KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/தெளிவென்னும் குழந்தைSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

தெளிவென்னும் குழந்தை

  • குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • குழம்புவதில் தவறில்லை ; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.
  • நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
  • இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
  • எது சரி எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.

மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்கவைத்துக் கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.

  • பிரச்சினை குழப்பத்தில் இல்லை. குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கின்றது.
  • குழப்பமே குழப்புமளவுக்கு குழப்பத்தை குழப்புவது, குழப்பத்தை குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும்போதுதான் சாத்தியம்.
  • குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள்.

குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.

  • தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம்.
  • குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்தனைமுறை தெளிவைப் பிறக்க விடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இளமை

  • இளமையில் இளமையை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தாமல் இருப்பவன், 'இளைஞன்' என்ற போர்வைக்குள் இருக்கும் 'கிழவன்'.
  • வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை! படிப்பு, வேலை எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் இவற்றால் இன்றைய உலகில் வாழ்க்கையின் சுமை மிகுந்த பகுதி - இளமை ! என்றாகி விட்டது.
  • இன்று அதிகபட்ச சுவையும், அதிக பட்ச சுமையும் நிறைந்த வாழ்க்கைப் பகுதி இளமை !
  • பொதுவாக நாம் பின்னால் பெறுகிற வெற்றியின் விதைகள் இளமையிலேயே ஊன்றப்படுகின்றன.
  • இளமை என்பது வாழ்வின் சாரம். இதைப் பிழிந்து அர்ப்பணிக்காவிட்டால் உயர்ந்த நிலைகளை அடைய முடியாது.
  • இளமையை எதற்கு அர்ப்பணிக்கிறீர்களோ அதன்படி உங்கள் வாழ்க்கை நிர்ணயமாகிறது.
  • இளமையில் உருவாகிற இந்த அர்ப்பணிப்புதான் பின்னாளில் ஞானமாகவோ, பணமாகவோ, பதவியாகவோ வந்தமைகிறது.