KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் வரவில்லை.Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் வரவில்லை.

'நீங்கள் கடவுள்' என்பதை நிருபிக்கவே நான் வந்துள்ளேன்.

என்று சொல்லும் கருணை சக்கி... இன்று நம்மோடு வாழும் அவதார சக்தியாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. ஒரு அவதார புருஷர் வாழும் காலத்திலேயே வாழும் பாக்கியம் பெற்றிருப்பதால் நாம் எல்லோரும் பாக்கியவான்களே ! ! !

'தெய்வீகமே உங்களின் இயல்பு. ஆனந்தம் உங்களின் பிறப்புரிமை. உங்களை ஜீவன் முக்தராக வாழச்செய்வதே என்னுடைய குறிக்கோள் ... என்னுடைய வாழ்வு ... என்னுடைய ஆசீாவாதம்…என எல்லாமுமே' என்று தன்னுடைய பிறப்பின், வாழ்வின், செய்தியின், செயலின் நோக்கத்தையும் இலட்சியத்தையும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM எளிமையாக விவரிகின்றார்.

உலகம் முழுவதும் பல்வேறு தியான சத்சங்கங்களை நிகழ்த்தி, தியான முகாம்களை வடிவமைத்து வழங்கி, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து, இந்த சம்சார சாகரத்திலிருந்து மீட்கும் சக்திவாய்ந்த தீகைஷ்களை யாவருக்கும் பேதமின்றி வழங்கும் இளைய ஞானகுரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆவார்.

நம்முள் ஆசைகள் பலவிதமாக இருந்தாலும், அவை எல்லாமே, 'நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற வேண்டும், அனுபவிக்க வேண்டும்' என்கிற நம்முடைய நீண்ட நாள் ஆசையின் பிரதிபலிப்புகளே எனும் பேருண்மையை உணரச் செய்கிறார். அதை அடைவதற்காக நாம் செய்யும் பல்வேறு முயற்சிகளையும் முறையாக ஒருமுகப்படுத்தி, உள்நோக்கித் திருப்பும்

குட்சுமத்தை வகுத்துத் தருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் வாழும் மனிதா்களுடைய மனநிலைகளுக்கு ஏற்ப தியான நுட்பங்களை வடிவமைத்து வழங்குகிறார்.

'துக்கத்திற்கு மூலகாரணமான மனத்தைக் கடப்பதுதான் நிச்சயமான நிரந்தரமான ஒரே தீா்வு. வெளியிலிருக்கும் எதனாலும் எவராலும் எதுவொன்றினாலும் நீங்கள் தொல்லையுறுவதில்லை, துன்புறுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மனத்தினால்தான் துன்புறுகிறீர்கள். இதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துக்கத்திற்குமான மூலகாரணம். மூலகாரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைச் சரிசெய்யாமல் எவ்வளவுதான் பிரச்சனைகளுக்கு தனித்தனியாக ஜென்மம் ஜென்மமாகத் தீர்வைப் பெற முயன்றாலும், மீண்டும் அவை வேறு ஏதேனும் ஒரு ரூபத்தில் முளைத்தே தீரும்' எனும் ஆழ்ந்த வேதாந்த ரகசியங்களை எளிமையாக நமக்குப் புரியும்முறையில் கற்றுத் தருகிறார் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

நம்முடைய மனத்தைக் கடப்பதற்கு ... ஏற்கெனவே தம் மனத்தைக் கடந்த ஒருவரால்தான் நமக்கு உதவ முடியும். மனத்தைக் கடந்த ஞான குருமார்களின் வழிகாட்டுதலைப் பெற்று, நம் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் வகுத்துத் தரும் பாதையில் பயணிக்கும் போது, நாம் நம்முடைய இலக்கை உறுதியாக அடைகிறோம். இதுநாள்வரையிலும் உங்களின் ஜீவன் காத்திருந்த, எதிர்பார்த்திருந்த, பெறத் தவித்துக்கொண்டிருந்த அக விழிப்பை ஜீவன் முக்த தீகைஷ்யால் தரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாமும் அவதார சக்தியைச் சந்தித்திடும் வாய்ப்பபைத் தாருங்கள் ... உங்களுக்கு நீங்களே!

தசாப்தத்தில் (10ஆம் வடுடத்தில்) நுழைகின்றது 'ந்த்யானந்த தியானந்தபீடம்' THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பங்களித்த பரிமாணங்கள்...

மனிதருக்கு ...

பக்தர்களின் பாசமலர்

குடும்பங்களுக்கு குலகுரு

கடைத்தேற்றும் கருணைக் கடல்

அன்னமிடும் அன்னை