ஆனந்த சேவை
அன்னதானம்:
'அதிதி தேவோ பவ.'…நாம் இருக்கும் இடத்திற்கு வரும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் ரூபமே எரைம் புரிந்துகொள்ளுதலோடு செயல்படும் நிக்யானந்த தியானபீடத்தின் ஆஸ்ரம அன்னாலயங்கள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சக்தியூட்டப்பட்ட சாத்வீக உணவை வழங்கிவருகிறது. தினந்தோறும் உலகெங்கும் உள்ள தியானபீட அன்னாலயங்களுக்கு வருகைதரும் பொதுமக்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அன்னதானம் பெறுகின்றனர்.
நிக்யானந்த பரம்பரை:
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நிறுவிய உலகளாவிய ஆன்மிக இயக்கமான நிக்யானந்த தியானபீடம் முழுக்க முழுக்க தன்னார்வ ஆனந்த சேவகர்களால் (Ananda Sevak) நடத்தப்படும் இயக்கம். தங்களுடைய வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவுடைய ஆன்மிக ஆர்வலர்கள் தங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு ஆழமான ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலா் சன்யாஸ பாதையைத் தேர்ந்தெடுத்து சன்யாஸிகளாகவும், பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும், வானப்பிரஸ்கர்களாகவும் தீக்ஷ பெற்று நித்யானந்த பரம்பரையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகம், தியானம், சமஸ்கிருதம், வேத உச்சாடனம், வாழ்க்கைக் கல்வி போன்ற பிரிவுகளில் வருடக் கணக்கில் அவரவர்கள் பக்குவத்திற்கேற்ப தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் தியான முகாம்கள் :
சமுதாயத்தில் வன்முறையைக் குறைக்க வேண்டுமென்றால் தனிமனித உள்ளங்களில் படித்திருக்கும் வன்முறையைக் குறைக்க வேண்டும். அவர்களுடைய மனக்காயங்களையும், மன அழுத்தத்தையும் போக்க வேண்டும். தவறு செய்தவர்களும் தண்டனைக்குரியவர்களும் திருந்தி, சமூதாயத்தில் சிறப்பான முறையில் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டால் வன்முறை மனப்பாங்கு குறைக்கப்படும். சிறைச்சாலைகள் மற்றும் சிறார் சீர்த்திருத்த மையங்களில் நித்யானந்த தியானபீடம் தியான முகாம்களை நடத்தி வியப்பளிக்கும் வகையில் கைதிகளின் மன அமைப்பில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மருத்துவ முகாம்கள் :
வாரந்தோறும் தியானபீடம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களில் பயனடைகின்றார்கள். மருத்துவ முகாம்களின் போது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இம் மருத்துவ முகாம்களில் நோய்களின் தன்மை அனுபவமிக்க மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நித்யானந்த ஆசிரியர் பயிற்சி மையம் :
தங்கள் வாழ்வில் ஒரு மேன்மையான உருமாற்றத்தை உருவாக்கிய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆழமான விருப்பம் கொண்டவர்களுக்கு ஆசிரியா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களால் ஆனந்த ஸ்புரண தியான முகாம்கள், அதீத நினைவாற்றல் பயிற்சி முகாம்கள், நித்ய யோக தியான முகாம்கள், ஆரோக்கிய யோக தியான முகாம்கள் மற்றும் ஆன்மிக சாதனைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.