நித்ய க்ரியா யோகா
நான்கு நாள் தியான அனுபவ முகாம்
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உடல் சக்தி அதிகளிப்பு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலிலிருந்து விடுபட வழிவகுக்கும் கவலை, சோர்வு மற்றும் கா்ம விளைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும் மரண பயத்திலிருந்து விடுதலை மற்றும் மரணத்தின் ரகசியத்தைப் பற்றிய தெளிவு தரும்.
சிறப்பம்சங்கள் ...
குண்டலினி சக்தியை உயிர்ப்பிக்கும் முறை மற்றும் நிர்விகல்ப ஸமாதி தீகைஷ் வழங்கப்படுகிறது.
இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள் ...
வேகனை எங்கே போனது என்றே தெரியவில்லை
குறைந்த ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சினை, கழுத்து வலி, குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உங்கள் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள். அப்பொழுது என் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காக தியான முகாமில் கலந்து கொண்டேன். பிறகு என் வலி, வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. - திருமதி. ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை.
மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை பெற்றேன்
ஏழு வருடமாக இருந்த காப்பப்பை பிரச்சனைக்காகவும், குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் பார்க்காத மருத்துவர்கள் இல்லை, எடுத்துக்கொள்ளாத மருந்துகளும் இல்லை. இதன் பக்கவிளைவாக மன உளைச்சலும், அல்சரும், தூக்கமின்மை பிரச்சினையும்தான் வந்தது. தொடர்ந்து மாத்திரைகளை உணவுபோல எடுத்து வந்தேன். 2006 வருடம் தியான முகாமில் கலந்து கொண்டேன். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபோது, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என் தலையில் கைவைத்து, "45 நாட்களில் உங்கள் பிரச்சினை சுத்தமாக சரியாகிவிடும்," என்று ஆசீர்வதித்தார். அன்றிலிருந்து இன்று வரை மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே தூங்கி, மிகுந்த ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருகிறேன். - திருமதி. ஜெயந்தி, களையூர்.
18 வருடம் அனுபவித்த சித்ரவதை மறைந்தது!
என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதில் திடீரென்று 'மரணபயம்' புகுந்துகொண்டது. அதிலிருந்து தொலைக்காட்சியில் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், அது ஜூரமாக உருவெடுத்து பத்து அல்லது பதினைந்து நாட்கள் என்னைச் சித்ரவதை செய்துவிட்டுத்தான் செல்லும். சில சமயம் அந்த பயம் ஒரு மாதம்கூட நீடிக்கும். மனவேதனை தூங்க (மடியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அப்பொழுதுதான் நண்பரின் மூலமாக தியான முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் கலந்து கொண்டேன். என்னைப் பிடித்திருந்த பயம், என்னை விட்டுப் பயந்தோடிவிட்டது. 18 வருடம் அனுபவித்த சித்ரவதை அடியோடு மறைந்தது. - திரு. சேகா், பொன்னேரி.
கவலையே வாழ்க்கையாக இருந்தது காணாமல் போனது
பிறந்த ஒரு வயதிலேயே என்னுடைய மகள் ஹரிணிக்கு மூளைக்காய்ச்சல் வந்தது. அதன் விளைவாக அவளால் பேச முடியாமல், காதும் கேட்காமல் போய்விட்டது. பிறகு கடவுள் அருளால் தியான முகாமில் கலந்து கொண்டாள். சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச ஆரம்பித்தாள். இப்போது காதும் சுமாராக கேட்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வருகிறாள். என் மகளுக்கு தான் பேசமுடியாமல் இருக்கிறோமே என்ற கவலையே வாழ்க்கையாக இருந்தது. தியான முகாமிர்க்கு பிறகு ஆனந்தமாக இருக்கிறாள். அதைப் பார்த்து நான் நிம்மதியாக இருக்கிறேன். இதை அளித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களுக்கு கோடான கோடி ரன்றிகள்.
– திருமதி. ஜான்சிராணி, குடும்பத் தலைவி, நவலூர் குட்டப்பட்டு, திருச்சி.