KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/Inner AwakeningSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

Inner Awakening

(அக விழிப்பு தியான முகாம்)

வாழும் அவதார புருஷரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு ஆன்மிக தியான முகாம்தான் அகவிழிப்புணர்வு தியான முகாம். இந்தத் தனித்துவம்மிக்க 21 நாள் யோகா மற்றும் தியான முகாமில் பங்குகொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முற்றிலும் மாற்றம் பெற்றுவிடும். இந்த தியான முகாமின் மைய நோக்கமே நம் அனைவரிடமும் உள்ள உள்ளாற்றலான குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதுதான். இதன் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும், அதாவது உடல்நலம், செல்வம், உறவுகள், கல்வி, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற நடைமுறைப் பலன்களைப் பெறமுடியும்.

ஆசிரம சூழலில், குருநாதரின் ஸாந்நித்தியத்தில் பங்கேற்பாளர்கள் தியானம், யோகா, சத்சங்கங்கள், சக்தி தரிசனம் (குருநாதர், தம் பார்வை அல்லது தொடுதல் மூலமாக ஆன்ம சக்தியைப் பாய்ச்சுவது) போன்ற அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய அசாதாரணமான விஷயம் எதுவென்றால், உங்களை நீங்களே கண்டுணாந்த தருணங்களும், உங்களுக்குள் நிகழ்ந்த உள்ளுலக உணர்வு மாற்றங்களும்தான்.

உங்களுடைய தனித்தன்மையான இந்த அனுபவங்கள் ... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. மேலும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

IA வில் உள்ளடங்கிய நிகழ்ச்சிகள்:

★உங்கள் உடலின் சக்திமையங்களை வலுப்படுத்தும் தியான முறைகள்

் பிறப்பு இறப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் தியான முறைகள்

மனஅமைப்புகளிலிருந்தும், முன் ஜன்ம சுமைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும் தியான முறைகள்

  • உங்களுடைய அனைத்து உறவுகளிலும் சுதந்திரமாக வாழவைக்கும் தியான முறைகள்

சு செல்வவளத்தை உருவாக்குவது, தக்கவைத்துக் கொள்வது மற்றும் கொண்டாடுவது எப்படி என்கின்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் தியான முறைகள்

உடல் நலத்தையும், மனநலத்தையும், உணர்வு ரீதியான மனரீதியான ஆரோக்கியத்தையும் உள்புகுத்தும் தியான முறைகள்

தொன்மையான ஹீலிங் (குணமளிக்கும்) நுட்பங்களை நீங்களும் அடைவதற்கான வாய்ப்பளிக்கும் தியான முறைகள்

தலைமைப்பண்பை உங்கள் இயல்பான சுய வெளிப்பாடாக ஆக்கிக் கொள்வதற்கான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

உங்கள் நிதர்சன வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக்கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையின் படைப்பாளராக நீங்களே ஆவதற்குமான ஆற்றலளிக்கும் தியான முறைகள்

2011 மற்றும் 2012 - இந்த 2 வருடங்களில் நடைபெற்ற பல ஐஅ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களிடமும் குண்டலினி சக்தி விழிப்படைந்ததனால் அவர்கள் அனுபவித்த அசாதாரணமான மாற்றங்களை முறையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் செய்ததில், ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படையும்போது, மரபணு மாற்றங்கள் மற்றும் உடல்நலம் மீட்பு உள்ளிட்ட உடல் இயக்க மாற்றங்கள் பெருமளவில் நடக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.

"கடந்த 25 வருடங்களாக கடுமையான ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். IA விற்குப் பிறகு ஆஸ்த்மா முற்றிலும் குணமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி க்கு பிறகு என்னுடைய சைனசிட்டிஸ் பிரச்சனையும் 0%க்கு இறங்கியுள்ளது. ஸ்வாமிஜி! மிகவும் நன்றி!'' -அனுராதா ஆறுமுகம்