றவர்களுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வது, – தேவையான விஷயங்களுக்கு!
தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது, இருக்க முயற்சி செய்வது ... தொடர்ந்து மற்றவர்களைச் சந்தோஷமாக இருக்க வைக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது ...
- இவை எல்லாமே அகங்காரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.
மேற்கூறிய விஷயங்களை எப்போதாவது செய்வது அகங்காரத்தை வளர்க்க ஆரம்பிக்கும்.
- எப்போதாவது மேற்கூறியவற்றைச் செய்வது 99% அந்த தனிப்பட்ட நபரின் சுய லாபத்திற்காக மாத்திரமே இருக்கும். இதனால் நான், எனது, எனக்காக என்ற அக்கறை உணர்வுகள் இன்னும் வேர்விட்டு வளரும்.
காரணமில்லாமல் பலனில்லாமல் எந்த ஒரு காரியத்திலும், நீங்கள் ஈடுபட அகங்காரம் உங்களை அனுமதிக்காது. -மேற்கூறியவற்றைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கும்போது... தடுமாற்றமோ, 'எனக்குத் தேவையில்லை' என்ற உணர்வோ, 'என்னால் முடியாது' என்ற எண்ணமோ தோன்றும்.
இது அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்!
- மற்றவர்களின் சுகத்தன்மையை (சந்தோஷத்தை) அதிகரிக்க நாம் செய்யும் செயல்கள், நம்முள்ளிருக்கும் அகங்காரத்தை அழித்து ஆனந்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
- எல்லோரையும் சந்தோஷப்படுத்தி, நீங்களும் சந்தோஷமான இருந்து, ஆனந்தத்திற்குள் குதியுங்கள்!
கற்றுக்கொள்ள ... கற்றுக்கொள்ளுங்கள்
- வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர் திருப்பங்களும் நீங்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய பாடங்களை வைத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது.
- வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் – வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
- தியானம்
கற்றுக்கொள்ள வேண்டியதைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில் கற்றுக்கொள்ளத் தவறியதே நம் கஷ்டங்களுக்கான காரணகர்த்தா.
- வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் மிகப்பெரிய ரகசியங்கள் பொதிந்தது. மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும் முழுமையாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும்போது மாத்திரமே இந்த உண்மை நமக்குத் தெரியவரும்.
- மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வதுதான் கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுதல்.
- முழுமையாக மதிக்கக் கற்றுக்கொண்ட பிறகு,
குரு, வேதம்,
தியானம்,
- ஆகிய அனைத்தும் உங்களைச் சுற்றியே இருப்பதை உணர்வீர்கள்.
- வாழ்வின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உலகையும், உறவுகளையும் மதிக்க ஆரம்பியுங்கள். உண்மைகள் தொடர்ந்து புலப்பட ஆரம்பிக்கும்.
காமம், காதல், நட்பு, அன்பு
- ஒரு பூவைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
- ஒரு கலையைப் பார்த்து ரசிப்பதும் ஈர்ப்புதான்!
- ஒரு மனித உடலைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான் !
- ஒருவர் குணத்தைப் பார்த்த உடன் ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!
- ஈர்ப்பு + இச்சை = காமம் ஈர்ப்பு + பாசம் = காதல் ஈர்ப்பு + மதிப்பு = நட்பு
- மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, இச்சை உணர்வு கலக்கும்போது அது காம உணர்வாக மாறுகிறது.
- மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, பாச உணர்வு கலக்கும்போது அது காதல் உணர்வாக மாறுகிறது.
- மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, மதிப்பும், மரியாதையும் கலக்கும் போது அது நட்பு உணர்வாக மாறுகிறது.
- காதலும், அன்பும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள்.
- காமம், காதல், நட்பு என்ற மூன்றையும் தாண்டியது அன்பு!
- உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள். விட்டுக் கொடுப்பதன் மூலம் தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.
- காதல் உணர்வில் நம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம் !
- காமத்தில் மற்றவர்களை மறந்து நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம்.
- நட்பு மலரும்போது உறவு பூரண நிலையை அடைகிறது. அன்பு மலரும்போது மனிதனே பூரண நிலையை அடைகிறான்.
- ஹார்மோன்களின் திடீர், திடீர் மாற்றம் நிறைந்த வாலிப வயதால் எதைக் காமம் ? எதைக் காதல் ? என்று பிரித்தறிவது கடினம். காதல் வயப்பட்டது தானாக இருக்கும் பட்சத்தில் ஈகோ காரணமாக அது புனிதமான காதல்தான் என்று மனம் அடித்து கூறும். வாலிப வயதும் அப்படித்தான் கூறும்.
- மிக அதிக விழிப்புணாவும், புத்திசாலித் தனமும் பெற்றிருந்தால் மாத்திரம்தான் காமம் வேறு, காதல் வேறு என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியும்.
- சிறந்த காதலன் நல்ல நண்பன் சிறந்த காதலி - நல்ல தோழி சிறந்த பெற்றோர் - நல்ல நண்பர்கள் சிறந்த சகோதரன் - நல்ல நண்பன் சிறந்த சகோதரி - நல்ல தோழி
- இப்படி நம்முடைய சிறந்த உறவுகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட நாம் தவறுவதில்லை.
- எல்லா உறவுகளிலும் நட்பு மலரும்போதுதான் அது ஒரு முழுமைத் தன்மை பெறுகிறது.
- காதலிலிருந்து நட்பின் வழியாக அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!
வெட்டிப் பேச்சா? வெட்டும் பேச்சா?
- ஏன் பேசிக் கொண்டிருக்கிறாோம் ? என்ன பேச நினைத்திருந்தோம் ? எப்படிப் பேசிக் கொண்டிருக்கிறோம் ? - என்ற கேள்வியைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டால் பலரால் பதில் கூற முடியாது. இப்படி முடியாமல் இருப்பவர்களால்தான் சாதாரணப் பேச்சு வெட்டிப் பேச்சாக மாறுகிறது.
- வெட்டிப் பேச்சின் இயல்பே ஒரு குழ்நிலையில் அது உறவை வெட்டும் பேச்சாக மாறும் தன்மை பெற்று இருப்பதே! - இது கவலைகளுக்கான காரணங்களில் ஒன்று.
- உரையாடலில் வெட்டிப் பேச்சை அனுமதிப்பது ...
- 'பிரேக்' இல்லா காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது!
- வெட்டிப் பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது. பேச்சின் போக்கு கட்டுப்பாடற்று மனதின் இஷ்டப்படி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.
- இது பேசுபவர், கேட்பவர் என்ற இருவரையுமே பாதிக்கும்.
- 'வெட்டிப் பேச்சில்' அழியும் நேரம் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டால் பாரத் தானாகவே வல்லரசாக மாறிவிடும்.
- அகத்தின் (உணர்வின்) அழகு முகத்தில் தெரியும் ; மனதின் (எண்ணத்தின்) அழகு பேச்சில் தெரியும்.
- பொழுதுபோக்கு அம்சங்கள் பொழுதையே போக்கும் அம்சங்களாக மாறக்கூடாது. இது விதியையும் மீறிய சதி.
வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்
- இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.
- பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை? - உடல், உயிர், மனதை! எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம், பதவி, பேருக்காக இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனதைப் பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்கள்!
- வாழ்க்கையை வீணடிப்பது ... ஒரு மகாபாவம் ! ஒரு கொடுஞ்செயல் ! ஒரு பெருங்குற்றம்!
- 'இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும்' - என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.
- இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும், பணமும் பெற்ற நீங்கள் ... நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
- வாழ்க்கையை அனுவித்து வாழுத் தெரிந்திருந்தால் பிச்சைக்காரனால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம்
என்றால், ஏன் உங்களால் முடியாது?
- உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- சொர்க்கம் உங்களுக்குள்ளே ... என்று கண்டுகொள்வீர்கள்.
- வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா!
- வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!