உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
Part 2: Lines of Wisdom Which Makes You Beautiful
ஆனால் சில நூறு பேர்தான் அவரின் மகிமையையும், அவர் இறைவனின் அவதாரம் என்பதையும் உணர்ந்தனர்.
- பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும் எனவே நம் கவனம் முழுவதும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதிலேயே இருந்தாலேபோதும். குரு தானாகவே வந்து வாய்ப்பார்.
- நல்ல சீடனாக இருந்தால்... கல்லும் கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும். இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் 'எங்கிருந்து வருகிறாய் ?' உன் அடையாள அட்டையைக் காட்டு. நீ கடவுள் என்று நான் நம்புவதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய் ? என்போம்.
- நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத வரை குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.
- 'ஆனந்தமாக வாழ முழு மனதாக முடிவு எடுத்து விட்ட பட்சத்தில்' நீங்கள் தேடாவிட்டால்கூட குரு உங்களைத் தேடி வருவார்.
- இதில் விந்தை என்னவென்றால் அப்படி முழு மனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில் உங்களால் ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்து நேரத்தை வீணடிக்க முடியாது.
- உங்களின் முடிவு வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும். முடிவை நீங்கள் எடுங்கள்! விடிவை இறைவன் பார்த்துக் கொள்வான்!
உன் அவசர காலம்
- 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதைவிட 'அகநடுக்கத்தின் அளவு முகத்தில் தெரியும்' என்றால் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
- அழகுக்கும் அக நடுக்கத்திற்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது.
- அக நடுக்கம் நில நடுக்கத்திற்குச் சமம். அகம், நடுங்கும்போது நரம்பு மண்டலமே நடுங்கும். இது மிகைப்படுத்தல் அல்ல. அறிவியல் பூர்வமானது !
- அக நடுக்கம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் உடலின் உயிர்ச் சக்தி சேதமாகும்.
- வாழ்வின் சாதாரண விஷயங்களை அசாதரணமாகப் பார்க்கப் பழகியதால் உள்ளே உருவாகும் 'அவசர கால நிலை' தான் அகநடுக்கம்.
- படபடபடப்பும்,
தேவையற்ற பரபரப்பும், சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைதான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
- பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும்.
- அவ்வளவே, அகநடுக்கம்தான் உங்களின் சாதா பிரச்சினைகளை உடல், மன வேதனைகளாக மாற்றுகின்றன.
உங்களை உங்களுக்கு அடையாளங்காட்டியது யார்?
- நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் உடல் காற்றைச் சுவாசிக்கிறது. காற்றில் வாழ்கிறீர்கள். அதேபோல், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் ஆத்மா கடவுள் சக்தியைக் கிரகிக்கிறது. நீங்கள் கடவுள் சக்தியில் வாழ்கிறீர்கள்.
- ஒரு நாய்க்கு அது நாய் என்ற விஷயம் தெரியாது. ஒரு மாட்டுக்கு அது மாடு என்ற விஷயம் தெரியாது. நாய், மாடு என்பது நாம் உருவாக்கிய பெயர்கள்.
நாயையும், மாட்டையும் பொறுத்தவரையில் அது அதுவாக உணரும். அவ்வளவுதான். மனிதனுக்கு மாத்திரம்தான் அவன் மனிதன் என்ற விஷயம் தெரியும். புரியும். காரணம் மனம்.
- மனிதனுக்குத் தெரிந்த மனம் தாண்டிய ஒரு நிலை இருக்கிறது அதற்கு பெயர்தான் 'மனம் கடந்த நிலை. '
- மனம் கடந்த ஆத்ம உணர்வு ஒருவருக்குள்ளிருந்து வெளிப்பட்டால், கடவுளையே தன்னுள் ஒருவனாகக் காணமுடியும்.
- கடவுள் தன்மையை ஒரே ஒருமுறை உணர்ந்துவிட்டால், கடவுள் என்ற வார்த்தை அனுபவப் பூர்வமாக விளங்கிவிடும். தானே எல்லாமாகவும், எல்லாம் தானாகவும் மாறிவிடும்.