KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி ...Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

நம் ஜீவன் முக்த வாழ்வுக்காக வாழும் கருணை சக்தி ... THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பற்றி ...

உலகின் மிக பழமையான புத்தக நிலையமான வாட்கின்ஸ் (WATKINS) வெளியிடும் மைன்ட் பாடி ஸ்பிரிட் (MIND BODY SPIRIT) பத்திரிகை நிறுவனம், உலகில் மிக அதிக அளவு ஆன்மிக தொண்டாற்றி பங்களித்த மிகப்பெரிய 100 குருமார்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருட்மும், உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடன், தம்முடைய ஞானக்கருத்துகளையும், தியான நுட்பங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அதுமட்டுமல்ல அவர்களுக்குள் உணர்வு மாற்றம் நிகழ்ந்து, அவர்கள் ஜீவன் முக்க வாழ்வு வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கும் கருணை மிக்க ஞான குரு.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையான அக விழிப்பை (Inner awakening) மலர்க்தி, மனித குலத்தையே ஒரு உயர் விழிப்புநிலைக்கு உயர்த்திச்செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடன் இருக்கும் ஓர் அவதார சக்தி.

நிர்வாகத் திறனிலிருந்து தியானம் வரை. உறவுகளிலிருந்து மதம்வரை, வெற்றியிலிருந்து ஸ்ந்யாஸம்வரை என எல்லாத் துறைகளிலுமே தமக்கென ஒரு தெளிவான ஞான அக நோக்கைப் பெற்றிருக்கும் ஒர் ஆன்மிக மேகை.

நம் உள்ளுலக உணர்வுமாற்றத்திற்குத் தேவையான புத்தி வளத்தையும் நுட்பங்களையும் நமக்கு வழங்கும் ஞானயோகி.

இதுவரை மக்களை, தம் ஒரே தொடுதலின் மூலம், மன அழுத்தம், போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்தும் மீட்டெடுத்து, அவர்களுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள சக்திமிகுந்த ஒரு தியான சிகிச்சையாளர்.

Youtube ல் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக குரு.

28 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, 300க்கும் மேற்பட்ட சிறப்புமிக்க புத்தகங்களை எழுதியுள்ள ஒரு அசாதாரணமான படைப்பாளர்..

ஆன்மிகத்தை இனிமையான முறையில் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், எளிமையாக்கிக் கொடுத்து, உலகம் முழுக்க உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்சாகமும், ஊக்கமும் ஊட்டிய, ஊட்டிக்கொண்டிருக்கின்ற, ஊட்டப்போகின்ற தனித்தன்மை கொண்ட ஒரு ஆன்மிக ஊற்று.

ஆன்மிகத்தை எளிமையாக்கிக் கொடுத்திருப்பது. மனித குலத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் ஓர் அரிய பங்களிப்பாக இருக்கிறது.

இப்படி அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் !

அவர் அளிக்கும் நுட்பங்களில் உள்ள எளிமைத்தன்மையும், அவருடைய ஆன்மிக அபைவங்களின் உண்மைத்தன்மையின் ஆழமும்தான் அவருடைய போதனைகளை உலக முழுக்கப் பரவச் செய்துள்ளன.

பண்டைய ரிஷிகளின் வாழ்வியல் முறையிலிருந்து பெறப்பட்ட தியான நட்பங்களையும், யோக முறைகளின் பல்வேறு பரிமாணங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் முறையிலே விளக்குவதில் ஈடிணையற்றவராகத் திகழ்கிறார்.

Science of Healing & Initiation

போராட்டங்கள் அற்ற வாழ்வு என்றால் என்ன? ஆக்கப்பூர்வமான ஆனந்தவாழ்வு என்றால் என்ன ?

-இந்த இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவும் ஒரு உலகாளவிய இயக்கமாக நித்யானந்த தியான பீடம் விளங்குகிறது.

தனிமனித விழிப்புணர்வுக்குள் ஒரு புதிய சுழற்சியை உருவாக்குவதன் மூலம், மனித குலத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணர்வை அறுதி நிலைக்கு உயர்த்துவதற்கான ச ாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவதுதான் அவருடைய நோக்கம்.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கூட்டு விழிப்புணா்வு அதிகரிக்கும் போது, ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அந்த மாற்றங்களைச் சரியான முறையில் உறுதியுடன் கையாளுவதற்கு, ஒரு அவதார புருஷரிடமிருந்து பெறும் 'தீகைஷ' மட்டுமே நமக்கு உதவமுடியும். நீண்ட நாள் பயிற்சி பெற்ற சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அந்த உயர் இரகசிய 'தீக்ஷ'யை, தம்மைத் தேடி வரும் எல்லா மக்களுக்குமே, எந்தவித தகுதியும் பார்க்காமல், அவர்களுக்குள் இருக்கும் ஆண்மிகத் தாகத்தை மட்டுமே பார்த்துக் கொடுக்கும் ஒரு கருணைமிக்க குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

– நன்றியுடன் நித்யாணந்த தியானபீடம்