5.18 அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், கற்றறிந்த பிராமணனையும் பசுவையும் யானையையும் நாயையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்கிறார்.
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: / நிர்தேஷம் ஹி ஸ்மம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்கிகா: / / 5. 19
இஹ ஏவ - உயிர் வாழும்போதே; தை: - அவர்களால்; ஜித: -வெற்றிகொள்ளப்பட்டது; ஸா்க: - அகில உலகமும்; யேஷாம் : -எவர்களுடைய; ஸாம்யே ஸ்திதம் - ஸமபாவனையில் நிலைத்துள்ளதோ; மந: - மனம்; நிர்தோஷம் - மாசற்றது; ஹி - நிச்சயமாக; ஸமம் -ஸமமானது; ப்ரஹ்ம - மேலான இறைவன்; தஸ்மாத்- ஆகவே; ப்ரஹ்மணி - ஸத் சித் ஆனந்தமயமான இறைவனில்; தே - அவர்கள்; ஸ்திதா: - நிலை பெற்றியிருக்கிறார்கள்
5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன் இருப்பவர்கள் வென்றவர்களாகிறார்கள். அவர்கள் மேலான இறைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இறைவனில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் / ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் பர்ஹ்மணி ஸ்தித: // 5.20
ந ப்ரஹ்ரு'ஷ்யேத் - மகிழ்ச்சியடையாமலும்; ப்ரியம் - விருப்பமான பொருளை; ப்ராப்ய - அடையும்போது; ந உத்விஜேத் - கலக்கம் அடையாமலும் இருக்கும்; ப்ராப்ய - அடையும்போது; ச - மேலும்; அப்ரியம் ; விரும்பாததை ; ஸ்திரபுத்தி: - நிலைத்த மதியுடைய ; அஸம்மூட :-ஐயம் நீங்கிய; மர்ஹ்மவித் - ப்ரஹ்மஞானி; பர்ஹ்மணி- பரப்ரஹ்ம பரமாத்மாவில்; ஸ்தித: - நிலைத்து நிற்கிறான்
5.20 யார் ஒருவர் நிலையான அறிவைப் பெற்றிருக்கிறாரோ, மன குழப்பமடையாதவராகவும் இறைவனை அறிந்தவராகவும் இறைவனில் நிலை பெற்றிருப்பவராகவும் இருக்கிறாரோ அவர் விரும்பிய ஒன்றை அடையும்பொழுது மகிழ்வதும் இல்லை, விரும்பாத ஒன்றை பெறும்பொழுது துன்பமடைவதும் இல்லை.
பாஹ்யஸ்பர்சே'ஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் / ஸ் ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமச் நுதே // 5.2 1
பாண்யஸ்பர்சே'ஷு - - வெளியிலுள்ள புலன்நுகா் பொருட்களில் ; அலக்காக்மா - பற்றற்ற மனமுடைய ஸாதகன்; விந்ததி - பெறுகிறான்; ஆத்மநி - உள்ளத்தில்; யத் ஸுகம் - அந்த ஸுகம் உள்ளதோ; ஸ: -அவன்; ப்ரஹ்மயோகயுக்தாத்மா - பரமாத்மாவிடம் தியானயோகத்தினால் இரண்டறக் கலந்துவிட்ட; ஸுகம் - ஆனந்தத்தை; அக்ஷயம் - அழியாத, குறையாத; அச்'நுதே - அனுபவிக்கிறான்
5.21 வெளியுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத ஒருவர் தம் ஆன்மாவில் நிலைபெற்று மகிழ்வார். அந்த மகிழ்ச்சியில் அவர் சமாதி நிலை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லை இல்லாத மகிழ்ச்சியடைகிறார்.
யே ஹி ஸம்ஸ்பர்ச்'ஜா போகா து.கயோநய ஏவ தே / ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: // 5.22
யே - எந்த; ஹி - நிச்சயமாக; ஸம்ஸ்பர்ச்'ஜா: - புலன்களும், புலன்நுகா் பொருட்களும் ஒன்று சேரும்போது ஏற்படும்; போகா: - போகங்கள் உள்ளனவோ; து.கயோநய: ஏவ - துக்கத்திற்குக் காரணமாகவே உள்ளன; தே- அவை அனைத்தும்; ஆதி அந்தவந்த: - ஆரம்பமும், முடிவும் கொண்டவை; கௌந்தேய - குந்தி மைந்தா!; ந - இல்லை; தேஷு -அவற்றில்; ரமதே - இன்புறுவதில்லை; புத: - அறிவாளி
5.22 ஒ குந்தியின் மைந்தா! துக்கத்திற்குக் காரணமானதும், ஆரம்பமும் முடிவும் கொண்டதுமான பலனின்பங்களையும், சுகங்களையும் நிச்சயமாக புத்திசாலியான ஒருவர் அனுபவிக்க மாட்டார்.
ச் க்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ச் ரீரவிமோக்ஷணாத் / காமக்ரோ தோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸ்ுக்த: ஸ ஸ்ுகீ நர: // 5.23
ச'க்நோதி மனிதப்பிறவியிலேயே; ய: - எந்த ஸாதகன்; ஸோடும் - பொறுத்துக் கொள்வதற்கு; ப்ராக் - முன்பே; ச'ரீரவிமோக்ஷணாத் - உடல் அழிவதற்கு; காமக்ரோத உத்பவம் - காமத்தினாலும், கோபத்தினாலும் உண்டாகிற ; வேகம் - எழுச்சியை; ஸ: - அந்த; யுக்த: - யோகி; ஸ: - அவனே; ஸுகீ - ஸுகம் பெற்றவன்; நர: - மனிதனே
5.23 இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன்பே, யார் ஒருவர் பொருள் சார்ந்த புலன்களின் தூண்டுதல்களை வெறுப்பின்றிப் பொறுத்துக்கொண்டு ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தைத் தடை செய்கிறாரோ, அவர் இந்த உலகில் நல்ல சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
யோட்ந்த: ஸுலகோகந்தராராமஸ்ததாந்தர்ஜ்போதிரேவ ய: / ஸ் யோக ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூடோடதிகச்சதி // 5.24
ய: - எவனொருவன்; அந்த: ஸுக: - தமக்குள்ளேயே ஸுகம் காண்கி றாரோ; அந்தராராம: - தமக்குள்ளேயே விழிப்புடன் இருக்கிறானோ; ததா - அவ்விதமே; அந்தா்ஜ்யோதி: - ஆத்மாவிலேயே உள்ளொளி பெற்றவனோ; ஏவ - உறுதியுடன் தீர்மானம் செய்துகொண்டு; ய: -எவனொருவன்; ஸ: - அந்த; யோகீ - ஸாங்க்யயோகி; ப்ரஹ்மநிர்வாணம் - அமைதி நிறைந்த பிரஹ்மத்தை; ப்ரஹ்மபூத: - பிரஹ்மத்தில் ஒன்றிவிட் டவனான; அதிகச்சதி - அடைகிறான்
5.24 எவரொருவர் தமக்குள்ளேயே இன்பம் அடைந்து, தமக்குள்ளேயே விழிப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளொளி கண்டு உணர்ந்து இருக்கிறாரோ அவர் நிச்சயமாக ஒரு யோகி. (உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்த தன்மை) அவர் மேலான விடுதலையை அடைந்தவராகிறார்; அவர் தம்மை உணர்ந்தவராகிறார்; அவர் அந்த மேலான பரபிரஹ்மத்தை அடைகிறார்.
ல பர்கே ப்ரவ்ரமநிர்வாணம் ரு'ஷய: கூண்கல்மஷா: / சிந்நத்வைதா யதாத்மாந: ஸார்வதுதஹிதே ரதா: // 5.25
லபந்தே - அடைகிறார்கள்; ப்ரஹ்மநிர்வாணம் -பரமாத்மாவை; ரு'ஷய: -அறிந்தவர்கள்; க்ஷீணகல்மஷா: - எவர்களுடைய எல்லாப் பாவங்க(ளும் அழிந்துவிட்டனவோ; ஐயங்களும் ஞானத்தினால் தெளிவாக்கப்பட்டு விட்டனவோ; யதாத்மாந: - எவர்களுடையமனம் சஞ்சலமின்றி பரமாத்மாவிடம் நிலைத்துள்ளதோ; ஸா்வ பூதஹிதே - எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும்; ரதா: -ஈடுபாடு கொண்டவர்களோ
5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத் தன்மையையும் நீக்கி தெளிவு பெற்றவர்கள் ஆகிய அணைவரும் தெய்வீகமான நித்யானந்தத்தை அடைகிறார்கள்.
காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் / அமிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் // 5.26
காமக்ரோதவியுக்தாநாம் - காமகுரோதங்கள் விலகிய; யத்நாம் -ஞானிகளுடைய; யுதசேதஸாம்- எண்ணங்களை வசப்படுத்தி வெற்றி கொண்ட; அபித - நாற்புறங்களிலும்; ப்ரஹ்மநிர்வாணம் - முழுமையான விடுதலை; வர்ததே - நிறைந்து இருக்கிறார்;வித்தாத்மநாம் - தம்மை உணந்தவர்கள்
5.26 காமம், கோபம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றவர்கள், மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள், தம்மை உணந்தவர்கள் - இவர்கள் எளிதாக விடுதலை பெற்றுவிடுவார்கள்.
ஸ்பர்சா'ந் க்ரு'த்வா பஹிர்பாண்யாம்ச்' -
சக்ஷுச்சைவாந்தரே ப்ருவோ: / ப்ராணாபாநௌ ஸ்மௌ க்ரு த்வா நாஸாப்யந்தரசாரிணெள
ஸ்பர்சா'ந் - விஷய போகங்களை; க்ரு'த்வா - - கள்ளி; பகுறி: - வெளியிலேயே; புருஹ்யாந் - - வெளியே உள்ள; சக்ஷு: -கண்களின் பார்வையை; ச - - மேலும்; ஏவ - நிச்சயமாக; அந்தரே - நடுவிலும்; ப்ருவோ: - இருபுருவங்களின்; ப்ராண அபாநௌ-உள்வரும், வெளிச் செல்லும் சுவாசங்களை; ஸ்மௌ க்ரு'த்வா -ஸமமாக்கி; நாஸாப்யந்தர சாரிணெள - நாசியின் உள்ளே சஞ்சுரி,க்கிற
யதேந்த்ரியமநோபூத்திர் முநிர்மோக்ஷபராயண: / விகதேச்சாபயக்ரோதேர ய: ஸ்கா முக்த ஏவ ஸ: // 5.28
யதேந்த்ரிய மநோ புத்தி : - புலன்கள், மனம் இவற்றை அடக்கி; முநி: - முனிவனான; மோக்ஷபராயண: - மோக்ஷத்தில் குறியுள்ள; விகதஇச்சா மயக்ரோது: - ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து முற்றிலும்விடுபட்டு; ய - அந்த; ஸ்தா - எப்போதும்; முக்த ஏவ - விடுதலைப் பெற்றவனே; ஸ்: - அவன்
5.27, 5.28 வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, கண்களையும், பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு முனைப்படுத்தி, நாசிவழியாக உட்செல்லும், வெளிச் செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும், புலன்களையும், புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுகிறார். அசை, அச்சம், கோபம் இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்.
எப்போதும் இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக விடுதலை அடையப் பெற்றவர்தான்.
போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேச்'வரம் / ஸுவூரு'தம் ஸர்வதுதாநாம் ஜ்ஞாத்வா மாம் சா'ந்திம்ரு'ச்சதி / / 5.29
போக்காரம் கவங்களையும் : ஸர்வுலோகமலோச்'வாம் - அதிலலோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன்; ஸுஹ்ரு'தம் - நலம் செய்பவர்; ஸா்வதுதாநாம் -அகில சராசரத்தில் வாழும் உயிரினங்களுக்கும்; ஜ்ஞாத்வா - தத்துவ ரீதியாக அறிந்து; மாம் - என்னை; சா'ந்திம் - மேலான அமைதியை; ரு'ச்சதி – அடைகிறான்
5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாகஅடையப்படுபவராகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை அளிப்பவராகவும், 'என்னை' அறிந்து கொண்டவர் அமைதியை அடைகிறார்.
ஒம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்தீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மஸந்ந்யாஸ்யோகோ கோ நாம பஞ்சமோ க்யாய: //
ஒம் தத் ஸத், புரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'கா்மஸந்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்தியாயம்.