KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/சக்திவாய்ந்த 'நித்ய தியான பயிற்சி' கற்றுத்தரப்படுகிறது.Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

சக்திவாய்ந்த 'நித்ய தியான பயிற்சி' கற்றுத்தரப்படுகிறது.

இத்தியான முகாமினால் பயனடைந்தவர்களின் அனுபவத்துளிகள்...

தெளிவு கிடைத்தது

திருமணமாகி 8 வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல் பாதிப்படைந்தது. அதைச் சுட்டிக்காண்பித்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் ஈட்டிபோன்று இதயத்தைத் தைத்தது. என்னை நானே குறுக்கிக்கொள்ள ஆரம்பித்தேன். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் என் குறையைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருந்தேன். இறுக்கமான மனநிலையிலிருந்து வெளிவர தியான முகாமில் கலந்து கொள் என்று என் தோழி எனக்கு அறிவுரை செய்தாள். நானும் கலந்து கொண்டேன். இரண்டு நாட்களில் செய்த தியானங்களும், தெரிந்து கொண்ட தியான கருத்துகளும் என் துக்கத்தைப் பற்றிய தெளிவை அளித்தது. துக்கத்தைப் பற்றியும் துக்கத்தை உருவாக்கும் மனஅமைப்பு பற்றியும் தெளிவு கிடைத்ததால் துக்கமின்றி வாழ ஆரம்பித்தேன். எனக்குள் பிறந்த தெளிவினால் உடலும் ஆரோக்கியமடைந்தது. பிறகு கணவருடன் சென்று சுவாமிஜியைத் தரிசனம் செய்து தீகைஷ்யும் பெற்றேன். குழந்தை பாக்கியம் அமையும் என்று எங்களுக்கு ஆசி வழங்கினார். சாமியின் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இதற்காக நாங்கள் சாமிக்கு நன்றி சொல்லாத நாளே இல்லை.

திருமதி. சரஸ்வதி, குடும்பத் தலைவி,

திருவண்ணாமலை.

உணர்ச்சி சமந்லையுடன் வாழ்கிறேன்

சின்ன சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷனாகி விடுவேன். எதற்காக உணர்ச்சிவசப்பட்டு சமநிலையை இழக்கி றன்னு தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். எனக்குள்ள என்ன நடக்குது, எதை எப்படிச் செய்யணும்னு தெளிவு இல்லாமல் இருந் தன். அப்போது உணர்ச்சிகளைப் பற்றியும், உணர்ச்சி சமநிலை பற்றியும் தியான முகாமில் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்கள். சிரத்தையுடன் கலந்துகொண்டேன். நமக்கு வரும் எதிர்மறை உணர்ச்சிகளைப்பற்றியும், அவற்றைச் சரிசெய்வதற்கு உகந்த தியானத்தையும் கற்றுத்தந்தார்கள். அன்றிலிருந்து உணர்ச்சி சமநிலையுடன் வாழ்கிறேன். எந்தச் செயலையும் ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவுடன் செய்கிறேன்.

செல்வி. சத்யபாமா, மாணவி, கோயம்புத்தூர்.

அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிரேன்

சின்ன வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாராவது பேச வந்தால் எரிச்சலில் எரிந்து விழுவேன். எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மன அமைப்பு இருந்ததால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லாமல் தனித்தீவுபோல் வாழ்ந்து வந்தேன். இதனால் வாழக்கையே வெறுமையாக இருந்தது. தியான முகாமில் கலந்துகொண்ட பிறகு எரிச்சல்படும் மனப்பாங்கு சரியானது. அனைவரிடமும் இனிமையாகப் பேசுகிறேன்.

திருமதி. ஆத்ம பூர்ணாம்பிகா,

குடும்பத் தலைவி, சென்னை.